தமிழ்நாட்டில் ஏஐ-இன் வருங்காலம்: கூகுள் உடன் கைடன்ஸ் தமிழ்நாடு நடத்திய 'AI Connect' கருத்தரங்கம்!
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் உள்ள வணிகங்களை செயற்கை நுண்ணறிவு எப்படி ஆயத்தப்படுத்தும் என்பதை பங்கேற்பாளர்கள் விவாதித்தனர். தொழிற்துறைகளில் செயற்கை நுண்ணறிவைத் தழுவுதல் பற்றி கூகுளும் பிற வணிகத்துறை தலைவர்களும் பேசினார்கள்.
கைடன்ஸ் தமிழ்நாடு, கூகுள் உடன் இணைந்து நடத்தப்பட்ட 'AI Connect' கருத்தரங்கம் செயற்கை நுண்ணறிவு திறக்கும் வாசல்களை தமிழகத்தின் முக்கிய தொழிற்துறைகள் எப்படி தழுவிக்கொள்ளப்போகிறது என்பதற்கான வாய்ப்புகளை அலசியது. இந்நிகழ்வில் அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றினார்.
இந்த கருத்தரங்கில் தொழிற்துறை தலைவர்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தில் தமிழகத்தின் வாய்ப்புகளை விவாதித்தனர். இந்த கருத்தரங்கம் மின்னணுவியல், செமிகண்டக்டர், ஆட்டோமோட்டிவ், உற்பத்தி, சேவை மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இடமாக அமைந்தது.
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் உள்ள வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு எப்படி ஆயத்தப்படுத்தும் என்பதை பங்கேற்பாளர்கள் விவாதித்தனர். தொழிற்துறைகளில் செயற்கை நுண்ணறிவைத் தழுவுதல் பற்றி கூகுளும் பிற வணிகத்துறை தலைவர்களும் பேசினார்கள்.
இந்த கலந்துரையாடல் Google மற்றும் Guidance TN ஆகியவற்றுக்கு இடையேயான பரந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். மாநிலத்தில் ஒரு வலுவான AI சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் இதன் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில், அரசுத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் டிஆர்பி ராஜா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், தமிழகம், அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்கி தயார்படுத்தும் பணியில் உறுதியாக உள்ளது என்றார்.
“Google உடனான எங்கள் கூட்டாண்மை, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றதனால் விளைந்த நேரடி விளைவு. தமிழ்நாடு AI-ஆயத்த தொழில்கள் மற்றும் திறமைகளை உருவாக்க நாங்கள் ஒன்றாகச் செயல்படுவதன் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். முன்பு அறிவித்தபடி, நாங்கள் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தைச் சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் AI இல், புதுமை மற்றும் வளர்ச்சியை உந்துவதற்கான திறன்களை அவர்களுக்கு வழங்குதல் இதன் மூலம் சாத்தியமாகும்.
இது போன்ற நிகழ்வுகள் தொழில்துறை-கல்வி கூட்டாண்மைகளை உருவாக்குவதோடு இதன் மூலம் இது நமது இளைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்கவும் உதவும்.
”AI-தொழில்நுட்பம் உற்பத்தி முதல் சுகாதாரம் வரையிலான துறைகளில் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. மாற்றத்தை நிகழ்த்தும் இத்தகைய தொழில்நுட்பத்தை ஏற்று பயன்படுத்துவதில் நாடு முன்னணியில் உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாடு ஒரு உலகளாவிய திறமை மையமாக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வோம். இதன் மூலம் தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்களுக்கு உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்கிறது,” என்றார்.
கூகுள் இந்தியாவின் அதிகாரி ஆனந்த் ரங்கராஜன் கூறும்போது,
“அர்த்தமுள்ள புத்தாக்கம் என்பதற்கு இத்தகைய ஒத்துழைப்பு மிக அவசியமாகும். தொழில்நுட்பத்தை, தொழிற்துறையை புரட்சிகரமாக்கவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவுத் திறனை தமிழ்நாடு கண்டடைய மேற்கொண்ட இத்தகைய கூட்டாண்மையினால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.