Gold Rate Chennai: இரு நாட்களில் ரூ.2,000 சரிவு - தங்கம் விலை வீழ்ச்சி ஏன்?
ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் தடாலடியாக குறைந்து வருவது, நகை வாங்குவோருக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. நேற்றும் இன்றும் சேர்த்து இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 அளவுக்கு தங்கம் விலை குறைந்திருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை மென்மேலும் தடாலடியாக குறைந்து வருவது, நகை வாங்க விழைவோருக்கு இன்ப அதிர்ச்சிகளைத் தந்த வண்ணம் உள்ளது. நேற்றும் இன்றும் சேர்த்து இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,000 அளவுக்கு தங்கம் விலை குறைந்திருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளி விலையும் கடும் சரிவைக் கண்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.160 குறைந்து ரூ.8,400 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,280 குறைந்து ரூ.67,200 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.174 குறைந்து ரூ.9,164 ஆகவும், சவரன் விலை ரூ.1,392 குறைந்து ரூ.73,312 ஆகவும் இருந்தது. இந்த தடாலடி விலை குறைவு தொடர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (5.4.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.90 குறைந்து ரூ.8,310 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.720 குறைந்து ரூ.66,480 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.98 குறைந்து ரூ.9,066 ஆகவும், சவரன் விலை ரூ.784 குறைந்து ரூ.72,528 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (5.4.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.103 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.1,03,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டெழத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கூடுதல் வரிவிதிப்பு, சர்வதேச அளவில் வர்த்தகப் போக்குகளை ஆட்டம் காணச் செய்துள்ளது. குறிப்பாக, பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையில், ஒரு பக்கம் தங்கத்தின் ‘சப்ளை’ அதிகரிப்பதும், இன்னொரு பக்கம் தங்க முதலீடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போதைய திடீர் தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்கின்றனர் சர்வதே வர்த்தக நிபுணர்கள்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,310 (ரூ.90 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,480 (ரூ.720 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,066 (ரூ.98 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,528 (ரூ.784 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,310 (ரூ.90 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.66,480 (ரூ.720 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,066 (ரூ.98 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.72,528 (ரூ.784 குறைவு)
Edited by Induja Raghunathan