இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 27 சதவீத வரிவிதிப்பு!
இந்திய ஏற்றுமதி மீதான இந்த நடவடிக்கை தாக்கம் செலுத்தும், என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மற்ற போட்டி நாடுகளைவிட அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள இந்தியா ஏற்ற நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி மீதான இந்த நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மற்ற போட்டி நாடுகளைவிட அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்ள இந்தியா ஏற்ற நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக நாடுகளால் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிக்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 60 நாடுகள் மீது பதில் வர்த்தக வரியை அறிவித்துள்ளார்.
"இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர நாள். 2025, ஏப்ரல் 2 அமெரிக்க தொழில் துறை மீண்டும் பிறந்த நாளான நீண்ட காலம் நினைவில் கொள்ளப்படும். அமெரிக்காவின் எதிர்காலம் மீண்டும் பெறப்பட்ட நாளாக, அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு பெறச்செய்த நாளாக நினைவில் கொள்ளப்படும். அமெரிக்காவை நாம், செல்வ செழிப்பு மிக்க நாடாக, நல்ல நாடாக உருவாக்குவோம்,” என வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மோட்டார் வாகனங்களுக்கு அமெரிக்கா, மற்ற நாடுகளில் இருந்து 2.4 சதவீத வரி மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், தாய்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன. 60 சதவீதம், இந்தியா 70 சதவீதம், வியட்னாம் 75 சதவீதம் மற்ற நாடுகள் இன்னும் அதிகமாக வர்த்தக வரி விதிக்கின்றனர், என்றார்.
வர்த்தக வரியை அறிவிக்கும் போது, இந்தியா, சீனா, யூகே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரி மற்றும் இந்த நாடுகள் இனி செலுத்த வேண்டிய வரியை உணர்த்தும் வரைபடத்தை அவர் காண்பித்தார்.
இந்தியா 52 சதவீத வர்த்தக வரி விதிப்பதாக இந்த வரைபடம் தெரிவித்தது. இப்போது அமெரிக்கா சற்று குறைவாக 26 சதவீத வரி விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், வெள்ளை மாளிகை ஆவணங்கள் இந்தியா மீதான வரி 27 சதவீதம் என தெரிவிக்கின்றன.
"இந்தியா மிகவும் கடினமாக இருக்கிறது. பிரதமர் இப்போது வந்துவிட்டு சென்றார். அவர் என் நல்ல நண்பர். நீங்கள் எனது நண்பர் ஆனால் நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை, என கூறினேன். நீங்கள் எங்களிடம் 52 சதவீத வரி வாங்குகிறீர்கள். பல ஆண்டுகளாக, பல காலமாக நாங்கள் இந்த நாடுகளிடம் எந்த வரியும் விதிக்கவில்லை. ஆனால், நான் பதவிக்கு வந்த பின், ஏழு ஆண்டுகளுக்கு முன் தான், சீனாவில் இருந்து இது துவங்கியது,” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு கலவையானது, பின்னடைவு அல்ல என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும் 27 சதவீத இறக்குமதி வரியின் தாக்கத்தை வரத்தக அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். எப்ரல் 5ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான அனைத்து இறக்குமதியிலும் 10 சதவீத வரி பொருந்தும் என்றும், இந்தியா 27 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சகம் வரி தாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகக் கூறியவர், அமெரிக்காவின் கவலையை கருத்தில் கொண்டு செயல்பட்டால் குறிப்பிட்ட நாடு மீது மீண்டும் வரி குறைக்கப்படும் வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா ஏற்கனவே அமெரிக்காவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விவாதித்து வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் முதல் கட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளனர். இந்த அறிவிப்பு இரண்டும் கலந்தது, இந்தியாவுக்கு பின்னடைவு அல்ல என அந்த அதிகாரி கூறினார். இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு, வரி விதிப்பு உள்ளூர் நிறுவனங்களை பாதிக்கும் என்றாலும், வரத்தக ஒப்பந்ததை இறுதி செய்வது நிவாரணம் அளிக்கும், என தெரிவித்துள்ளது.
"பாதிப்பை நாம் ஆராய வேண்டும்,. ஆனால், நாடுகள் மீதான பதில் வரியை பார்க்கும் போது நமக்கு குறைந்த வரியே விதிக்கப்பட்டுள்ளது. வியட்னாம், இந்தோனேசியா, சீனா போன்ற போட்டி நாடுகளை விட நாம் நல்ல நிலையில் தான் உள்ளோம்,” என்று கூட்டமைப்பின் இயக்குனர் ஜெனரல் அஜய் சஹானி தெரிவித்தார்.
2021 முதல் 2024 வரை இந்தியா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இருந்தது. இந்தியாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் அமெரிக்கா 18 சதவீத பங்கு வகிக்கிறது.
இறக்குமதியில் 6.22 சதவீதம் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீத பங்கு வகிக்கிறது.
அமெரிக்காவுடன் இந்தியா 2023-14 ல், 35.32 பில்லியன் டாலராக வர்த்தக உபரி கொண்டிருந்தது. 2022-23ல் இது 27.7 பில்லியன் டாலராக இருந்தது. 2020-21 ல்- 22.73 பில்லியன் டாலர் மற்றும் 2019-20 ல், 17.26 பில்லியன் டாலர்.
2024ல் அமெரிக்காவுக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியாக, மருந்து அமைப்புகள் மற்றும் உயிரி பொருட்கள் ($8.1 பில்லியன்), தொலைத்தொடர்பு பொருட்கள் ($6.5 பில்லியன்), அரிய வகை கற்கள் ($5.3 பில்லியன்), பெட்ரோலியம் பொருட்கள் ($4.1 பில்லியன் ), தங்க, வெள்ளி நகைகள் ($3.2 பில்லியன் ), ஆயுத்த ஆடைகள் ($2.8 பில்லியன்), எஃகு பொருட்கள் ($2.7 பில்லியன்) ஆக உள்ளன.
இறக்குமதி: கச்சா எண்ணெய்- ($4.5 பில்லியன்), பெட்ரோலியம் பொருட்கள் ($3.6 பில்லியன்), நிலக்கரி, கோக் ($3.4 பில்லியன்), வைரங்கள் ($2.6 பில்லியன்), மின்னணு சாதனங்கள் ($ 1.4 பில்லியன்), விமானம், விண்வெளி பொருட்கள் ($1.3 பில்லியன்), தங்கம் ($1.3 பில்லியன்).
செய்தி –பிடிஐ
Edited by Induja Raghunathan