8 மில்லியன் டாலர் நிதி திரட்டியது சென்னை Sweet Karam Coffee நிறுவனம்!
சென்னையை தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம் இந்த நிதியை, அனைத்து சேனல் சார்ந்த விரிவாக்கம், புதிய பொருட்கள் உருவாக்கம், சப்ளை செயின் மேம்பாடு, பிராண்ட் இருப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
தென்னிந்திய உணவு பிராண்டான, 'ஸ்வீட்காரம்காபி' (Sweet Karam Coffee), ஏ சுற்று நிதியாக பீக் எக்ஸ்வி பாட்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 8 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள முதலீட்டாளர் ஃபயர்சைடும் இதில் பங்கேற்றது.
சென்னையை தலைமையகமாக கொண்ட டி2சி நிறுவனம் இந்த நிதியை, அனைத்து சேனல் சார்ந்த விரிவாக்கம், புதிய பொருட்கள் உருவாக்கம், சப்ளை செயின் மேம்பாடு, பிராண்ட் இருப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
"இதற்கு முன் இல்லாத வகையில் குவிக் காமர்ஸ், விநோயகத்தை இணைத்து வருகிறது. கலாச்சாரங்கள் ஒன்றாக கலப்பதை பார்க்கிறோம். எங்கள் பொருட்கள் தென்னகத்தில் மட்டும் அல்ல நாடு முழுவதும் விரும்பப் படுகின்றன. முதல் நாளில் இருந்து பாம் ஆயில் பயன்படுத்தாமல் இருக்கிறோம்,” என்று ஸ்வீட் காரம் காபி இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.நளினி பார்த்திபன் கூறியுள்ளார்.

2015ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், பலவகை தென்னிந்திய இனிப்புகள், ஸ்னாக்ஸ், உடனடி உணவு வகைகளை வழங்குகிறது, இவை செயற்கை பதப்படுத்தல் மற்றும் பாம் ஆயில் இல்லாதவை.
தற்போது இந்த பிராண்ட் 32 நாடுகளில் உள்ளது மற்றும் 2500 குவிக் காமர்ஸ் டார்க் ஸ்டோர்ஸ் மூலம் கிடைக்கிறது. கடந்த 12 மாதங்களில் 4 மடங்கு வருவாய் வளர்ச்சி கண்டுள்ள நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் 2.5 மடங்கு வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளது.
விரிவாக்க முயற்சிகள் தவிர, நிறுவனம் முன்னாள் யூனிலீவர் அதிகாரி நந்திதா இந்தர்மோகனை முதன்மை செயல்பாடு அதிகாரியாக நியமித்துள்ளது.
"ரூ.25 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள தென்னிந்திய உணவு மற்றும் ஸ்னாக்ஸ் பிரிவு, வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மாற்றமடைந்து வருகிறது. அமைப்பு சாரா நிலையில் இருந்து நிறுவனங்கள், சிறந்த பொருட்களுக்கான எதிர்பார்ப்பு, நவீன சேனல்களில் விரிவாக்கம் எனும் மாற்றங்கள் ஸ்வீட் காரம் காபி போன்ற பிராண்ட்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது," என Peak XV Partners அபிஷேக் மோகன் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan