Gold Rate Chennai: தொடரும் உயர்வு! தங்கம் வாங்குவோரை கலக்கத்தில் ஆழ்த்திய விலை...
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம் காணத் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு போக்கு தொடரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 சரிந்து ரூ.8,020 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.64,160 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 சரிந்து ரூ.8,749 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.69,992 ஆகவும் இருந்தது. தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (12.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.8,065 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.360 உயர்ந்து ரூ.64,520 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 உயர்ந்து ரூ.8,798 ஆகவும், சவரன் விலை ரூ.392 உயர்ந்து ரூ.70,384 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (12.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.109 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2000 உயர்ந்து ரூ.1,09,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார முடக்கம் தொடர்பான அச்சம் காரணமாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் மீண்டும் தங்கத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு தொடரலாம் என்று அஞ்சப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,065 (ரூ.45 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,520 (ரூ.360 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,798 (ரூ.49 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.70,384 (ரூ.392 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan