30 ரூபாயுடன் மும்பைக்கு வந்த வீரல் படேல் இன்று 13 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் சுவைமிகு கதை!
தன் பாக்கெட்டில் வெறும் 35 ரூபாயுடன் மும்பைக்கு வந்திறங்கிய வீரல் படேல் இன்று ரூ.13 கோடி மதிப்புள்ள ‘கவுரவ் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புச் சங்கிலித் தொடர் கடைகளின் உரிமையாளர்!
நம்மில் பலரும் வகுப்பில் ஆசிரியர் இது போன்ற கதையைக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சொந்த ஊரிலிருந்து காசில்லாமல் புறப்பட்டு வெளியூர் சென்று அங்கு வர்த்தகத்திலோ அல்லது வேறு துறைகளிலோ பெரிய ஆளாக ஆனதைப் பற்றி ஆசிரியர்கள் வகுப்பறையில் கதைப்பதைக் கேட்டிருக்கிறோம். அது போன்ற ஒரு வெற்றிக்கதைதான் வீரல் படேல் என்பவரது கதையும்.
தன் பாக்கெட்டில் வெறும் 35 ரூபாயுடன் மும்பைக்கு வந்திறங்கிய வீரல் படேல் இன்று ரூ.13 கோடி மதிப்புள்ள ‘கவுரவ் ஸ்வீட்ஸ்’ (Gaurav Sweets) என்ற இனிப்புச் சங்கிலித் தொடர் கடைகளின் உரிமையாளர்!
எளிமையான தொடக்கம்:
1982-ஆம் ஆண்டு கண்களில் பெரிய கனவுகளுடன் பாக்கெட்டில் சிறிய தொகையுடன் மும்பையில் வந்திறங்கினார் வீரல் படேல். இதற்காக இவரது தந்தை ரூ.100 கடன் வாங்கி இவரிடம் சிறிய தொகையைக் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. சாலையோர உணவுக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். இதில் அவருக்கு வருமானம் இல்லாவிட்டாலும் மூன்று வேளை சாப்பாடு அவருக்கு கிடைத்தது.
பின்னர், அந்த வேலையை விட்டுவிட்டு நோட்டுப் புத்தகம் விற்கும் ஸ்டேஷனரி கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவரது வேலைக்குக் கிடைத்த அங்கீகாரத்தினால் மாதம் ரூ.250 சம்பளமாகக் கிடைத்தது. ஸ்டேஷனரி கடையில் வீரல் படேலின் கடின உழைப்பைக் கண்ட இவரது உறவினர் ஒருவர் 1985-ம் ஆண்டு தானேயில் ஒரு ஸ்டேஷனரி கடையைத் தொடங்கி வீரலை அதில் பொறுப்பு வகிக்குமாறு நியமித்தார். இதுதான் தொழில்முனைவுக்கான இவரது முதல் படி.
‘கவுரவ் ஸ்வீட்ஸ்’ ஆரம்பம்!
வீரல் படேல் வாழ்க்கையில் 2004-ஆம் ஆண்டு ஓர் இனிப்பான தொடக்கமாக அமைந்தது. ரூ.30 லட்சம் முதலீட்டில் ‘கவுரவ் ஸ்வீட்ஸ்’ என்ற தொழில் தொடங்கப்பட்டது. வீரல் படேலின் மகன்தான் கவுரவ். வெற்றி தொலைவில் இல்லை என்பது அப்போதே தெரிந்தது. இந்தக் கடை விரைவில் லாபம் ஈட்டத் தொடங்கியது. 15 ஆண்டுகளில் மும்பை முழுவதும் 6 விற்பனை நிலையங்களாக விரிவடைந்தது, ஒவ்வொன்றும் 300 வகையான ருசிகரமான இனிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பிரபலமடைந்தது.
‘கவுரவ் ஸ்வீட்ஸ்’ அதன் சுவையான வெரைட்டிகளுக்குப் பெயர் பெற்றது. உலர் பழங்கள் முதல் சர்க்கரை இல்லாத இனிப்புகள் முதல் பெங்காலி இனிப்புகள் மற்றும் கிரீமி ஸ்ரீகண்ட், ரப்டி மற்றும் பாசந்தி வரை, மக்கள் நாவிக்கு ஏற்ற சுவைகளில் இனிப்புகளைக் கொண்டு வ்ந்து கொட்டியது.
வாயில் உமிழ்நீர் ஊறவைக்கும் ஸ்நாக்ஸ் மற்றும் சாட் ஐட்டங்களையும் வழங்குகிறது ‘கவுரவ் ஸ்வீட்ஸ்’. கடைக்கு நேரில் வர முடியாதவர்கள் இந்த சுவையான இனிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வருவித்துக் கொள்ளலாம்.
கடின உழைப்பின் பலன்
வெறும் 35 ரூபாயில் தொடங்கி, 13 கோடி ரூபாய் வர்த்தகத்தை நோக்கிய வீரலின் பயணம், கந்தல் வாழ்க்கையிலிருந்து செல்வச் செழுப்புக்கு முன்னேறியதன் காவியக் கதையாகும். அந்த அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உண்மையில் பலனளிக்கிறது என்பதற்கு உதாரணமே வீரல் படேல்.
வீரலின் வெற்றிக் கதை என்பது கடின உழைப்பு, பொறுமை மற்றும் வணிக புத்திசாலித்தனத்தின் வலிமைக்கு ஓர் ஒளிரும் சான்று!
அவரின் வாழ்க்கைப் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் ஈடு இணையற்ற வெற்றியின் வண்ணங்களால் வரையப்பட்ட கதை. சாலையோர உணவகத்தில் உதவி செய்பவர் முதல் பரந்து விரிந்த இனிப்புக் கடை சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளர் வரை, அவரது பயணம் கனவு காண்பவர்களுக்கும், கனவை அடைய செயல்படவும் ஊக்கமளிக்கிறது.
எனவே, அடுத்த முறை நீங்கள் இனிப்பு விருந்தை அனுபவிக்கும்போது, வீரலின் வெற்றிக் கதையை நினைவில் வையுங்கள் - உங்களது ஒவ்வொரு இனிப்புக் கடியிலும் அந்த நினைவு கூடுதல் மகிழ்ச்சியை சேர்க்கும் என்பது உறுதி!
மூலம்: Nucleus_AI
முதலீடு ரூ.3 லட்சம்; வர்த்தகம் ரூ.50 கோடி - ‘கிச்சடி எக்ஸ்பிரஸ்’ சக்சஸ் ‘மாடல்’ கதை!
Edited by Induja Raghunathan