Gold Rate Chennai: வார இறுதியிலும் ‘ஷாக்’ - தங்கம் விலை ரூ.63,500-ஐ கடந்து உச்சம்!
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கடும் விலை உயர்வு கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வார இறுதியிலும் புதிய உச்சத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே கடும் விலை உயர்வு கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வார இறுதியிலும் புதிய உச்சத்தில் நிலை கொண்டுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.63,500-ஐ கடந்திருப்பது நகை வாங்க விரும்புவோருக்கு கவலையைக் கூட்டியுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,930 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.63,440 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,651 ஆகவும், சவரன் விலை ரூ.69,208 ஆகவும் மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (8.2.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,945 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 அதிகரித்து ரூ.63,560 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.8,667 ஆகவும், சவரன் விலை ரூ.128 அதிகரித்து ரூ.69,336 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (8.2.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,07,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள், மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவு வரி குறைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,945 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,560 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,667 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,336 (ரூ.128 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,945 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,560 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,667 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,336 (ரூ.128 உயர்வு)
Edited by Induja Raghunathan