வந்தாச்சு பல் சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் - ஸ்டார் ஹெல்த் உடன் Toothlens ஸ்டார்ட்-அப் இணைந்து வழங்கும் கேஷ்லெஸ் டென்டல் காப்பீடு திட்டம்!
டூத்லென்ஸ் நிறுவனம், ஸ்டார் ஹெல்த் - அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் விஸா புரோகிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் கேஷ்லெஸ் டெண்டல் ஓபிடி காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
'Toothlens' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், ஸ்டார் ஹெல்த், அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் விஸா புரோகிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் கேஷ்லெஸ் டென்டல் ஓபிடி காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ காப்பீட்டின் கீழ், பல் சிகிச்சையை கொண்டு வரும் வகையில் இது அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான இந்தியர்கள், ஏற்கக் கூடிய செலவிலான பல் சிகிச்சையை அணுக முடியாமல் இருப்பதாக கருதபப்டுகிறது. இதன் காரணமாக செலவு அதிகரிக்கிறது. உலக அளவில் 3.5 பில்லியன் மக்கள் பல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களை மிகவும் பாதிக்கிறது.

இந்நிலையில், டூத்லென்ஸ் என்ற நிறுவனம், ஸ்டார் ஹெல்த், அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் விஸா புரோகிங் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் கேஷ்லெஸ் டெண்டல் ஓபிடி (Cashless dental opd) காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
“டிஜிட்டல் டென்டல் காப்பீடு திட்டங்களை நிர்வகிப்பதில் எங்களுக்கு உள்ள அனுபவம் காரணமாக, இந்தியர்கள் பல் சிகிச்சையை நாடும் விதத்தை மாற்றி அமைக்க விரும்புகிறோம். இந்த திட்டம், வழக்கமான செக்கப், மேம்பட்ட சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது,” என்று டூத்லென்ஸ் நிறுவன சி.இ.ஓ.டாக்டர்.மனோஜ் ராஜன் கூறினார்.
விஸா புரோகிங் சர்வீசஸ், இந்த காப்பீடு பரவலாக சென்றடைய தேவையான முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. சீரான விநியோகம் மற்றும் எளிதான அணுகல் வசதியை அளிக்கிறது.
“இந்திய சுகாதார பரப்பில் டென்டல் காப்பீடு ஒரு இடைவெளியாக இருந்தது. இந்த கூட்டு அதை ஈடு செய்கிறது,” என விஸா புரோகிங் சர்வீசஸ் முதன்மை அதிகாரி ரங்கநாதன் தெரிவித்தார்.
“ஸ்டார் ஹெல்தில், பல் சிகிச்சை தனிநபர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய நிதி சுமையை அறிந்திருக்கிறோம். காப்பீடு இடைவெளியை போக்கி, பல் நலன் சார்ந்த சிகிச்சையை அனைவருக்கும் சாத்தியமாக்கும் முயற்சியாக இந்த கூட்டு அமைகிறது,“ என ஸ்டார் ஹெல்த் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராய் கூறினார்.
டூத்லென்ஸ், ஸ்டார் ஹெல்த், விஸா புரோகிங் சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும் கேஷ்லெஸ் டென்டல் ஓபிடி காப்பீடு சேவை கீழ் கண்ட அம்சங்களை கொண்டுள்ளது.
- வழக்கமான செக்கப், தொலைபேசி ஆலோசனை, எக்ஸ்-ரே
- அடிப்படை சிகிச்சைகள்
- மேம்பட்ட சிகிச்சைகள்
இந்த மாதிரியை இந்தியா முழுவதும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் டென்டல் கிளினிக்களை சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.
டூத்லென்ஸ் நிறுவனம், காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து டிஜிட்டல் காப்பீடு வசதியை வழங்கி வருகிறது. மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் மூலம், கிளைம் செயல்முறை, சிகிச்சை நலன் உள்ளிட்டவற்றை சீராக்கி வருகிறது.
Edited by Induja Raghunathan