உலகின் டாப் 5 பணக்காரர்களின் கல்விப் பின்புலம் என்ன தெரியுமா?
எலான் மஸ்க், பெர்னார்டு அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் கல்விப் பின்புலம் பற்றி அறியலாம் வாருங்கள்.
உலகின் டாப் 5 பணக்காரர்களை உருவாக்க உதவிய கல்விப் பின்புலம் மற்றும் முக்கியமான கற்றல் அனுபவங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 2024 நிலவரப்படி, உலகின் டாப் ஐந்து பணக்காரர்களான எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்டு, ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர்களது மொத்த சொத்து மதிப்பு $869 பில்லியன். அவர்களின் கல்விப் பின்னணி, நிகர மதிப்புகள், அவர்களின் கல்வி அவர்களின் வெற்றியை எவ்வாறு தீர்மானித்தன என்பதைப் பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்:
எலான் மஸ்க்:
$227.8 பில்லியன் நிகர மதிப்புடன், எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மேலும், சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தையும் இவர் வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அங்கு அவர் இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் இரண்டு இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார். இயற்பியல் மற்றும் பொருளாதாரத்தில் மஸ்கின் கல்விப் பின்னணி, தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தில் அவரது ஆரம்ப கால முயற்சிகளில் தெளிவாகப் பங்கு வகித்துள்ளது.
பெர்னார்டு அர்னால்ட்:
பெர்னார்டு அர்னால்ட் $175.1 பில்லியன் நிகர மதிப்புடன், உலகின் மிகப் பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH-இன் CEO மற்றும் தலைவர் ஆவார்.
உலகப் புகழ்பெற்ற பொறியியல் மேற்படிப்பு கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரான்சில் உள்ள École Polytechnique-இல் பட்டம் பெற்றார் பெர்னார்டு அர்னால்ட். அவரது கல்விப் பின்புலம் அவரது வணிக புத்திசாலித்தனத்துக்கு பங்களித்துள்ளது. குறிப்பாக, ஆடம்பர பிராண்டுகளின் பரந்த தொகுப்பை நிர்வகிப்பதில் அவரது கல்வி அவருக்குப் பயன்பட்டிருக்கலாம்.
ஜெஃப் பெசோஸ்:
அமேசானின் நிறுவனரான ஜெஃப் பெஸோசின் நிகர மதிப்பு $174 பில்லியன். பெசோஸ் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். ஆரம்பத்தில் ஆன்லைன் புத்தகக் கடையாக இருந்த அமேசானை உருவாக்கி, உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமாக மாற்றுவதில் அவரது தொழில்நுட்பப் பின்னணி முக்கியமாக அமைந்தது.
லாரி எலிசன்:
$133 பில்லியன் நிகர மதிப்புடன் (ஜனவரி 2024 வரை), எலிசன் ஆரக்கிள் கார்ப்பரேஷனை இணைந்து நிறுவினார். அவர் அர்பானா - சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆனால், தனது பட்டப்படிப்பை முடிக்கவில்லை. முறையான கல்வியை முடிக்கவில்லை என்றாலும், கணினி வடிவமைப்பு மற்றும் நிரலாக்கத்தில் எலிசனின் சுருக்கமான கல்வி வெளிப்பாடு அவரது பிற்கால வெற்றியில் முக்கியமான பங்கு வகிக்கித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மார்க் ஜுக்கர்பெர்க்:
மெட்டா பிளாட்ஃபார்ம்களின் (முன்பு ஃபேஸ்புக்) சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் $130 பில்லியன் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் உளவியல் படிப்பை படித்தவர். ஹார்வர்டில் ஸக்கர்பெர்க் குறைந்த காலமே செலவிட்டாலும் அவர் ஃபேஸ்புக்கை உருவாக்கியது கல்லூரிப் பருவத்தில்தான் என்பது ஆச்சரியமான உண்மை.
இந்த ஐந்து மாபெரும் உலக செலவந்தர்கள் வெற்றியில் கல்வி கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. கல்வி அடிப்படை அறிவை வழங்குவதன் மூலமோ அல்லது அவர்களின் சிந்தனைகளை வளர்ப்பதற்கான சூழலை வழங்குவதன் மூலமோ ஒரு முக்கியப் பங்காற்றியிருப்பதை மறுக்க முடியாது.
தனிப்பட்ட உந்துதல், புதுமையான சிந்தனை மற்றும் வாய்ப்புகளைத் தேடிச்செல்லுதல், வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் இறுகப் பற்றுதல் போன்ற காரணிகள் வெற்றிக்கு முக்கியமானவை .
இந்த நபர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணங்கள் மற்றும் தனிப்பட்ட வளரும் சூழ்நிலைகள், அவர்களை செல்வந்தர்கள் தரவரிசையில் முன்னிலையில் தள்ளியது என்பது முக்கியமானது.
மூலம்: Nucleus_AI
Motivational Quote | 'விழுந்தாலும் எழுவதிலேயே இருக்கிறது வாழ்வின் மகத்துவம்!'
Edited by Induja Raghunathan