இனி உங்கள் அபிமான பிரபலங்களின் WhatsApp சேனலில் இணைந்து உடனடி அப்டேட்களை பெற சூப்பர் வசதி அறிமுகம்!
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் வாட்ஸ்அப் மற்றொரு படி முன்னேறியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் சில கோடி பயனாளர்களை சொந்தமாக வைத்து அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்அப், சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல் என்ற பெயரில் மற்றொரு மேம்பட்ட வசதியை உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் வாட்ஸ்அப் மற்றொரு படி முன்னேறியுள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் சில கோடி பயனாளர்களை சொந்தமாக வைத்து அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்அப், சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல் என்ற பெயரில் மற்றொரு மேம்பட்ட வசதியை உருவாக்கியுள்ளது.
வாட்ஸ்அப் சேனல்:
பிரபல மெசஞ்சர் செயலியான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் அசத்தலான புதிய அறிவிப்பை வெளியிடவுள்ளது.
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளில் இந்த வாட்ஸ்அப் சேனல் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த புதிய வாட்ஸ்அப் சேனல் அம்சம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனியுரிமையை சமரசம் செய்யாமல் சமீபத்திய புதுப்பிப்புகளைப் பெற உதவும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பிரபலங்களுடன் இணைப்பு:
பிரபலங்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை வாட்ஸ்அப் சேனல் மூலம் தாங்கள் பின்தொடர்பவர்கள் மற்றும் குழுக்களிடம் நேரடியாகச் சொல்ல முடியும்.
அதாவது, பிரபலங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு வரும் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் போலவே வாட்ஸ்அப் சேனலும் முக்கியப் பங்கு வகிக்கும். மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ள இந்த வாட்ஸ்அப் சேனல்கள் அம்சம் விரைவில் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடையும் எனக் கருதப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இதுபோன்ற வசதி உள்ளது. வாட்ஸ்அப்பின் முக்கியப் போட்டியாளரான டெலிகிராமிலும் இந்த வசதி உள்ளது.
அரசுத் தலைவர்கள், அமைப்புகள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள், இந்த புதிய வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தின் மூலம் எந்தவொரு தலைப்பிலும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஏற்கனவே அக்ஷய் குமார், விஜய் தேவரகொண்டா, கத்ரீனா கைஃப், தில்ஜித் தோசன்ஜ், நேஹா கக்கர் போன்ற சில பிரபலங்கள் தங்கள் சொந்த வாட்ஸ்அப் சேனல்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையும், தொழிலதிபருமான கத்ரீனா கைஃப் கூறுகையில்,
“வாட்ஸ்அப் சேனல்களை தொடங்குவதற்கு வாட்ஸ்அப்புடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் எனது வாழ்வின் பல்வேறு அம்சங்களில் ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்திருக்க எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது. வாட்ஸ்அப் சேனல்கள் தனிப்பயனாக்கப்பட்ட செய்திமடலாக செயல்படுகின்றன, இதன் மூலம் எனது அர்ப்பணிப்புள்ள பார்வையாளர்கள், ரசிகர்கள் மற்றும் எனது பயணம் முழுவதும் தொடர்ந்து ஆதரவைக் காட்டிய அனைவருடனும் அவ்வப்போது அப்டேட்களை பகிர்ந்து கொள்ள முடியும்,” என்றார்.

வாட்ஸ்அப் சேனல்கள் அறிமுகம் குறித்து பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா கூறுகையில்,
“இன்று வாட்ஸ்அப்பில் எனது சேனலை தொடங்குகிறேன். சில சிறந்த ஸ்னீக் பீக்குகள், திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யங்கள், நாடு முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் ரசிகைகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இது ஒரு செய்தியை அனுப்புவது போல் எளிமையானது,” எனக்கூறியுள்ளார்.
பயன்படுத்துவது எப்படி?
- வாட்ஸ்அப் சேனல் அம்சத்திற்காக வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் டேப்பைப் போலவே அப்டேட்ஸ் என்ற புதிய டேப் தோன்றும்.
- சாட்டிங், ஸ்டேட்டஸ் மற்றும் அழைப்புகள் டேப்பிற்கு அருகில் அல்லது நடுவில் ஒரு புது டேப் தோன்றும்.
- இது விரைவில் iOS மற்றும் Android பயனர்களுக்கும் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
- மேம்படுத்தப்பட்ட கோப்பகம் (Enhanced Directory) - பயனர்கள் தானாகவே தங்களது நாட்டின் அடிப்படையில் சேனல்களை பின்தொடரலாம். அதேபோல் புதிய, அதிக பாலோயர்களைக் கொண்ட மற்றும் பிரபலமான சேனல்களையும் காண முடியும்.
- ரியாக்ஷன்ஸ் (Reactions) - நீங்கள் எமோஜிகளைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கலாம் மற்றும் அதேபோல் கமெண்ட்களின் எண்ணிக்கையைப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் என்ன மாதிரி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பது பிற பாலோயர்களுக்கு காண்பிக்கப்படமாட்டது.
- எடிட்டிங் (Editing) - வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகள் தங்கள் அப்டேட்களில் 30 நாட்கள் வரை மாற்றங்களைச் செய்ய முடியும்.
- ஃபார்வர்டு (Forwarding) - நீங்கள் சாட்டிங் அல்லது குரூப்-களுக்கு அப்டேட்டை அனுப்பும் போதெல்லாம், சேனலுக்கான லிங்கும் சேர்த்து அனுப்பப்படும். இதன் மூலம் உங்களுக்கு வாட்ஸ்அப் சேனல் இருப்பதை பயனர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.
வாட்ஸ்அப் சேனல் பயன்கள்:
வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் அதிகமான பயனர்களுடன் அப்டேட்களைப் பகிரலாம். பயனர்கள் தங்களுக்குப் பிடித்த உள்ளடக்க படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சேனல்களை தேடலாம். இந்த சேனல்கள் பிரபலங்கள், வணிகம் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு சொந்தமானதாக இருக்கும். இதன் மூலமாக வாட்ஸ்அப் பயனர்கள் சேனல் உரிமையாளர் அனுப்பிய புதுப்பிப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கலாம்.
வாட்ஸ்அப் பயனர்களுடன் தங்கள் நிறுவனம் தொடர்பான புதிய அம்சங்கள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலையும் தொடங்கியுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பான அப்டேட்கள் இந்த சேனல் மூலம் நேரடியாக வாட்ஸ்அப் பயனர்களை சென்றடையும்.

பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?
- சரியான அழைப்பு லிங்க் மூலமாக அனைத்து பயனர்களும் WhatsApp சேனல்களில் சேரலாம். பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க, சேனல் உருவாக்கியவரின் ஃபோன் எண்ணை ஆப்ஸ் வெளிப்படுத்தாது. அவர்கள் ஒரே சேனலில் இருந்தாலும் மற்றவர்களின் ஃபோன் எண்ணைப் பார்க்க முடியாது. மேலும், வாட்ஸ்அப் சேனல் உரிமையாளருக்குத் தெரியாமல் தொலைபேசி எண்களை மறைக்கிறது.
- வாட்ஸ்அப் சேனல்கள் நிர்வாகிகள் உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்களைப் பகிர மற்றும் பின்தொடர்பவர்களின் தனியுரிமையை சமரசம் செய்யாமல் கருத்துக் கணிப்புகளை நடத்த அனுமதிக்கின்றன.
- வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் அனுப்பப்படும் செய்திகள் 30 நாட்களுக்கு காட்டப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சேனல் உறுப்பினர்கள் உரிமையாளர் செய்திகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும். பதில் சொல்ல முடியாது.
- சேனலில் அனுப்பப்படும் செய்திகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இல்லை.
- ஆனால், நேரடிச் செய்திகள், குழு அரட்டைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்ட், லிங்க்ஸ் போன்ற அனைத்து வகையான தகவல்தொடர்புகளும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும்.