Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கட், காபி, பேஸ்ட் கன்ட்ரோல்களை கண்டுபிடித்த கம்ப்யூட்டர் மேதை மறைவு!

கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி இருக்கும் எண்ணற்ற கட்டளைகளைக் கண்டுபிடித்த லார் டெஸ்லர் 74வது வயதில், மறைந்தார்.

கட், காபி, பேஸ்ட் கன்ட்ரோல்களை கண்டுபிடித்த கம்ப்யூட்டர் மேதை மறைவு!

Friday February 21, 2020 , 3 min Read

லாரி டெஸ்லரை (Larry Tesler) நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த கண்டுபிடிப்பை தெரிந்து கொண்டால், டெஸ்லருக்கு மனதுக்குள் நன்றி சொல்வீர்கள்.


‘கட், காபி, பேஸ்ட்’ கட்டளை தான் அந்த கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டரில் டைப் செய்த உள்ளடக்கத்தை, அதே கம்ப்யூட்டரில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லத் தவறாமல் பயன்படுத்தப்படும் உத்தி இது.

Larry Tesler

கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி இருக்கும் எண்ணற்ற கட்டளைகளில் இன்றிமையாத ஒன்றாகத் திகழும் இந்த கட், காபி, பேஸ்ட் வசதியை கண்டுபிடித்தவராக அறியப்படும் லார் டெஸ்லர் தனது 74 வது வயதில், மறைந்தார்.


புகழ்ப் பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஜெராக்ஸ் ஆய்வு மையத்தில் இருந்த காலத்தில் தான் இந்த கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தினார்.

ஜெராக்ஸ் அஞ்சலி

டெஸ்லர் மறைவை ஒட்டி, ஜெராக்ஸ் நிறுவனம் வெளியிட்ட நினைவு குறும்பதிவில்,

“கட், காபி & பேஸ்ட் மற்றும் ஃபைண்ட் & ரீப்ளேஸ் போன்ற பலவற்றை கண்டுபிடித்தவர் ஜெராக்சின் முன்னாள் ஆய்வாளர் லாரி டெஸ்லர். உங்கள் பணி நாள் அவரது புரட்சிகரமான ஐடியாக்களால் தான் எளிதாகி இருக்கிறது. திங்கள் அன்று லாரி இறந்தார். அவரது மறைவைக் கொண்டாடுவதில் எங்களுடன் இணையுங்கள்,” என்று தெரிவித்துள்ளது.


கம்ப்யூட்டரில் இருக்கும் விசைகள் போல, கட், காபி, பேஸ்ட் உத்தியும் வெகு இயல்பாக மாறிவிட்டதால், இதன் முக்கியத்துவத்தை நம்மில் பலர் உணர்வதில்லை. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை மனதில் கொண்டு பார்த்தால், இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை உணரலாம்.


சொல்லப்போனால், கட், காபி, பேஸ்ட் உத்தி, காகித உலகில் இருந்து நகலெடுக்கப் பட்டதாகும். கம்ப்யூட்டருக்கு முந்தைய காலகட்டத்தில், பதிப்புலகில், ஓரிடத்தில் உள்ள தகவலை கத்திரிகோலால் துண்டித்து அடுத்து, அதைத் தேவையான இடத்தில் ஓட்டுவது வழக்கம். இதற்கு என்று பிரத்யேகமான நீண்ட கத்திரிகோள்கள் கூட விற்பனை செய்யப்பட்டன.

கட், காபி, பேஸ்ட் வரலாறு

பின்னர், கம்ப்யூட்டர் காலத்தில் இதே உத்தி, கம்ப்யூட்டருக்குள் உள்ளட்டகத்தை இடம் மாற்ற பயன்பட்டது. ஆனால் இது சிக்கலான செயல்பாடாக இருந்தது. இதற்கான ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கட்டளை செயல்பாடு தேவைப்பட்டது.


ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் இது மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில், 1970 களில், ஜெராக்ஸ் ஆயுவுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த டெஸ்லர், தனது சகாக்களுடன் சேர்ந்து, உள்ளடக்கத்தை எளிதாக இடம் மாற்றுவதற்கான கட், காபி, பேஸ்ட் கட்டளை வசதியை உருவாக்கினார். இந்த செயல்பாட்டை, கட், காபி மற்றும் பேஸ்ட் என இரண்டாக பிரித்ததும் டெஸ்லர் தான்.


இந்த கண்டுபிடிப்பிற்காக டெஸ்லரை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை விட, இந்த கண்டுபிடிப்பிற்கு பின் உள்ள டெஸ்லரின் ஆதாரச் சிந்தனைக்காக கம்ப்யூட்டர் பயனாளிகள் அவரைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லலாம்.

டெஸ்லர் சிந்தனை

கம்ப்யூட்டர் பயன்பாடு எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் டெஸ்லரின் ஆதார சிந்தனை. அதாவது, கம்ப்யூட்டர்கள் எத்தனை சிக்கலானவையாக இருந்தாலும் சரி, பயனாளிகளை பொருத்தவரை பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்று டெஸ்லர் கருதினார்.


பயனாளிகளை முக்கியமாகக் கருதிய இந்த குணமே, டெஸ்லரை ஆரம்பக் கால கம்ப்யூட்டர்களை எல்லோரும் அணுகக் கூடியதாக செய்த மேதைகளில் ஒருவராக போற்ற வைக்கிறது.


ஒருவிதத்தில் பார்த்தால், இன்று கம்ப்யூட்டர் உலகில் பெரிதாகப் பேசப்படும், பயனாளிகளுக்கு நட்பான கருத்தாக்கத்தின் முன்னோடிகளில் டெஸ்லரும் ஒருவர். நட்பான பயனர் இடைமுகம் எனும் வார்த்தையை கண்டுபிடித்தவராகவும் டெஸ்லர் கருதப்படுகிறார்.


இது தொடர்பாக அவர் எழுதிய, எதிர்கால அலுவலகம் எனும் கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. ஒரு விண்டோவுக்குள், உள்ளட்டகத்தை மவுசால் சுட்டி, வேறிடத்திற்கு இழுக்கும் வசதியை குறிக்கும் பிரவுசர் எனும் வார்த்தையையும் இவரே கண்டறிந்ததாக கருதப்படுகிறது.

tesler

பயனாளிகளே முக்கியம்!

ஜெராக்ஸ் நிறுவனத்திற்கு பிறகு பல நிறுவனங்களில் பணியாற்றி கம்ப்யூட்டர் ஆய்வில் ஈடுபட்டிருந்த டெஸ்லர், எந்த கம்ப்யூட்டர் அமைப்பும், மோடு இல்லாததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


தொழில்நுட்ப மொழியில் மோடு என்றால் கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட செயலை முடிக்க தேவைப்படும் அமைப்பு அல்லது வார்ப்பாகும். இத்தகைய வரம்பு இல்லாமல், பயனாளிகள் கம்ப்யூட்டர் செயல்பாடுகளை சீராகப் பயன்படுத்தும் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்று டெஸ்லர் நம்பினார். இதை உணர்த்தும் வகையில் நோமோட்ஸ் எனும் பெயரில் அவரது ஆய்வு மற்றும் இணையதளம் அமைந்திருந்தது.


கம்ப்யூட்டர்கள், வல்லுனர்களால் பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து ஒவ்வொரு கட்டமாக முன்னேறி, தனிநபர்கள் மற்றும் பின்னர் குழுக்கள் கைகளில் வந்திருக்கிறது என்பது டெஸ்லரின் நம்பிக்கை.


கம்ப்யூட்டர், பயனாளிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மேலும் முக்கியப் பங்காற்றும் காலம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இன்று பயனாளிகள் எளிதாக பயன்படுத்தும் பல விஷயங்கள் இதையே உணர்த்துகின்றன.


இன்று கம்ப்யூட்டர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தும் அளவுக்கு நட்புமிக்கதாக இருக்கின்றன என்றால் அதற்கு டெஸ்லர் போல, பயனாளிகளை மனதில் கொண்டு தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபட்ட மேதைகளே மூலக்காரணம். அந்த வகையில் டெஸ்லரை நாம் கொண்டாடுவோம்!