யூடியூபர்களுக்கு நல்வாய்ப்பு: வருவாய் ஈட்ட 'ஷாப்பிங் திட்டம்' இந்தியாவுக்கு வருகிறது!
தகுதியான படைப்பாளிகள் தங்கள் உள்ளடக்கத்தில் Flipkart மற்றும் Myntra-லிருந்து தயாரிப்புகளை இடம்பெற அனுமதிக்கிறது.
யூடியூப் சேனல் நடத்துபவர்களின் வருவாயை அதிகரிக்க யூடியூப் நிறுவனம் தனது ஷாப்பிங் திட்டத்தை இந்தியாவுக்கும் விரிவாக்கம் செய்வதாக வெள்ளியன்று அறிவித்துள்ளது. யூடியூப் உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்கள் வீடியோக்களில் சிலபல தயாரிப்புப் பொருட்களை ‘டேக்’ செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .
தகுதியான படைப்பாளிகள் தங்கள் உள்ளடக்கத்தில் Flipkart மற்றும் Myntra-விலிருந்து தயாரிப்புகளை இடம்பெற அனுமதிக்கிறது. இந்த முயற்சி வளர்ந்து வரும் டிஜிட்டல் ஷாப்பிங் விருப்பங்களை தங்கள் பக்கம் ஈர்க்கவும் இ-காமர்ஸ் என்னும் மின் வர்த்தகத்தில் யூடியூப் மேற்கொள்ளவிருக்கும் பரந்துபட்ட உந்துதலின் ஒரு பகுதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கமான வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீம்களில் ’டேக்’ செய்து பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள் அல்லது பொருட்களை பார்வையாளர்கள் கிளிக் செய்து கொள்முதல் செய்யும் போது யூடியூபர்களுக்கு உரிய கமிஷன் வந்து சேரும்.
இந்த புதிய அம்சம் YouTube-ன் தற்போதைய ஷாப்பிங் அம்சத்தை நிறைவு செய்கிறது, இது உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்கள் ஸ்டோர்களை தங்கள் சேனல்களுடன் இணைப்பதன் மூலம், YouTube இன் விளம்பர வருவாய் மற்றும் பிரீமியம் சந்தாக்கள் போன்ற பணமாக்குதல் விருப்பங்களைச் சேர்ப்பதன் மூலம் தங்கள் சொந்த வணிகப் பொருட்களை விளம்பரப்படுத்த வழிவகை செய்கிறது.
விரிவாக்கம் குறித்து யூடியூப்பின் ஷாப்பிங் பொது மேலாளர் டிராவிஸ் காட்ஸ் கூறுகையில்,
வீடியோ உள்ளடக்கத்தில் இந்தியாவின் வலுவான வளர்ச்சியில் இது இயற்கையான அடுத்த கட்டமாகும். இந்தப் புதிய அம்சம் படைப்பாளர்களுக்கும் அவர்களது நேயர்களுக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பில் புதிய தயாரிப்புக் கண்டுப்பிடிப்பையும் ஊக்குவிக்கும், என்றார்.
Flipkart மற்றும் Myntra ஆகியவை தற்போது கூட்டாளிகளாக இருக்கின்றன. ஆனால், YouTube மற்ற தளங்களுக்கு கூட்டாண்மைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
யூடியூப் ஸ்டுடியோ மூலம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள யூடியூபர்கள் பதிவு செய்து கொள்ளலாம். தகுதியுள்ள படைப்பாளர்களுக்கு இந்தத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்தவுடன், படைப்பாளர்கள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வீடியோக்களில் தயாரிப்புகளைக் குறியிடலாம், இந்த குறிச்சொற்களை லைவ்ஸ்ட்ரீம்களிலும் இடம்பெறச் செய்வதற்கான தெரிவுகள் உள்ளன.