லாபம் தரும் சந்தன மர வளர்ப்பு!
விவசாயத்தில் அதிக லாபத்தை அள்ளித் தரும் ஒரே மரம் சந்தன மரம்.
விவசாயம் செய்யும் அனைவருக்குமே லாபம் கிடைத்துவிடுவதில்லை. அவர்கள் கடினமாக போராட வேண்டியிருக்கிறது. விவசாயத்தின் மூலம் லாபம் ஈட்ட உடல் உழைப்பு மட்டும் போதாது. சந்தை நிலவரங்களையும் இதிலுள்ள சூட்சமங்களையும் சரியாகப் புரிந்துகொண்டால் நிச்சயம் லாபம் ஈட்டமுடியும். அதாவது அதிக உடல் உழைப்பும் இல்லாமல் செலவும் இல்லாமல் அதிக லாபத்தை ஈட்டலாம். விவசாயத்தில் அதிக லாபத்தை அள்ளித் தரும் ஒரே மரம் சந்தன மரம்.
சந்தன மர சாகுபடி
சந்தன மர வளர்ப்பில் கவனிக்கவேண்டிய ஒரே முக்கிய விஷயம் என்னவென்றால் இதன் மூலம் உடனடியாக லாபம் பார்க்கமுடியாது. சந்தன மரம் முழுமையாக வளர 12-15 ஆண்டுகள்கூட ஆகலாம்.

அதேசமயம், ஒருமுறை சந்தன மரத்தை நடவு செய்துவிட்டால் பெரிதாக பராமரிப்பு தேவைப்படாது. அதிக உழைப்பின்றி லாபம் தரக்கூடியது. தரிசு நிலத்திலும்கூட சந்தன மரம் வளர்க்கமுடியும். நீர்பாசனம் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. செடியின் வேர் நன்றாக பரவும் வரை மாட்டு சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி நிலத்தை பராமரித்தால் போதுமானது.
செலவு மற்றும் லாபம்
ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளை சந்தனமரம் நடவு செய்தால் அதன் மூலம் 50-60 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டமுடியும். இதற்கான செலவு ஒரு லட்ச ரூபாய் வரை ஆகும்.
இந்தியாவில் ஒரு கிலோ சந்தனம் 8-10 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வெளிநாடுகளில் பார்த்தோமானால், கிலோவிற்கு 20-25 ஆயிரம் ரூபாய் வரைகூட விலை நிர்ணயம் செய்யப்படுவதைப் பார்க்கமுடிகிறது.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் சந்தன மர சாகுபடி செய்யத் தீர்மானித்தால் 2.5 லட்ச ரூபாய் முதலீடு செய்து 1.5 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டமுடியும்.
சந்தன மர வளர்ப்பு மூலம் உடனடியாக லாபம் பார்க்கமுடியாது என்பதால் மஞ்சள், இஞ்சி, காய்கறிகள் போன்றவற்றை சந்தன மரங்களுக்கு இடையில் உதவிக்கன்றுகளாக இணைத்து நடவு செய்யலாம். சந்தன மரம் வளர்ந்து லாபம் கொடுக்கும் வரை இது உதவும்.
வெள்ளை சந்தன மரம்
வெள்ளை சந்தன மரத்திலிருந்து கிடைக்கும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. இதிலிருந்து மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சோப்பு, காஸ்மெடிக்ஸ், பர்ஃபியூம் போன்ற பொருட்கள் தயாரிக்கவும் வெள்ளை சந்தன மரம் பயன்படுகிறது.

ஒருமுறை பயிரிட்டால் வாழ்நாள் முழுக்க விளைச்சலும் வருவாயும் நல்கும் நெல்லிக்காய் சாகுபடி!