டிவிஎஸ் கேபிட்டல் மூத்த ஆலோசகராக ஃபெடரல் வங்கி முன்னாள் சி.இ.ஓ ஷ்யாம் ஸ்ரீனிவாசன் நியமனம்!
டிவிஎஸ் கேபிடல் பண்ட்ஸ் (TCF), வங்கித்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளவரும், பெடரல் வங்கி முன்னாள் சி.இ.ஓ., ஆன ஷியாம் ஸ்ரீனிவாசனை ஆலோசகர் மற்றும் செயல்முறை பாட்னராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் (TCF), வங்கித்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளவரும், ஃபெடரல் வங்கி முன்னாள் சி.இ.ஓ., ஆன ஷ்யாம் ஸ்ரீனிவாசனை ஆலோசகர் மற்றும் செயல்முறை பார்ட்னராக நியமிப்பதாக அறிவித்துள்ளது.
வங்கி மற்றும் நிதித்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட ஷ்யாம் ஸ்ரீனிவாசன், நிறுவன நோக்கிலான வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம், நிதி நிர்வாகத்தில் அனுபவம் மிக்கவர் என இது தொடர்பான நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஃபெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓஆக 14 ஆண்டுகள் இருந்த ஸ்ரீனிவாசன், வங்கியின் தேசிய விரிவாக்கம், டிஜிட்டல் வங்கித்திறன் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது தலைமையின் கீழ், சிறந்த செயல்முறை கலாச்சாரம் செழித்ததோடு, புதுமையாக்கத்தை, மனிதர்களை மையமாக கொண்ட அணுகுமுறையுடன் இணைந்து கடைப்பிடித்தார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தலைமையின் கீழ், ஃபெடரல் வங்கி, பிராந்திய அளவிலான நிறுவனத்தில் இருந்து தேசிய அளவில் அறியப்பட்ட பிராண்டாக வளர்ச்சி அடைந்தது. வங்கித்துறை சேவைக்காக அவர் பிசினஸ் ஸ்டாண்டர்டின் சிறந்த வங்கியாளர் விருது (2020), ஃபோர்ஸ்ப் ஐகான் ஆப் எக்சலன்ஸ் (2025) உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தியாவின் நெருக்கடி காலத்தில் செயலாற்றிய சிறந்த தலைவர்களில் ஒருவர் எனும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். ஐஐஎம் கொல்கத்தா மற்றும் என்.ஐ.டி திருச்சியின் சிறந்த முன்னாள் மாணவராக தேர்வாகியுள்ளார்.
ஸ்ரீனிவாசனை, ஆலோசனை குழுவுக்கு வரவேற்பதாக டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோபால் ஸ்ரீனிவாசன் வரவேற்றுள்ளார்.
"எங்கள் நான்காவது நிதி அறிமுகம் செய்துள்ள நிலையில், கட்டுப்பாடுடனான முதலீடு மற்றும் மாற்றத்திற்கான வளர்ச்சியில் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். இந்த பயணத்தில் ஷ்யாம் ஸ்ரீனிவாசனனின் நிதித் துறை அனுபவம், தலைமை பண்பு வழிகாட்டும்,” என அவர் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan