இந்தியாவில் 29,500 ட்ரோன்கள் பதிவு - தில்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா முன்னிலை!
ஜனவரி 29ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட சிவில் ஏவியேஷன் இயக்குனரக (DGCA) தரவுகள், நாட்டில் 29,501 டிரோன்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 29,500 டிரோன்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், தலைநகர் தில்லி அதிகபட்சமாக 4,882 ட்ரோன்களை பதிவு செய்திருப்பதும் அதிகார்பபூர்வ தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தேசிய தலைநகர் தில்லிக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 4,588 மற்றும் 4,132, ட்ரோன்களை கொண்டுள்ளன. ஜனவரி 29ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட சிவில் ஏவியேஷன் இயக்குனரக (DGCA) தரவுகள், 29,501 ட்ரோன்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா தவிர அதிக ட்ரோன் பதிவு செய்யப்பட்ட மற்ற மாநிலங்கள் வருமாறு: ஹரியானா (3,689), கர்நாடகம் (2,516), தெலுங்கானா (1,928), குஜராத் (1,338) கேரளம் (1,318). மாநிலங்களவையில் இந்த வாரம் சமர்பிக்கப்பட்ட சிவில் ஏவியேஷன் இயக்குனரக தகவல்கள் இதை தெரிவிக்கின்றன.
இதுவரை, பல்வேறு வகை ஆளில்லா விமானம் (UAS) அல்லது ட்ரோன்களுக்கு 96 வகை சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 65 மாதிரிகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுபவை.
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட டிரோனுக்கும், இயக்குனரகத்தால் நடத்தப்படும் டிஜிட்டல் வானம் மேடையின் கீழ் தனி அடையாள எண் (UIN) அளிக்கப்படுகிறது. மேலும், இயக்குனரக அங்கீகாரம் பெற்ற ரிமோட் பைலட்கள் பயிற்சி அமைப்புகள், (RPTOs) 22,466 ரிமோட் பைலட் சான்றிதழ்கள் (RPCs). வழங்கியுள்ளன.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், இந்த தகவல்களை பகிர்ந்து கொண்ட சிவில் ஏவியேஷன் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹல்,
பல்வேறு துறைகளில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, தெரிவித்தார்.
மேலும், டிரோன் பதிவு அல்லது பதிவு நீக்கத்திற்கு பாஸ்போர்ட் தேவை எனும் நிபந்தனை கடந்த ஆகஸ்ட் மாதம் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பிறகு, வாக்காளர் அடையாள அடை, குடும்ப அட்டை அல்லது ஓட்டுனர் உரிமம், இதற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள டிரோன் பறக்கும் வரைபடமும் இருக்கிறது. பச்சை மண்டலத்தில் டிரோன் இயக்க முன்னதாக அனுமதி வாங்க வேண்டாம். மஞ்சள் மண்டலத்தில் டிரோன் இயக விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஆணைய அனுமதி பெற வேண்டும்.
சிவுப்பு மண்டத்தில் டிரோன் இயக்க மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
செய்தி: பிடிஐ
Edited by Induja Raghunathan