Stock News: இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிப்பது ஏன்?
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் தயக்கத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து தடுமாற்றம் நிலவி வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் தயக்கத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து தடுமாற்றம் நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.18) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.65 புள்ளிகள் சரிந்து 22,876.85 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றம் தொடர்ந்தாலும் கூட, மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படாதது முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 267.22 புள்ளிகள் (0.35%) சரிந்து 75,729.64 ஆகவும், நிஃப்டி 100.80 புள்ளிகள் (0.44%) சரிந்து 22,858.70 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தைக்கு விடுப்பு. ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலும் சாதகப் போக்கு நிலவி வருகிறது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள இந்திய பங்குகளை விற்பதிலேயே தீவிரம் காட்டி வருவதால் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. அதேவேளையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஓரளவு ஆர்வம் காட்டி வருவதால் பெரிய அளவில் இழப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஏற்றம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
விப்ரோ
பஜாஜ் ஃபின்சர்வ்
இன்ஃபோசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
மாருதி சுசுகி
டிசிஎஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
பாரதி ஏர்டெல்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து ரூ.86.96 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan