Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘Zoho One’ சேவை இந்தியாவில் 104% வளர்ச்சி: 6 புதிய செயலிகள், 3 சேவைகள் அறிமுகம்!

ஜோஹோ கார்ப்பரேஷன், ஆறு புதிய செயலிகள், புதிய மூன்று சேவைகள் மற்றும் ஏழு முக்கிய மேம்பாடுகளை வர்த்தகங்களுக்கான ஜோஹோ ஒன் இயங்கு தளத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

‘Zoho One’ சேவை இந்தியாவில் 104% வளர்ச்சி: 6 புதிய செயலிகள், 3 சேவைகள் அறிமுகம்!

Tuesday October 19, 2021 , 3 min Read

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான 'ஜோஹோ கார்ப்பரேஷன்,' ஆறு புதிய செயலிகள், புதிய மூன்று சேவைகள் மற்றும் ஏழு முக்கிய மேம்பாடுகளை வர்த்தகங்களுக்கான Zoho One இயங்கு தளத்தில் அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் 40,000 நிறுவனங்கள் ’Zoho One’ பயன்படுத்துவதாகவும், வாடிக்கையாளர் வர்த்தகம் சர்வதேச அளவில் 60% வளர்ச்சி அடைந்து, இந்திய அளவில் 104 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளது.

’Zoho One’- என்பது சிறு மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான அலுவலக மற்றும் தொழில் செயல்பாடுகளை சுலபமாக நடத்தும் வகையில் உதவி புரியும் ஜோஹோ-வின் முக்கிய சேவைத் தளமாகும். இதில் ஏற்கனவே பல செயலிகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கும் சேவைகள் உள்ளன.

zoho one

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜோஹோ கார்ப் துணை தலைவர் பிர்சவல் சிங், இத்தளத்தில் புதிய அறிமுகங்கள் செய்யப்பட்டிருப்பது பற்றி அறிவித்தார். மேலும், பாண்டமிக்கை தொடர்ந்து பல நிறுவன ஊழியர்கள் ஆன்லைன், ஆப்லைனில் இரண்டிலும் பணிபுரிவதால், அதற்கேற்றவாறு வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தரவுகளும், தகவல் தொடர்பு இடைவெளிகளை எதிர்கொள்ள உதவும் சேவைகளையும், Zoho One-இல் அறிமுக செய்துள்ளதாக தெரிவித்தார்.


"ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பார்ட்னர்கள், சப்ளையர்கள் ஆகியோர் வர்த்தகத்துடன் தொடர்பு கொள்ளும் போது பெறும் அனுபவம், அந்த வர்த்தகம் மற்றும் அமைப்பு நிறுவனத்திற்குள் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை பொருத்தே அமைகிறது. இப்போது வென்டர்கள் அளிக்கும் தனியான தீர்வுகளால் பெரும்பாலான வர்த்தக அமைப்புகள் தொடர்பில்லாமல் இருக்கின்றன,” என்று பிர்சவல் சிங் கூறினார்.

"வர்த்தக ஒருங்கிணைப்புக்கு அதன் அடிப்படையான அமைப்புகளில் ஒருங்கிணைப்பு தேவை. இது நிறுவனத்திற்குள் மற்றும் நிறுவனத்திற்கு வெளியே தனித்தன்மையான அனுபவத்தை வழங்கும். இந்த பார்வையுடன் ஜோஹோ ஒன் உருவாக்கப்பட்டு, தற்போது கூடுதலான அம்சங்களை அதில் சேர்த்து மேலும் மதிப்பை கூட்டி உள்ளது,” என அவர் கூறினார்.

’ஜோஹோ ஒன்’ வர்த்தகங்கள் எதிர்கொள்ளும், செயல்பாடு, டிஜிட்டல்மயமாக்கல், மற்றும் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. தற்போதைய அறிமுகங்கள் ஹைபிரிட் பணி சூழலுக்கு மிகவும் ஏற்றது. நிச்சயமற்ற சூழலில் கூட வர்த்தகங்கள் வளர்ச்சி காண உதவக்கூடியது என அவர் மேலும் தெரிவித்தார்.

”ஆறு புதிய ஆப்’கள், மூன்று புதிய சேவைகள் மற்றும் ஏழு முக்கிய மேம்பாடுகளை வர்த்தகங்களுக்கான Zoho One இயங்கு தளத்தில் அறிமுகம் செய்வதாகவும் பிரவல் சிங் அறிவித்தார். மேலும், இப்புதிய சேவைகள் மற்றும் ஆப்’கள் அடங்கிய ஜோஹோ ஒன் சேவை ஏற்கனவே உள்ள அதே விலைப்பட்டியலில் கிடைக்கும் என்றும் கூறினார்.”
Zoho Praval Singh

இந்த செயலிகள், கூட்டு முயற்சி, ஊழியர் அனுபவத்தை மேம்படுத்தும் சேவைகள், வர்த்தகங்களை எதிர்காலத்திற்குத் தயாராக்கும் வகையில் ஊழியர்கள், நிறுவனம் மற்றும் குழு இடையிலான தொலைவை இணைக்கும் சேவைகளைக் கொண்டிருக்கின்றன.


மேலும், மூன்று புதிய சேவைகள் அறிமுகம் செய்துவைத்து பேசிய, Zoho One மார்க்கெட்டிங் தலைவர் ஹரிஹரன் முரலிமனோஹர் அதை விரிவாக விளக்கினார்.

Work Graph, Org Dictionary, Mobile Application Management (MAM) ஆகிய மூன்று முக்கிய சேவைகள் ஜோஹோ ஒன் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உரையாடல் சார்ந்த பிஐ, டேடா பிரெப், வொர்க் கிராப் மற்றும் நிறுவன தேடல் வசதி, ஒருங்கிணைந்த, நிகழ்நேர, தகவல்களை துறைதோறும் அளித்து முடிவெடுப்பதில் உதவுகிறது,” என்றார்.

ஜோஹோ ஒன் அளிக்கும் புதிய சேவைகள் வருமாறு:

  •  Work Graph : துறையில் முதல் முறையாக அறிமுகமாகும் புதிய பேக் எண்ட் சேவை, ஊழியர்கள், வளங்கள், அமைப்புகள் இடையே தொடர்புகளை வரைபடமாக்கி, அவர்களின் ஆற்றலை பணி வரைபடமாக அளிக்கும் திறன் கொண்டது. இந்த பணி வரைபடம் மூலம் பல்வேறு செயலிகள் தொடர்பான ஊழியர் செயல்திறனை தினமும் காணலாம்.


  • Org Dictionary : இது ஒரு முன்மாதிரி சேவை. நிறுவனம் தழுவிய இந்த அகராதி, முழு நிறுவனத்திற்குமான மைய டிக்‌ஷனரியாக அமைகிறது. ஊழியர் பெயர், இதர வளங்களை இது கொண்டிருக்கிறது. ஜோஹோ ஒன் செயலிகள் மற்றும் பயனாளிகள் இடையே ஒரே மாதிரியான வார்த்தை பயன்பாட்டை சாத்தியமாக்குகிறது.

 

  • Mobile Application Management (MAM) : தற்போது தொலைதூரப் பணி பரவலாக உள்ள நிலையில், ஜோஹோ ஒன் இப்போது மொபைல் செயலி நிர்வாகத்தை உள்ளடக்கியுள்ளது. நிர்வாகிகள் இப்போது தங்கள் பயனர் அனைவரது சாதனங்களையும் திறம்பட நிர்வகிக்க முடியும். ஸ்மார்ட்-போன் வழியே சுலபமாக லாக்-இன் செய்து பணிகளை செய்ய இது உதவும்.


ஜோஹோ லேர்ன், ஜோஹோ லென்ஸ், டீம் இன்பாக்ஸ், ஜோஹோ டேட்டா பிரப், ஜோஹோ காமர்ஸ், ஜோஹோ பேரோல் ஆகிய செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Zoho Learn: ஜோஹோ கோர்ஸ் பில்டருடன் இணைந்த, உரையாடல் சார்ந்த பயிற்சி திட்டங்களுக்கு வழி செய்கிறது.


Zoho Lens: தொலைதூர பணிச் சூழலில் மேம்பட்ட தகவல் தொடர்பிற்கு வழி செய்கிறது.


TeamInbox: பகிர்வு இ-மெயில் வசதியைக் கொண்டிருக்கிறது.


Zoho DataPrep: சுய சேவை தரவு தயாரிப்பு மற்றும் நிர்வாகச் சாதனங்களைக் கொண்டுள்ளது.


Zoho Commerce: சில்லறை வர்த்தகர்கள் மிக எளிதாக ஆன்லைன் கடைகளை அமைக்க வழி செய்கிறது. ஆர்டர் பெறுவது முதல் இருப்பு நிர்வாகம் வரை உதவுகிறது.


Zoho Payroll: ஊழியர்கள் சேர்க்கை, சம்பள நிர்வாகம், வரிகள் பிடித்தம் உள்ளிட்டவற்றில் உதவுகிறது.

உரையாடல் பிஐ, நிறுவன தேடல், ஒருங்கிணைந்த டாஷ்போர்டு உள்ளிட்ட மேம்பாடுகளையும் கொண்டிருக்கிறது.


இதன் விலை ஊழியருக்கு ரூ.1,800 எனத் துவங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு:  : https://www.zoho.com/one/pricing/


ஜோஹோ நிறுவனம் பயனாளிகளின் தனியிரிமையை மதிப்பதாகவும், தனது வருவாய் மாதிரி எதிலும் விளம்பரம் சார்ந்த மாதிரி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


கட்டுரை உதவி: சைபர் சிம்மன்