குறைந்த விலையில், கூடுதல் அம்சங்களோடு ஐபோன்16e அறிமுகம்!
ஐபோன் 16 வரிசை கீழ் வரும் ஐபோன் 16இ, ஏ18 சிப், ஆப்பிள் இண்டலிஜென்ஸ், அதிக பேட்டரி காலம் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 வரிசையில் புதிதாக, ஐபோன் 16இ போனை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட இந்த போன், மேலும் வாங்கக் கூடிய விலையில் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த போனை ஐபோன் எஸ்.இ வரிசையின் தொடர்ச்சியாக அல்லாமல், ஐபோன் 16 வரிசையின் கீழ் ஆப்பிள் கொண்டு வந்துள்ளது.

ஆப்பிளின் அண்மை கால ஏ18 சிப் கொண்டுள்ள இந்த போன், 6.1 அங்குல சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் 6 கோர் பிராசஸர் ஐபோன் 11-இன் ஏ13 பயோனிக்கை விட 80 சதவீதம் வேகமானது, என நிறுவனம் தெரிவிக்கிறது. இது கிராபிக்ஸ் மற்றும் கேமிங்கிற்கான 4-கோர் ஜிபியூ கொண்டுள்ளது. மேலும், ஆக்கத்திறன் மாதிரிகளுக்கு ஏற்ற 16 கோர் நியூரால் எஞ்சின் கொண்டுள்ளது.
மேட், கருப்பு மற்றும் வெள்ளை பினிஷ் கொண்ட இந்த போன் 128GB, 256GB, 512GB சேமிப்பு வாய்ப்புகளுடன் கிடைக்கிறது. விலை, ரூ. 59,900 வில் துவங்குகிறது.
ஆப்பிள் 5ஜி வசிதிக்காக சொந்தமாக உருவாக்கி சி1 மோடம் கொண்ட முதல் ஆப்பிள் சாதனமாகவும் இது அமைகிறது. இதற்கு முன் ஆப்பிள், குவால்காம் மோடம்களை பயன்படுத்தியது.
ஐபோன் 16e, 2 இன் 1 காமிரா அமைப்பு கொண்டுள்ளது. 48 எம்பி பியூஷன் திறன் கொண்ட காமிரா, அதிக துல்லியமான படங்களை எடுக்கக் கூடியது. 2எக்ஸ் டெலிபோட்டோ ஜூம், இரண்டாம் லென்ஸ் இல்லாமல் ஆப்டிகல் குளோஸ் அப் ஆகிய அம்சங்கள் உள்ளன. முன்பக்க, ட்ரூ டெப்த் காமிரா, குளோஸ் அப் மற்றும் செல்பிக்களை மேம்படுத்தும் தன்மை கொண்டது.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் USB-C, சார்ஜிங் வசதி கொண்டது என்பதால் பல்வேறு சாதனங்களுடன் எளிதாக பயன்படுத்தலாம்.
காமிரா வாய்ப்புகள், பிளாஷ்லைட், சைலண்ட் மோடு, ஷாசம், வாய்ஸ் மெமோஸ், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வசதிகளை எளிதில் அணுக ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது.
ஆப்பிள் இண்டலிஜென்ஸ்
ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த உருவாக்கத்திலான செயற்கை நுண்ணறிவை ஆப்பிள் இண்டலிஜென்ஸ், என அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்கள் படிப்படியாக சாதனங்களில் இடம்பெற்று வருகின்றன. புதிய போன் ஆப்பிள் இண்டலிஜென்ஸ் வசதி பெற்றிருக்கும்.
உலக அளவில் ஐபோன் விற்பனையில் லேசான சரிவு உண்டானாலும், ஆப்பிள் டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் வருவாய் சாதனை கண்டது. ஐபோன் 6இ மற்ற 16 வரிசை போன்களைவிட குறைந்த விலையில் அறிமுகமாவது, இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். காலாண்டு அறிக்கையின் போது, ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக், இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதாக கூறினார்.
“ஆப்பிள் இண்டல்ஜென்ஸ் அறிமுகமான சந்தைகளில் ஆண்டு அடிப்படையில் ஐபோன் 16 வரிசை போன்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை கண்டுள்ளோம்,” என அவர் கூறினார்.
ஐபோன் 16இ போன்களுக்கான் முன்பதிவு 21ம் தேதி துவங்கி 28ம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும்.
Edited by Induja Raghunathan