தேனில் இருந்து மது தயாரிப்பு - இந்தியாவின் முதல் 'மியட்' உற்பத்தி ஆலையை நடத்தும் பெண்கள்!
யோகினி புத்கர், அஸ்வினி டியோரே துவக்கியுள்ள நாசிக்கைச் சேர்ந்த 'செரனா மியட்ஸ்' நிறுவனம், தேனியில் இருந்து உருவாக்கப்படும் மது வகையை தயாரிக்கிறது. இயற்கை, ஆர்வம் மற்றும் மது மீதான பிரியம் ஆகியவற்றின் கலைவையாக இந்த முயற்சி அமைகிறது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன், யோகினி புத்கர், தேனுடன் தண்ணீர் மற்றும் வாசனை திரவியங்களை கலந்து புளிக்க வைத்து உருவாக்கப்படும் ’மியட்’ (mead) எனும் மது வகை பற்றி, யூகேவைச் சேர்ந்த பேராசிரியடம் இருந்து கற்றுக்கொண்டார்.
இதையடுத்து, மிகுந்த ஆர்வத்துடன் யோகினி, உயிரி நுட்பத்தில் முனைவர் பட்டம் படித்த படி, உள்ளூரில் இந்த மதுவகை இருக்கிறதா என தேடத்துவங்கினார். இருப்பினும், உள்ளூரில் இந்த மதுவை அவரால் கண்டறிய முடியவில்லை. எனவே, அவர் தானே அதற்கான சோதனையை மேற்கொள்ளத்துவங்கினார்.
இதை ஆர்வம் காரணமாக மேற்கொண்டாலும், காலப்போக்கில் இது வேறு வடிவம் எடுத்தது.
2014ல், யோகினி இந்த எண்ணத்தை தனது தோழி அஸ்வினி டியோரேயிடம் பகிர்ந்து கொண்டார். உயிரி பதப்படுத்தலில் முனைவர் பட்டம் படித்துக்கொண்டிருந்த டியோரே, இந்த முயற்சியில் இணைந்தார்.
ஐந்து ஆண்டு கால ஆய்வு, அபிவிருத்திக்கு பிறகு, 2019ல் ’செரனா மியட்ஸ்’ (
) துவக்கப்பட்டது.“செரனா மியடஸ், இயற்கை, தேனீக்கள் மீதான அர்வம் மற்றும் மது மீதான ஈடுபாட்டால் உண்டானது என்று ஹெர்ஸ்டோரியிடம் யோகினி கூறுகிறார்.
இந்தியாவில் மியட் தயாரிப்புக்கு உரிமம் பெற்ற இரண்டாவது நிறுவனம் செரனா மியட்ஸ் என்கிறார்.
துவக்கம்
யோகினி மற்றும் டியோரே இருவருக்கும் அறிவியல், இயற்கை மீது ஈடுபாடு கொண்டுள்ளனர். இருவரும் மும்பையில் உள்ள கெமிகல் டெக்னாலஜி கழகத்தின் உணவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்றனர். கல்லூரி நாட்களில் இருவரும் ஒயின் மது மற்றும் இயற்கை ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர்.
ஒரு விருந்து நிகழ்ச்சியில் முதலீட்டாளர் ஒருவர், இந்தியாவில் பெரிய அளவிலான மியட் தயாரிப்பு நிறுவனம் எதுவும் இல்லாததால் வர்த்தக நோக்கில் இதை உற்பத்தி செய்யுமாறு கூறியதை நினைவு கூர்கிறார். இந்த எண்ணம் அவருள் ஆழ பதிந்து தூங்கவிடாமல் செய்தது.
பின்னர், கனடாவில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த டியோரேவை அழைத்து இந்த எண்ணத்தை தெரிவித்தார். இதை கேட்டவுடன் அவர் உடனே இந்தியா திரும்பி, நிறுவனத்தை இணைந்து துவங்க தீர்மானித்தார்.
“தோழிகளில் இருந்து இணை நிறுவனர்களாக எங்கள் பிணைப்பு அதிகமானது என்கிறார் யோகினி.
2014ல் இரண்டு தோழிகளும் மியட் உருவாக்கம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். வெவ்வேறு பழங்க மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு பல்வேறு முறை மியட் உருவாக்கி பார்த்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, யுசிடேவிசில் மியட் தயாரிப்பில் பயிற்சி பெற அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சென்றார்.
அப்போது, மகாராஷ்டிரா அரசு, தேனை வர்த்தக நோக்கில் மதுவாக்க அனுமதிக்கவில்லை. எனவே, இந்த இருவரும் வர்த்தக தேன் மதுவாக்கத்திற்காக சுங்க துறையிடம் சட்டத்தை மாற்ற மன்றாடினர். இதன் பயனாக 2017 ஜூலையில், அனுமதி கிடைத்தது.
இதையடுத்து, நாசிக்கின் சினார் பகுதியில், வாடகைக்கு இடம் எடுத்தனர். 2019ல் மியட் தயாரிப்பிற்கான இறுதி உரிமம் கிடைத்தது.
"2020 ஜனவரியில் உற்பத்தியை துவக்கினோம். ஆனால், கோவிட் -19 தாக்குதல் எங்கள் திட்டத்தை மெதுவாக்கியது. ஜூன் மாதம், அரசு விற்பனை நிலையங்கள் திறக்கப்பட அனுமதித்த பொது நிலைமை மேம்பட்டது,” என்கிறார் யோகினி.
நிறுவனத்தில் இவர் வர்த்தக வளர்ச்சியை கவனித்துக்கொள்ளும் நிலையில் டியோரே மியட் செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறார். இருவரும் இணைந்து மியட் தயாரிப்பை கவனித்துக்கொள்கின்றனர்.
தேனில் இருந்து..
செரனா வேறுபட்ட ஆல்கஹால் அளவு கொண்ட மியட் தேர்வுகளை வழங்குகிறது: மாதுளை, வென்னிலா, ஜாமூர், சென்னின் பிளான்க் மற்றும் புளு பியா லாவண்டர் ஆகியவை 10 சதவீதத்திற்கும் குறைவான ஆல்கஹால் கொண்டுள்ளன. 330 மிலி கோப்பைகளில் கிடைக்கிறது. 750 மிலி கொண்ட பைனாட் நோயர், யுலே ஸ்பைஸ் ஆகிய ரகங்களையும் கொண்டுள்ளது. இவை 11.5 மற்றும் 12 சதவீத ஆல்கஹால் கொண்டுள்ளன.
பெரி, ஆப்பிள், பேரிக்காய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் மெலோமல், திராட்சை பழரசம் கொண்டு தயாரிக்கப்படும் பைமண்ட், சினான்மோன், கிராம்பு, இஞ்சி கொண்ட மெதிக்லின் ஆகிய ரகங்களையும் நிறுவனம் வழங்குகிறது.
பாட்டிலின் அளவுக்கு ஏற்ப ரூ.199 முதல் ரூ.810 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை 25,000 லிட்டர் மியட் உற்பத்தி செய்துள்ளது. நான்கு வகையான தேன் பயன்படுத்துகிறது. ராஜஸ்தானில் இருந்து கடுகு தேன், இமச்சாசலத்தில் இருந்து பல மலர் தேன், பிகாரில் இருந்து லிட்சி தேன் மற்றும் மகாராஷ்ட்ரா- மத்திய பிரதேசத்தில் இருந்து ஜாமூன் தேன் ஆகியவற்றை கொள்முதல் செய்கிறது.
தேன் கொள்முதல் செய்யப்பட்ட பிறகு, நாசிக்கில் உள்ள 3500 சதுர அடி ஆலையில் தர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின் தேனில் தண்ணீர் கலந்து புளிக்க வைக்கப்படுகிறது.
“பல்வேறு வகை மியட்களுக்கான சீரான உற்பத்தி செயல்முறையை வைத்துள்ளோம்,” என்கிறார் டியோரே.
புளிக்க வைக்கும் செயல்முறை முடிந்த பிறகு, மியட் பல்வேறு நிலைகளுக்கு உள்ளாகி கவனமாக பாட்டிலில் ஊற்றப்படுகிறது.
அதிக ஆல்கஹால் கொண்ட மியட் கார்பனேட் செய்யப்படுவதில்லை மற்றும் குறைந்த ஆல்கஹால் கொண்ட மியட் கார்பனேட் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறுகிறார். தேனீக்கள் உபரி தேனை சேமித்து வைக்கும் சூப்பர் சாம்பர் இடத்தில் இருந்தே தேனை எடுப்பதாக யோகினி கூறுகிறார்.
"சூப்பர் சாம்பரில் தேனின் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் தேனீக்கள் சில உத்திகளை கையாண்டு, அவற்றை மெழுகால் மூடுகின்றன. எங்கள் மியட், மூடப்பட்ட தேனடையில் இருந்து பெறப்படுகிறது. செயற்கையாக ஈரப்பதம் அகற்றப்படும் எந்த செயல்முறையும் இல்லை,” என்கிறார்.
மூடப்பட்ட தேனடை குறைவான ஈரப்பதம் கொண்டிருப்பதால் அதிக காலம் கொண்டது. மூடப்படவில்லை எனில், தேன் முதிர்வு கொண்டிருக்காது, ஈரப்பதத்தை அகற்ற செயற்கை முறை தேவை. இது சுவை மற்றும் இயற்கை தன்மையை பாதிக்கும் என விளக்கம் தருகிறார்.
“தேனி பெட்டியின் உள் பகுதியில் இருந்து தேன் எடுப்பது தேனீக்களை பாதிக்கும்,” என்றும் கூறுகிறார்.
தேனடையின் உபரி பகுதியில் இருந்து தேன் எடுப்பதை உறுதி செய்ய, இந்த செயல்முறையை நேரில் அல்லது வீடியோ மூலம் கண்காணிக்கின்றனர்.
பாரம்பரிய ஒயின், பியர் தயாரிப்பு விவசாய நில பயன்பாடு சார்ந்தது, இதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் மீது தாக்கம் செலுத்தும் என கருதுகின்றனர். மாறாக, மியட் தயாரிப்பு தேனீக்கள் அல்லது சுற்றுச்சூழல் மீது அதிக தாக்கம் செலுத்துவதில்லை என்கின்றனர்.
“மியட் தயாரிப்பு தேனை மூலப்பொருளாகக் கொண்டுள்ளது. இந்த செயல்முறை தேனீக்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும், உள்ளூரில் இருந்து தருவிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவதால் கிளூட்டன் இல்லாமல், வேறு செயற்கை பொருட்கள் இல்லாமல் அமைகிறது,” என்கிறார் யோகினி.
இந்த ஸ்டார்ட் அப், நிறுவனர்கள் உள்பட 9 பேரை கொண்டுள்ளது. இந்த டி2சி பிராண்ட், புனே, நாசிக்,மும்பை ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகள் மூலமும் விற்பனை செய்கிறது. இணையதளம் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது.
பெங்களூரு, தில்லி மற்றும் கோவாவில் விரிவாக்கம் செய்ய இருப்பதோடு அடுத்த ஆண்டு புதிய பொருட்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
துறை சவால்கள்
இந்தியாவில் ஆல்கஹால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதால், அனுமதி பெறுவதில் சிக்கல்கள் இருக்கிறது என்று இத்துறையில் உள்ள சவால்கள் பற்றி குறிப்பிடுகிறார்.
“விதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்பாடு, எங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்களுக்கு நேரமும், வளமும் தேவைப்படக்கூடியது என்கிறார். சிறந்த உற்பத்தி குழுவை உருவாக்குவது மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது இன்னொரு சவால்,” என்கிறார்.
நுகர்வோர் முனையில், இரண்டு முக்கிய விஷயங்கள் இருப்பதாகக் கருதுகிறார். பியர், மது போன்றவற்றுக்கு பழகிய நுகர்வோர் மத்தியில் புதிய பொருளை அறிமுகம் செய்வது ஒரு சவால் என்றால் இந்தியர்கள் விலை விஷயத்தில் கவனம் செலுத்துவது இன்னொரு சவால் என்கிறார்.
"உற்பத்தி செலவை விட, தரத்திற்கான செயல்முறை முக்கியமாக அமையும், கையால் தயாரிக்கப்படும் எங்கள் மது வகைக்கு, தரம் மற்றும் விலை இடையிலான சமனை பின்பற்றுவது மிகவும் சவாலானது,” என்கிறார்.
“இந்தத் துறை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதாக அமைவதால் பெண்களுக்கு சவாலாக இருப்பது இயல்பானது தான். ஆனால், எங்கள் எனுபவம், இந்த துறை பாலின சார்பில்லாததாக இருப்பதாகவே உணர்கிறோம்,” என்று பெண் தொழில்முனைவோருக்கான சவால்கள் பற்றி பேசும் போது யோகினி குறிப்பிடுகிறார்.
ஆண் தொழில்முனைவோர் சந்திக்காத எந்த சவாலையும் நாங்கள் எதிர்கொண்டுவிடவில்லை. பெண்களாக இருப்பதால் எந்த சார்பையும் சந்திக்கவில்லை. மேலும் எங்கள் குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர் என்கிறார்.
ஆங்கிலத்தில்: சிம்ரன் சர்மா | தமிழில்: சைபர் சிம்மன்
மதுக்கடை விற்பனையாளர் இன்று ரூ.1,360 கோடி ஆண்டு வருவாய் ஈட்டும் மதுபான நிறுவன உரிமையாளர்!
Edited by Induja Raghunathan