தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்தும் டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ்!
டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்தும் முகமாக உயர் பொறுப்புகளில் இரண்டு செயலதிகாரிகளை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்தும் முகமாக உயர் பொறுப்புகளில் இரண்டு செயலதிகாரிகளை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் சி.டி.ஓ. (புராடக்ட்ஸ் அண்ட் சொல்யூஷன்ஸ்) ஆகவும் ஸ்ரீகாந்த் விஸ்வநாதன் என்பவரையும், எலெக்ட்ரானிக் மேனுஃபேக்சரிங் சர்வீசஸ் (EMS) பிரிவின் தலைமை வர்த்தக அதிகாரியாக சத்யா துரைசாமி என்பவரையும் நியமனம் செய்துள்ளதாக அறிக்கை ஒன்றில் டிவிஎஸ் எலெக்ட்ரானிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் மின்னணு உற்பத்தி மற்றும் சேவைகளில் நுழைவதை அறிவிக்கும் விதமாகவும் வலுவான ஒருங்கிணைந்த எண்ட்-டு-எண்ட் எலக்ட்ரானிக்ஸ் தீர்வை வழங்குவதையும் வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை / விநியோக நெட்வொர்க், வாடிக்கையாளர் சேவை, கள ஆதரவு சேவைகள் (எஃப்எஸ்எஸ்), உள்கட்டமைப்பு மேலாண்மை தீர்வுகள் மற்றும் எண்ட் டு லைஃப் தீர்வுகளை வழங்குவதையும் இந்த உத்திசார் நகர்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சத்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் விஸ்வநாதன் - டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ்
அனுபவம் வாய்ந்த R&D நிபுணரான ஸ்ரீகாந்த் விஸ்வநாதன்,
"சத்யா துரைசாமி; TVS எலக்ட்ரானிக்ஸில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பார் என்றும் TVS Electronics இன் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளை (EMS) மேலும் வலுப்படுத்தவும், வணிக விரிவாக்கத்தை எளிதாக்கவும், ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுடன் வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் கவனம் செலுத்துவார்," என்றும் டிவிஎஸ் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாந்த் விஸ்வநாதன் தொழில்நுட்ப மேம்பாடு, தயாரிப்பு/சொல்யூஷன்ஸ் மேம்பாடு முதலிய துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புகளில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். இவர் பிலிப்ஸ், ஜி.இ. ஹெல்த்கேர், ஹனிவெல் போன்ற நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். சத்யா துரைசாமியும் பல துறைகளில் உயர் பதவிகளில் 20 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். இவர் ஹர்மன் இன்க், செண்டம் எலெக்ட்ரானிக்ஸ், ZF, மற்றும் மார்க்வார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர்.
டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தலைமைத்துவக் குழுவை வலுப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் எலெக்ட்ராக்னிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீலலிதா கோபால்,
“ஸ்ரீகாந்த் விஸ்வநாதன் மற்றும் சத்ய துரைசாமி இருவரையும் எங்கள் தலைமைக் குழுவிற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஒருங்கிணைந்த எண்ட்-டு-எண்ட் எலக்ட்ரானிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிளேயராக மாறுவதற்கு அவர்களின்பங்கு பெரிதாக இருக்கும்.“
டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் தற்போது வளர்ந்து வரும் சில்லறை விற்பனைத் துறையை எதிர்கொள்ள மென்பொருள் தீர்வுகள் உட்பட அனைத்து சில்லறை வடிவங்களுக்கான மென்பொருள் தீர்வுகளிலும் கவனம் செலுத்துகிறது என்று அறிக்கையில் டிவிஎஸ் தெரிவித்துள்ளது.