'நான் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டேன்’ – சிறுமியின் கண்ணீர் கதை!
சிறுமியின் சர்வைவல் கதை!
14 வயதேயான ருமானா என்ற சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இனி அவரே தன் கதையை தொடர்கிறார்.
”நான் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பங்கான் துணைப்பிரிவில் பாக்தா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். நான் அங்கு தான் 14 வயது வரை வளர்ந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியான குழந்தையாக இருந்ததை நினைத்துப்பார்க்கிறேன். நான் வண்ணம் தீட்டுவேன், என் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டேன். பள்ளி நாட்களை அனுபவித்தேன். குறிப்பாக எனக்கு வரலாறு பாடங்கள் மிகவும் பிடிக்கும்.
ஒரு நாள், நான் தனியாக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அது ஒரு அதிகாலை நேரம். அப்போது ஒரு வேன் என் அருகில் வந்து நின்றது. எனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதை நான் உணரும் முன்பு, யாரோ என்னை வேனில் தள்ளிவிட்டார்கள். நான் உதவிக்காக கத்த முயன்றேன். ஆனால் வாயை துணிகொண்டு அடைத்து விட்டார்கள். நான் ஓட முயற்சித்தேன், ஆனால் பயனில்லை. மூன்று ஆண்கள் என்னை கடத்திச் சென்றனர். நான் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தேன். பாக்தாவை கடந்து செல்லும் வழியில் நான் தொடர்ந்து போராடினேன்.
ஆனால் ஒரு விவசாயி முழு சம்பவத்தையும் பார்த்து என் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டனர். உள்ளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. என்னைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஐபிசி பிரிவுகள் 365, 363, மற்றும் 334 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யபட்டது.
மறுநாள் இரவு 9 மணியளவில், கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் டும்டம் என்ற இடத்தில் போலிசார் என்னைக் கண்டுபிடித்தனர். நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டு குற்றவாளிகளை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், என்னை கடத்திய 3 பேரும் மாயமாகிவிட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, கடத்தல்காரர்களில் ஒருவர் எனது கிராமத்திற்குத் திரும்பி வந்ததை அறிந்தேன்.
எனது பெற்றோர்களும், என்னை மீட்க உதவிய உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனமான மாலிபோட்டா சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான சங்கம் (மேட்) உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. ஆனால் அப்போதும் அவர் தப்பி ஒடிவிட்டார். மீண்டும் ஒரு நாள் அந்த கடத்தல் காரர் என் முன்னால் வந்து வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினான். நான் இந்த தகவலை என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல்கள் வந்தன.
5 மாதங்களுக்குப்பிறகு நான் மீண்டும் கடத்தப்பட்டேன். கணக்கு டியூஷன் முடித்து விட்டு, வரும்போது என்னை கடத்தல்காரர்கள் வண்டியில் கடத்திச் சென்றனர். எனது அம்மா பதற்றமடைந்து மீண்டும் காவல்நிலையத்தை நாடினார். காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று என் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனால் மேற்கு வங்க மனித வள ஆணையம், முதலமைச்சர், குழந்தைகள் மேம்பாடு மற்றும் நலக்குழு ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து, என் அம்மாவுக்கு தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தொலைபேசியில் பேசியவர் தெரிவித்தார். விசாரணையில் கடத்தல்காரன் மும்பையில் வேலை செய்கிறான் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் ஒரு தனியார் நிறுவனம் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நான் மீட்கப்பட்டேன்.
மீட்கப்பட்ட பின்னர், என்னை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று குழந்தைகள் நலக் குழுவின் காவலில் வைத்தார். நான் மகாராஷ்டிரா காவல்துறைக்கு எனது சாட்சியத்தை அளித்தேன். என்னை அவர்கள் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். இதன் முடிவுகள் என்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மற்றும் என்னை அவமானப்படுத்தியது.
அந்த 5 மாதங்களில் கடத்தல்காரர்கள் என்னை தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள். இதனால் கருகலைப்பு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. நான் மேற்குவங்கத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருக்கும் பெண்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டேன். நான் தற்போது எனக்கு நடந்த எல்லாவற்றையும் குறித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன், என்கிறார்.