Stock News: உச்சம் தொட்ட பங்குச் சந்தையில் சரிவு: சென்செக்ஸ் 100+ புள்ளிகள் வீழ்ச்சி!
சென்செக்ஸ் 84,000 புள்ளிகளையும், நிஃப்டி 26,000 புள்ளிகளையும் கடந்த மறுநாளில் இந்திய பங்குச் சந்தைகளில் சற்றே சரிவு நிலை காணப்படுகிறது.
சென்செக்ஸ் 84,000 புள்ளிகளையும், நிஃப்டி 26,000 புள்ளிகளையும் கடந்த மறுநாளில் இந்திய பங்குச் சந்தைகளில் சற்றே சரிவு நிலை காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.25) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 171 புள்ளிகள் சரிந்து 84,743.04 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 48.7 புள்ளிகள் சரிந்து 25,891.70 ஆக இருந்தது.
கடந்த நான்கு வர்த்தக நாட்களாக ஏற்றம் தொடர்ந்த இந்தியப் பங்குச் சந்தையில் இன்று காலை ஆரம்பம் முதலே சரிவு நிலை நீடிக்கிறது. பிற்பகலுக்குப் பின்னரும் நெகட்டிவ் வைப் தொடர்ந்தது முதலீட்டாளர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியது.
இன்று பிற்பகல் 12.20 மணியில் சென்செக்ஸ் 102.44 புள்ளிகள் (0.12%) சரிந்து 84,811.60 ஆகவும், நிஃப்டி 60.15 புள்ளிகள் (0.23%) சரிந்து 25,880.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி சமீபத்தில் வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க பங்குச் சந்தையின் வர்த்தகமும் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. அத்துடன், இன்றைய தினம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்தது இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணம் ஆகும்.
ஏற்றம் காணும் பங்குகள்:
பவர் கிரிட்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
ஹெச்டிஎஃப்சி பேங்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
நெஸ்லே இந்தியா
அதானி போர்ட்
இன்ஃபோசிஸ்
டாடா மோட்டார்ஸ்
எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.83.53 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan