Stock News: பங்குச் சந்தையில் தொடரும் தடுமாற்றம் - சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு!
இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றத்துடனே வர்த்தகம் தொடர்கிறது. ஏற்றமும் இறக்குமுமாக நிலையற்ற தன்மை நீடிக்கிறது.
இந்திய பங்குச் சந்தைகளில் தடுமாற்றத்துடனே வர்த்தகம் தொடர்கிறது. ஏற்றமும் இறக்குமுமாக நிலையற்ற தன்மை நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.6) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 280.38 புள்ளிகள் உயர்ந்து 78,551.66 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 77.25 புள்ளிகள் உயர்ந்து 23,773.55 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் கண்டாலும், அதன்பின், மீண்டும் தடுமாற்றம் அடைந்தது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை நீட்டிக்கச் செய்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 251.09 புள்ளிகள் (0.32%) சரிந்து 78,020.19 ஆகவும், நிஃப்டி 82.40 புள்ளிகள் (0.35%) சரிந்து 23,613.90 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளும் சாதகமான போக்குதான் நிலவுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தின் காரணமாக, இந்திய பங்குச் சந்தை வர்த்தகத் தொடக்கத்தில் ஓரளவு முன்னேற்றம் நிலவியது. எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முடிவுகளுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த பங்குகளை விற்கவே ஆர்வம் காட்டியதால் பங்குச் சந்தையில் தடுமாற்றம் தொடர்கிறது.

ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
டெக் மஹிந்திரா
இன்ஃபோசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
டிசிஎஸ்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ
கோடக் மஹிந்திரா பேங்க்
விப்ரோ
சன் ஃபார்மா
பஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா குறைந்து ரூ.87.57 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan