Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையன்று (28-05-2024) சற்றே உயர்வுடன் தொடங்கின.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க் கிழமையன்று (28-05-2024) சற்றே உயர்வுடன் தொடங்கின.
சென்செக்ஸ் சற்று முன் நிலவரப்படி, 75489.42 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 60 புள்ளிகள் உயர்ந்து 22,992.30 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 75 புள்ளிகள் பின்னடைவு கண்டு 49,207 புள்ளிகளாகவும் எந்த நிலையிலும் உயர்வுப்பாதையில் செல்லும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு இன்று 317.12 புள்ளிகள் சரிவடைந்து 47,638 புள்ளிகளாக உள்ளது.
காரணங்கள்:
ஆசியப் பங்குச் சந்தைகளின் பாசிட்டிவ் நிலையினாலும் மும்பைப் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வங்கிகளின் பங்குகள் உயர்ந்ததாலும் இன்று பங்குச் சந்தையில் சற்றே ஏற்றம் காணப்படுகிறது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
விப்ரோ
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
ஹிண்டால்கோ
ஸ்ரீராம் பைனான்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
மாருதி
டெக் மகீந்திரா
பீபிசிஎல்
பிரிட்டானியா
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே பின்னடைவு கண்டு இன்று ரூ.83.15ஆக உள்ளது.