Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வளர்ச்சி+ வருமானம் - யூடியூப்பால் எப்படி முன்னேறினோம்?- Tech Boss யூடியூபர்களின் சக்சஸ் கதை!

ஒரு யூடியூப் சேனலை எப்படி பயனுள்ளதாகவும் லாபகரமானதாகவும் செயல்படுத்தலாம் என்பதற்கான முன்உதாரணம் மதுரை யூடியூபர்ஸ் விஜய் கார்த்திகேயன் மற்றும் சுதர்ஷன். டெக்பாஸ் சேனல் வெற்றியின் ரகசியங்கள் என்ன?

வளர்ச்சி+ வருமானம் - யூடியூப்பால் எப்படி முன்னேறினோம்?-  Tech Boss யூடியூபர்களின் சக்சஸ் கதை!

Thursday January 05, 2023 , 6 min Read

பொழுதுபோக்கிற்சாக சமூக வலைதளங்களை பயன்படுத்தியவர்களை கன்டென்ட் கிரியேட்டர்களாக மாற்றி யூடியூப் சேனல், முகநூல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் திறமையை வெளிப்படுத்துபவர்களாக்கியது தொழில்நுட்பம்.

இலவச டேட்டாவை பயனுள்ள வகையில் செலவிடலாம் என்று எண்ணி 2016ம் ஆண்டு முதலே மிகச்சரியாகப் பயன்படுத்தத் தொடங்கியவர் மதுரை மண்ணின் மைந்தன் விஜய் கார்த்திகேயன்.

அடடா கிரியேட்டர்-இன் (Adada creators) நிறுவனரான இவர், ஒரு பி.டெக் பட்டதாரி. இரண்டரை ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றியவர், பின்னர் 2009ம் ஆண்டில் மதுரையில் சுயமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப்சைட் வடிவமைக்கும் வகையிலான நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்.

இப்படியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்துவதிலும் ஆர்வம் வந்திருக்கிறது. சின்ன சின்ன வீடியோக்களாக போட்டு குறுகிய காலத்திலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்றதால் கணிசமான லாபத்தையும் யூடியூப் மூலம் பெற்றிருக்கிறார் விஜய். அப்படி அவர் உருவாக்கி வளர்ந்த சேனல் தான் ’Tech Boss'. இன்று 33 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்கும் இந்த சேனலின் கதையை பகிர்ந்து கொண்டார் வளர்ச்சி+ வருமானம் - யூடியூப்பால் எப்படி முன்னேறினோம்?- Tech Boss யூடியூபர்களின் சக்சஸ் கதை!.

’Tech Boss' சேனல் உருவான கதை

Techboss founders

Tech Boss - சுதர்சன் (இடது) விஜய் கார்த்திகேயன் (வலது)

“தொடக்கத்தில் இருந்தே எங்களின் சேனல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இதையே முழு நேரமாக செய்யலாம் என்று ஆரோக்கியம், சுற்றுலா, வாழ்வியல், தற்சார்பு, தொழில்நுட்ப அப்டேட்கள், சமூக அக்கறையுள்ள கருத்துகள் என்று பல genre-களில் நானும் என்னுடைய நண்பர் முருகேசும் இணைந்து யூடியூப் சேனல்களைத் தொடங்கினோம்,” என்றார் விஜய் கார்த்திகேயன்.

இவர்களின் சேனல்களில் ஒன்று தான் ’டெக் பாஸ்’ (Tech Boss). தனித்தனியாக அடடா கிரியேட்டர்ஸ் டெக் பாஸ் (Tech Boss), டெக் பட்டி(Tech Buddies), கோவை எக்ஸ்பிரஸ் (covai express), ஃபுட் ஃபன் ட்ராவல்(Food Fun Travel) என பல்வேறு சேனல்களை நடத்தி வருகிறார்கள்.

”அப்போது எங்களிடம் வேலை கேட்டு வந்தவர் மதுரையைச் சேர்ந்த சுதர்சன். அவருடைய கருத்துகளும் எங்களுடைய கருத்துகளும் ஒன்றாக இருந்தது. தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதனை ஒரு சுவாரஸ்யமான படைப்பாக்கும் திறமையும் சுதர்சனுக்கு இருந்தது. அவரின் முதல் வீடியோவே பலரையும் சென்றடைந்தது.”

டெக் பாஸ் சேனல் எந்த நிதியையும் எதிர்பார்க்காமல் லாபம் பெற்றுத் தரக்கூடிய சுய நிலையை அடைந்தது. அதனால் சுதர்சனே, டெக் பாஸின் பங்குதாரராகவும் கன்டென்ட் கிரியேட்டராகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்றார் விஜய்.

தன் தொடக்கம் பற்றி ‘டெக் பாஸ்’ சுதர்சன் பகிர்கையில், 2016ல் நான் கல்லூரி முடித்த காலத்தில் யூடியூப் சேனல் பற்றிய பெரிய புரிதல் எதுவும் இல்லாமல் விளையாட்டுத் தனமாக ஒரு சேனலை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வந்தேன். அதில் இருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

“கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த கால கட்டம் அது. எதாவது ஒரு வேலைக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன், யதேச்சையாக விஜய் கார்த்திகேயனை வேலை வேண்டி சந்தித்தேன். அப்போது அவர் வீடியோ கன்டென்ட் கிரியேட் செய்வது குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். எனக்கும் அது பிடித்துப் போகவே அவருடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினேன்,” என்றார் சுதர்சன்.
சுதர்சன்

சுதர்சன், யூடியூபர், டெக் பாஸ்

’டெக் பாஸ்’ யூடியூபில் வெற்றி பெற்றது எப்படி?

Gadgets, Appகளாலேயே இந்த நூற்றாண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பங்களின் உதவியால் ஒவ்வொரு நிமிடமும் மென்பொருள்கள் புதிய பரிமாணத்தை எட்டுகின்றன. இவற்றை சாமானியர்கள் எளிதில் புரிந்து கொள்ள பாலமாக திகழ்கிறது ’டெக் பாஸ்.’

WhatsApp, facebook, technology updates, புது வரவு மொபைல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களின் செயல்பாடுகள், சின்ன சின்ன மென்பொருள் பிரச்னைகளுக்கு நாமே காணக்கூடிய தீர்வு என எல்லோருக்கும் புரியும் விதத்தில் அவற்றை விளக்கி வீடியோக்களாக பதிவிட்டு வருகிறோம்.

ஆரம்ப காலத்தில் என்னிடம் இருந்த ரூ.10 ஆயிரம் செல்போனிலேயே வீடியோவை பதிவிட்டு அதனை எடிட் செய்து பதிவேற்றம் செய்து வந்தேன். எனக்கு வீடியோ எடிட்டிங்கில் ஆர்வம் இருந்ததால் அதனை கற்று வைத்திருந்தேன், அதுவும் எனக்கு கைகொடுத்தது.

”அதன் பின்னர், சொந்த பயன்பாட்டிற்காக விஜய் அண்ணா வாங்கி இருந்த வாங்கி இருந்த Oneplus போனில் வீடியோவை பதிவு செய்து அதனை பிறகு கணினியில் எடிட் செய்து பதிவேற்றம் செய்தேன். ஓராண்டில் டெக்பாஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தனியாக ஒரு விசிடி கேமிரா வாங்கி சுமார் 2 ஆண்டுகள் நானே கன்டென்ட், வீடியோ மற்றும் எடிட்டிங்கை செய்து வந்தேன்," என்கிறார் சுதர்சன்.

டெக்னாலஜி பற்றி விமர்சனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒரு பொருளைப் பற்றி கருத்து தெரிவிக்கும் போது அதன் manual-guideஐ படித்து மட்டுமே விளக்கிவிட முடியாது. அதனை பயன்படுத்தினால் மட்டுமே அதில் உள்ள பயன்களும் கஷ்டங்களும் தெரியும்.

அந்த காலகட்டத்தில் சொந்தமாக ஒவ்வொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தி விமர்சனம் செய்யும் அளவிற்கு பொருளாதார நிலைமை இல்லை. கேட்ஜெட்கள் கேட்டு மொபைல் விற்பனை செய்யும் நிறுவனங்களை அணுகிய போது அவர்கள் ஏளனமாக சிரித்தனர்.

”இருந்தாலும் மனம் தளராதே, காலம் மாறும் ஒரு நாள் இதே நிறுவனங்கள் தங்களது பொருட்களின் பிராண்டிங்கிற்காக உன்னை அணுகி வரும் என்று விஜய் அண்ணா ஊக்கம் தந்தார். அந்த ஊக்கத்தினால் நண்பர்கள், உறவினர்கள், பார்வையாளர்கள் என புதிதாக கேட்ஜெட் வாங்குபவர்களிடம் இருந்து அவற்றை பெற்று பயன்படுத்தி அதை ரிவ்யூ செய்ததாக,” கூறினார் சுதர்சன்.
டெக் பாஸ்

டெக் பாஸ் குழுவினர்

தேடி வரும் ப்ராண்ட்கள்

எங்களின் உழைப்பு வீணாகவில்லை, 5 ஆண்டுகளில் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. பிராண்டிங்கிற்காக மொபைல் நிறுவனங்கள் எங்களை அணுகி ப்ராடக்ட்களை விமர்சனத்திற்காகத் தருகின்றனர்.

“நிறுவனங்களிடம் இருந்து Product-கள் கிடைக்காவிட்டாலும் கூட ஒரு பொருளின் விலை ரூ.50,000 ஆக இருந்தாலும் ரூ.5 லட்சமாக இருந்தாலும் அதனை நாங்களே சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தி அதில் இருக்கும் குறை நிறைகள் என்ன என்று மக்களிடத்தில் சொல்கிறோம்.”

இதே போன்று வீடியோக்கள் உருவாக்குவதிலும் நாங்கள் சில முன்னேற்றங்களைச் செய்திருக்கிறோம். முதலில் ஒரு வீடியோ எடுத்து அதனை எடித்து செய்து பதிவிடுவது என்று மட்டுமே இருந்தோம். ஆனால், இப்போதோ ஒரு குழுவாக செயல்படுகிறோம். ஒரு கன்டெட் பற்றி வாரக்கணக்கில் கருத்துகளை பகிர்ந்து அதற்கென ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, தனியாக ஒரு வீடியோகிராபர், எடிட்டர் என்று professional careerஆக இதைச் செய்து வருகிறோம், என விளக்கினார் சுதர்சன்.

ப்ராடக்ட்களை விமர்சனம் செய்து அவற்றிற்கு விளம்பரம் செய்வதை மட்டுமே ’டெக் பாஸ்’ செய்யவில்லை. மாறாக மொபைல் போன் ஏன் வெடிக்கிறது, பவர் பேங்க் செயல்படுவதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் என்ன, சார்ப்ட்வேர்களை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம் போன்ற தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு அவற்றின் பலனை அனுபவிக்கும் டெக்கிகளாக மக்களை மாற்றும் செயலையும் செய்து வருகின்றனர்.

டெக் பாஸின் தொடக்கக் காலத்தில் மாதத்திற்கு அதிக பட்சம் 30 முதல் 40 வீடியோக்கள் கூட பதிவு செய்திருக்கிறோம். அது இப்போது மாதத்திற்கு அதிகபட்சம் 8 வீடியோ என்ற அளவில் இருந்தாலும், வீடியோக்களின் தரம் மற்றும் அதில் இருக்கும் கருத்து நன்கு விவாதிக்கப்பட்டு பின்னர் உருவம் பெறுவதால் நாளுக்கு நாள் மக்களிடத்தில் எங்கள் மீதான நம்பிக்கை பலம் பெற்றிருக்கிறது.

டெக் பாஸிற்கு யூடியூபில் 33 லட்சம் சப்ஸ்கிரைபர்கள், முகநூலில் 15 லட்சம் ஃபாலோயர்கள், மற்றும் இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் followers உள்ளனர் என்று மகிழ்கிறார் சுதர்சன்.
டெக்பாஸ்

டெக் பாஸ் குழுவினருடன் சுதர்சன்

வருங்கால திட்டம் மற்றும் வருவாய் வழிகள்

2016ம் ஆண்டு முதலே பல்வேறு யூடியூப் சேனல்கள் இருந்தாலும் ஆரம்ப காலத்தில் இருந்தே டெக் பாஸ் சேனல் லாபம் தந்து கொண்டிருக்கிறது. நிரந்தர வருமானம் கிடைக்கத் தொடங்கியதால் அதில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

பின்னர், அதன் வளர்ச்சியானது ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இப்போது டெக்பாஸை தனி பிராண்டாக கொண்டு செல்வதற்கான எதிர்காலத் திட்டத்தை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார் விஜய் கார்த்திகேயன்.

“எனக்கும் சுதர்சனுக்கும் யூடியூப் சேனல் மிகப் பிடித்தமான மனதிற்கு திருப்தி தரக்கூடிய ஒரு பணி என்பதால் மனநிறைவோடு இதைச் செய்கிறோம். அதோடு பொருளாதார ரீதியிலும் இது எங்களுக்கு உதவுகிறது.”

நிரந்தர வருமானம் இருக்காது என்பதால் யூடியூபர் என்பதை ஒரு profession ஆக பலரும் ஏற்பதில்லை. எங்களுக்கும் கூட இதை விட அதிக லாபம் தரும் ஒரு பணி கிடைத்தால் நிச்சயமாக அதைச் செய்வோம். அதற்காக இதில் கவனம் செலுத்த மாட்டோம் என்று அர்த்தமல்ல, இதில் வீடியோக்கள் பதிவிடும் எண்ணிக்கை வேண்டுமானால் குறையலாம். எதிர்காலத்தில் நாடு முழுவதும் இருக்கும் டெக் பிரியர்களுக்கு பயன்படும் விதத்தில் டெக் பாஸை எடுத்துச் செல்வதை நோக்கமாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிறார் விஜய்.

மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். அப்பா கூலித் தொழிலாளி, அம்மா தையற் தொழிலாளி, தங்கை கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறார். பள்ளிப் படிப்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியாளர், படித்த வேலைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத வேலை என்றே நாட்கள் சென்றன.

“டெக் பாஸ் என்னுடைய கனவை நினைவாக்கிய தளம், தனி நபராக நான் யார்? எனக்குள் இருக்கும் திறமை என்ன என்பதை வைத்து மற்றவர்கள் என்னை அங்கீகரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. நிலையான மாத வருமானம் இல்லாததால் தொடக்கத்தில் குடும்பத்தினர் புரிந்து கொள்வதில் கஷ்டம் இருந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியிலும் வளர்ச்சியைத் தருவதால் உபயோகமான ஒரு வேலையை செய்கிறேன் என்று அவர்கள் நம்புகின்றனர். எனக்கு பொருளாதாரம், குடும்பத்தினரின் மகிழ்ச்சி என்பதோடு கூடுதலான மனநிம்மதி + நிறைவு கிடைக்கிறது எனவே யூடியூபராக இருப்பதில் தனித்துவமான பெருமை,” என்று சொல்கிறார் சுதர்சன்.

கேட்ஜெட்கள் பற்றிய விமர்சனங்கள் செய்யும்போது, எந்த ஒரு பொருளையும் மக்கள் வாங்க வேண்டும் என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. மேலும் பார்வையாளர்களிடம் இருந்தும் கூட வீடியோக்களுக்கு நேர்மறையான பின்னூட்டங்களே வருவதால் மேலும் உத்வேகத்துடன் தொடர்ந்து இத்தளத்தில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சப்ஸ்கிரைபர்களின் கமென்ட்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகளை உள்வாங்கி அதற்கேற்ப அடுத்தடுத்த வீடியோக்களில் மாற்றங்களையும் செய்து வருகிறோம். தொழில்நுட்பத்தை ஒரு சலிப்பான முறையில் வெளிப்படுத்தாமல் கேளிக்கையோடு அறிவையும் சேர்த்து கிரியேட்டிவாக கொடுக்கும் விதத்தில் வீடியோக்களை உருவாக்கி வருகிறோம்.

கன்டெட்க்கு அவசியம் என்றால் எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துவிடுவோம். உதாரணமாக துபாயில் ஐ-போன் விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று கருத்து கேட்டிருந்தார்கள் சப்ஸ்கிரைபர்கள். இதற்கு கூகுளில் தேடியே எங்களால் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்க முடியும். ஆனால், நாங்கள் துபாய்க்கே சென்று அங்கு ஒரு ஐ-போன் வாங்கி துபாயில் ஐ-போன் வாங்குவதற்கும் இந்தியாவில் ஐ-போன் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம், எவ்வளவு விலை மாற்றம், என்ன பயன், இதை அங்கிருந்து எடுத்து வர முடியுமா என்று தெளிவு தரும் வீடியோவாக வெளியிட்டோம்.

”அதிக பணம் செலவு செய்தே இந்த வீடியோவை எடுத்தோம் இருந்தாலும் அந்த கன்டென்ட்க்கு அவசியம் என்பதால் அப்படிச் செய்தோம். அதே சமயம் ஒரு ரூமுக்குள்ளே வைத்தும் தரமான ஒரு கன்ட்டென்டை உருவாக்கி விடலாம்,” என்கிறார் சுதர்சன்.

எந்த நோக்கத்திறக்காக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறோமோ அது நிறைவேறினாலே நாம் வென்றுவிட்டோம் என்று தான் அர்த்தம். உழைப்பும், நேரமுமே மூலதனம், மற்றபடி கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை செலவிற்கு என ஒதுக்கி வைத்துவிட்டு கன்டென்ட் குழுவிற்கு நிரந்தரமான ஊதியத்தை வழங்கும் சேனலாக டெக் பாஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அடுத்தகட்டமாக எங்களுடன் இணைந்து கேட்ஜெட் நிறுவனங்கள் செயல்பட விரும்பினால் அதனை வர்த்தக ரீதியில் கொண்டு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம், என்கிறார் விஜய் கார்த்திகேயன்.