Stock News: பங்குச் சந்தையில் ஏற்றம் நீடிப்பு - சென்செக்ஸ் 300+ புள்ளிகள் உயர்வு!
சர்வதேச போக்குகளின் எதிரொலியாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தாலும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது.
சர்வதேச போக்குகளின் எதிரொலியாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தாலும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் உயர்வு கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (டிச.24) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 192.03 புள்ளிகள் உயர்ந்து 78,732.20 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 44.65 புள்ளிகள் உயர்ந்து 23,798.10 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தை ஏறுமுகமாக இருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கூட்டியுள்ளது.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் சென்செக்ஸ் 332.37 புள்ளிகள் (0.42%) உயர்ந்து 78,872.54 ஆகவும், நிஃப்டி 80.75 புள்ளிகள் (0.34%) உயர்ந்து 23,834.20 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் நேர்மறை எண்ணிக்கையுடனே நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆனால், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவுகிறது. சர்வதேச போக்குகளுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் சாதக நிலை காணப்படுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எல் அண்ட் டி
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
இன்ஃபோசிஸ்
ஐடிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
எஸ்பிஐ
பஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
இண்டஸ்இன்ட் பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா ஸ்டீல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து ரூ.85.16 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan