தனது 39 மில்லியன் டாலர் மதிப்பு பங்குகளை விற்ற Freshworks நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம்!
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ரூபூதம், 15.33 டாலர் முதல் 16.50 டாலர் வரை விலைகளுக்கு உள்பட்ட சராசரி மதிப்பில், பல்வேறு பரிவர்த்தனைகளில் 2.5 மில்லியன் டாலர் ஏ ரக பங்குகளை விற்றுள்ளார்.
ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் கிரிஷ் மாத்ரூபூதம், 39 மில்லியன் டாலர் மதிப்பிலான தனது பங்குகளை விற்றுள்ளதாக, அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பில் (SEC). நிறுவனம் சமர்பித்துள்ள ஆவணம் தெரிவிக்கிறது.
டிசம்பர் 19 முதல் 19ம் தேதி வரை, 15.33 டாலர் முதல் 16.50 டாலர் வரை விலைகளுக்கு உள்பட்ட சராசரி மதிப்பில், பல்வேறு பரிவர்த்தனைகளில் 2.5 மில்லியன் டாலர் ஏ ரக பங்குகளை விற்றுள்ளதாக இந்த ஆவணம் தெரிகிறது. SEC Rule 10b5-1 கீழ் இந்த பங்குகள் விற்கப்பட்டுள்ளன.
10b5-1 விதி, செயல் அதிகாரிகள், இயக்குனர்கள் போன்ற நிறுவனத்திற்குள் இருக்கும் அதிகாரிகள், நிறுவனத்தின் பங்குகளை விற்க அல்லது வாங்க முன் தீர்மானித்த வர்த்தக திட்டத்தை கொண்டிருப்பதை அனுமதிக்கும் வகையில் எஸ்.இ.சியால் உருவாக்கப்பட்டது. இந்த விதி, இன்சைடர் டிரேடிங் புகார்களுக்கு எதிரான தற்காப்பை அளிக்கிறது.
இந்த விதியின் படி, பொதுவெளியில் அல்லாத தகவல்களை கொண்டிருந்தாலும் கூட, முன் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் படி, நிறுவனத்திற்குள் இருப்பவர்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். நிறுவனத்திற்குள் இருப்பவர்கள், பொதுவெளியில் இல்லாத எந்த தகவலையும் பெற்றிராத போது நல்லெண்ண அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் வர்த்தக நாள், விலை மற்றும் அளவு அல்லது இதை அறிவதற்கான வழிகளை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் நிறுவன சி.இ.ஓ-வில் இருந்து செயல் தலைவராக மாறிய கிரிஷ் மாத்ரூபூதம் நிறுவனத்தில் 4 சதவீத பங்குகளை தக்க வைப்பதோடு, குறிப்பிட்ட வாக்களிக்கும் அதிகாரம் கொண்ட மிகப்பெரிய தனிநபர் பங்குதாரராக விளங்குகிறார்.
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவன பங்குகள் தற்போது 15.33 டாலர் அளவில் வர்த்தம் ஆகின்றன. கடந்த 52 வாரங்களில் இதன் விலை 10.81 டாலர் முதல் 24.34 டாலர் வரை ஏற்ற இறக்கத்தில் இருந்திருக்கிறது. இந்த பரிவர்த்தனைகளை மீறி, 2013 டிசம்பரில் 19.68 டாலர் என்பதில் இருந்து 20.48 டாலர் சரிந்துள்ளது.
இந்த முன்னணி சாஸ் சேவை நிறுவனம், 22 சதவீத வருவாய் அதிகரிப்பை தெரிவித்திருந்தது. 2024 செப்டம்பர் வரை காலாண்டில் வருவாய் 186.6 மில்லியன் டாலராக இருந்தது. முந்தைய இணையான மூன்றாம் காலாண்டில் இது 153.6 மில்லியன் டாலராக இருந்தது.
நாஸ்டக்கில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம், இந்த காலாண்டில் தனது நஷ்டத்தை 3.55 சதவீதம் குறைத்து 29.9 மில்லியன் டாலராக கொண்டிருந்தது, முந்தைய இணையான காலாண்டில் இது 31 மில்லியன் டாலராக இருந்தது.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan