Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'சின்ன தீர்வு உலக அளவு வெற்றி' - ரியல் டைம் மானிடரிங் மென்பொருள் உருவாக்கி வெற்றிக் கண்ட ஸ்டார்ட்-அப் workfolio!

தனியாக ஒரு அலுவலகம் இல்லை, அடிக்கடி டீம் மீட்டிங் இல்லை. ஒற்றைத் தீர்வை வைத்து ஆண்டுக்கு 5,00,000 டாலர் வருமானம் ஈட்டுகிறது தமிழ்நாட்டைச் சேர்ந்த workfolio. இது எப்படி சாத்தியமானது?

'சின்ன தீர்வு உலக அளவு வெற்றி' - ரியல் டைம் மானிடரிங் மென்பொருள் உருவாக்கி வெற்றிக் கண்ட ஸ்டார்ட்-அப் workfolio!

Friday December 20, 2024 , 5 min Read

உலகிலேயே மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சூழல் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. 2020ல் மக்களை முடக்கிப் போட்ட கோவிட் பெருந்தொற்று தொழில்துறையினருக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்தது. ஊரடங்கு காலத்தில் தங்களது நிறுவனம் தொடர்ந்து இயங்க உருவாக்கிய தீர்வின் மூலம் இன்று உலக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டு வெற்றியடைந்து வருகிறது அருண் கார்த்திக் மற்றும் ரகுபதி தொடங்கிய Workfolio ஸ்டார்ட்-அப். அதன் சக்சஸ் பயணம் பற்றி 'ஒர்க்ஃபோலியோ' இணைநிறுவனர் ரகுபதி செல்வராஜ் யுவர் ஸ்டோரி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

Workfolio பயணம் எங்கிருந்து தொடங்கியது?

புதிதான விஷயங்களை செய்து பாக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். எம்சிஏ படிச்சிட்டு ஒரு ஸ்டார்ட்-அப்'பில் வேலை செஞ்சிட்டு இருந்தேன். அதுலேருந்து மாற்றத்த தேடி 2017ல 'DesignQube'-னு ஒரு நிறுவனத்துல ஐடி துறையோட முதல் ஊழியரா பணியில சேர்ந்தேன். அது ஒரு interior designing கம்பெனி, அதற்கு சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர்ல அலுவலகங்கள் இருந்தது. அங்க வேலை செய்ற ஊழியர்களுக்கான மொபைல் செயலி, வெப்சைட் உள்ளிட்டவற்றை என் தலைமையின் கீழ் இயங்கிய ஐடி குழுவினர் உருவாக்கினார்கள்.

workfolio

ரகுபதி செல்வராஜ், இணைநிறுவனர், workfolio

2020ல் கோவிட் தாக்கத்தால ஊழியர்கள் எல்லாம் அவங்களோட சொந்த ஊர்களுக்குப் போக ஆரம்பிச்சாங்க. கோவிட் தாக்கம் வரை இந்தியாவுல நகரத்த விட்டு தூரத்துல இருக்குற ரிமோட் பகுதிகள்லேருந்து வேலை செய்றது அவ்வளவா பிரபலமடையல. நாங்க என்ன நினைச்சோம்னா எங்களோட டீமை வெச்சிகிட்டே ரிமோட் ஏரியாக்கள்ல வேலை செய்றவங்களுக்கு ஒரு ப்ராடக்ட் பில்ட் பண்ணலாம்னு கோவிட் தாக்கம் தொடங்குற 2 மாசத்துக்கு முன்னாடியே எச்சிரக்கையா பேசத் தொடங்கினோம்.

"சீனாவ போல இங்கயும் ஊரடங்கு வந்தா எப்படி 100 ஊழியர்களையும் பாதிப்பு இல்லாம ரிமோட் ஏரியாக்கள்லேருந்து தொடர்ந்து செயல்பட வைக்கப் போறோம்னு திட்டமிட்டோம். Google chrome extension-ல ஒரு tool-ஐ உருவாக்கினோம். அதுல ஒரு ஊழியர் வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி clock in நேரத்தை கொடுக்க வேண்டும். அந்த ஊழியர் எத்தனை மணிக்கு வேலைய தொடங்குறாரு, அவங்க பிரவுசர்ல என்ன பண்றாங்கன்னு குறிப்பிட்ட இடைவெளில screenshot எடுக்குறதுன்னு அடிப்படையான ஊழியர்களோட Work from Home செயல்கள கண்காணிச்சு தகவல்கள அனுப்புற software develop பண்ணோம்."

உலகம் முழுவதும் இருக்குறவங்க ரிமோட் பகுதியில வேலை செய்றவங்கள கண்காணிக்க இது போன்ற ஒரு மென்பொருளோட தேவை சந்தையில இருந்துச்சு. ஆன்லைன்ல தேடிப்பார்த்தப்ப அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒரு நபருக்கு மாதத்திற்கு 8 டாலர் விலையில அவற்றை வழங்கிக் கொண்டிருக்குறத தெரிஞ்சுகிட்டோம். மாதத்திற்கு ஒவ்வொரு ஊழியருக்கும் அவ்வளவு செலவு செய்றதுங்கிறது முடியாத காரியமா இருந்துச்சு.

"ஒரு Productக்கு தேவை இருக்கு அதுக்கான அடிப்படை விஷயத்த நாம செஞ்சிருக்கோம், அத மேலும் மேம்படுத்தினா அதுக்கான மார்க்கெட் இருக்குங்கிறத புரிஞ்சுகிட்டோம். Design cube நிர்வாக இயக்குனர் அருண் கார்த்திக் கிட்ட workfolio-வை ஒரு Saas Productஆ டெவலப் பண்ணலாம்னு சொன்னோம். அவருக்கும் அந்த concept பிடிச்சிருந்து, 2020ல ஆரம்பிச்சு 2021 ஏப்ரல்ல Workfolio-வை பயன்பாட்டுக்கு கொடுத்தோம்."
அருண் கார்த்திக்

அருண் கார்த்திக், நிறுவனர், workfolio

Workfolio நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

ரிமோட் பகுதிகளில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வைத் தருவதே workfolio-வின் நோக்கம். ஒரு HR செய்ய வேண்டிய வேலையை எங்களுடைய மென்பொருள் செய்கிறது. உரிய நேரத்தில் பணியை முடிக்க ஊழியர் திறம்பட செயல்படுகிறாரா என்பதை மட்டுமின்றி ஊழியர்கள் எவ்வளவு நேரம் பணியாற்றுகிறார்கள், கொடுக்கப்படும் டாஸ்குகளை நேரத்திற்குள் முடிக்கிறார்களா மற்ற டீம் மெம்பர்களுடனான ஒத்துழைப்பு எவ்வாறு இருக்கிறது உள்ளிட்ட பணியாளர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிறுவனத்தால் அறிந்து கொள்ள முடியும்.

ரிமோட் பகுதிகளில் இருந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஊழியர்களுக்கு புதிய ஸ்டார்ட் அப்`களும் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு ஏற்ப workfolio மென்பொருள் அவர்களின் நோக்கத்தை முழுஅளவில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உதவுகிறது.

"இந்த மென்பொருளை பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் தொழில்முனைவர்கள் ஊழியர்களைக் கண்காணிப்பதை ஒரு வேலையாக செய்ய வேண்டாம் என்கிற நிம்மதைய தந்துள்ளது. இதனால் அவர்களால் அடுத்தடுத்த திட்டங்களில் கவனத்தை செலுத்த முடிவதால் அவர்களின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது."

Workfolio சந்தித்த சவால்களும் பாடங்களும் என்ன?

எங்களுடைய பயணத்தில் நாங்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் என்றால் workfolio domain-ஐ இழந்தது. புதிதாக ஸ்டார்ட் அப் தொடங்கியவர்களுக்கு இப்படியான சூழல் என்பது நிச்சயமாக ஒரு பின்னடைவு. எங்களுக்கும் அப்படித் தான் இருந்தது.

"அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் workfolio-விற்கு உரிமை கோரியது. எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமலே domain அவர்களுக்கு மாற்றப்பட்டது. எனினும், நாங்கள் சோர்ந்து போகவில்லை. Getworkfolio என்கிற domainக்கு மாறினோம் www.getworkfolio.com என்பதே எங்களின் இணையதள பக்கம். எங்களுடன் பயணித்து வந்த clients தொடர்ந்து கொடுத்த ஆதரவினால் அந்த பின்னடைவில் இருந்து மீண்டு வந்தோம். அதுவே எங்களுடைய brand பயனர்களுடன் ஏற்படுத்தி இருந்த ஒரு பினைப்பு, ஒரு ப்ராடக்ட்சின் ஸ்திரத்தன்மை."
workfolio

நிதர்சன பிரச்னைகளுக்கான தீர்வைத் தருவதே ஒரு ஸ்டார்ட் அப் வெற்றி பெறுவதற்கான முக்கியக் காரணம். உலகஅளவில் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் ஒரு பிரச்னைக்கான தீர்வாக workfolio திகழ்வதே சர்வதேச அளவில் சென்றடைந்ததற்கான முக்கியக் காரணம்.

முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்க workfolio சுயமுதலீட்டில் செயல்படத் தொடங்கியது சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்பை தந்தது. வெளியில் இருந்து எந்த முதலீடுகளையும் பெறாமல் ஜீரோவில் தொடங்கிய எங்களது பயணம் 2024ல் ஆண்டுக்கு 5,00,000 டாலர் வருமானம் என்கிற வளர்ச்சி விகிதத்தை அடைந்திருக்கிறது.

workfoilio-வின் வளர்ச்சி எப்படி இருந்தது?

2021 ஏப்ரல் மாதம் workfolio பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டது முதலே உலகம் முழுவதிலும் இருந்த தொழில்துறையினரின் கவனத்தை ஈர்த்தது. சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்கள் ரிமோட் பகுதிகளில் பணியாற்றுபவர்களின் பணி நேர கண்காணிப்பை மேம்படுத்தும் தீர்வை நாங்கள் வழங்கினோம்.

தொழில் தொடங்கி 5 ஆண்டுகள் வரை வருமானம் சாத்தியமில்லை என்று பல ஸ்டார்ட்அப்கள் எண்ணும் நிலையில் சுய முதலீட்டில் தொடங்கிய workfolio இரண்டு ஆண்டுகளிலேயே லாபம் ஈட்டத் தொடங்கியது. உலக அளவில் நிலவும் பிரச்னை என்ன அதற்கான சரியான தீர்வு என்ன என்பதை வழங்கியதாலேயே 1,00,000 பயனர்களுடன் workfolio வெற்றியடைய முடிந்தது.
workfolio founders

Workfolioவில் புதிதாக என்ன இருக்கிறது?

Workfolio மற்றொரு Saas product மட்டுமல்ல, பணி அமைப்பை மாற்றுவதற்கான அடையாளம். எதிர்காலத்தில் பணிச் சூழல் எப்படி மாற்றம் காணப் போகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம்.

வேலைவாய்ப்பிற்காக கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழல் எதிர்காலத்தில் இருக்காது. Workfolio குழுவில் உள்ள 8 பேர் தமிழ்நாட்டின் வெவ்வேறு கிராமங்களில் இருந்தே செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கென தனியாக ஒரு அலுவலகமோ இவ்வளவு மணி நேர வேலை என்ற கட்டுப்பாடோ கிடையாது. அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று எங்களுக்கு நாங்களே ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ளோம். தேவையான நாளில் விடுப்பு விரும்பிய நேரத்தில் பணியாற்றலாம் என்று சுதந்திரமாக இயங்குகிறது எங்கள் குழு.

Workfolioவிற்கு client எப்படி கிடைத்தார்கள்?

எங்களுடைய மென்பொருள் பற்றி நாங்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை. தேவை இருப்பவர்கள் தாங்களாகவே search engine-இல் தேடி எங்களை அணுகுகிறார்கள். எங்கள் இணையதளம் மூலம் trial session எடுத்து பயன்படுத்திய பின் அவர்கள் பயனர்களாகின்றனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் workfolio-வை பயன்படுத்தி வருகின்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2 மாதங்களுக்கு முன்னர் workfolio பயன்படுத்தத் தொடங்கினர். கனமழையை கணக்கில் கொண்டு அவர்கள் இந்த திட்டமிடலைச் செய்திருந்தனர்.

பெருமழையால் விழுப்புரம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேல் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், எங்களது மென்பொருளை முன்கூட்டியே பயன்படுத்தி வந்த அந்த நிறுவனத்திற்கு பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இதுவே எங்களது வெற்றி. சின்ன சின்ன கிராமங்கள் முதல் உலக அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் workfolio தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.
workfolio team

workfolio குழு

எதிர்கால இலக்கு என்ன?

ஒரு எளிமையான tool ஆக தொடங்கிய workfolio, $5,00,000 வருடாந்திர தொடர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

வெற்றிக்கு ஒரு பெரிய குழுவோ அல்லது அதிக முதலீடோ தேவையில்லை விடாமுயற்சி, நவீன செயல்திட்டங்கள் இருந்தாலே வெற்றி எனும் இலக்கை அடைய முடியும். HR tech புதுமைக்கான அடுத்த அலையை வழிநடத்தும் பணியில் workfolio தற்போது ஈடுபட்டுள்ளது.

Workfolio போன்ற மென்பொருளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், “No office no limits” என்கிற எங்களின் தனித்துவமான தொலைநோக்கு பார்வை விரும்பிய நேரத்தில் பணியாற்றி, திறன்மிகு உற்பத்தியை உருவாக்க நினைக்கும் தொழில்துறையினர் தங்களின் குழுவை வெளிப்படைத்தன்மையோடு வழிநடத்த வழிவகுக்கிறது. இது போன்ற ஒரு அர்த்தமுள்ள சூழலை கட்டமைக்க நினைப்பவர்கள் தேவை அறிந்து ஒரு தயாரிப்பை உருவாக்கினால் வெற்றி நிச்சயம்.

சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால் சரியான பிரச்னைக்கு, சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கிராமப்புறங்களில் இருந்து செயல்படும் சிறிய குழுக்கள் கூட உலக நிறுவனங்கள் செயல்படும் விதத்தை மாற்ற முடியும், என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ரகுபதி.