Stock News: பங்குச் சந்தை மீண்டது; சென்செக்ஸ் 200+ புள்ளிகள் உயர்வு - ஐடி பங்குகள் ஏற்றம்!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:13 மணி நிலவரப்படி, 156.83 புள்ளிகள் உயர்ந்து 80,377.55 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 46 புள்ளிகள் உயர்ந்து 24,518.10 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (23-10-2024) மீண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 200+ புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 46 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:13 மணி நிலவரப்படி, 156.83 புள்ளிகள் உயர்ந்து 80,377.55 புள்ளிகளாகவும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 46 புள்ளிகள் உயர்ந்து 24,518.10 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 102.20 புள்ளிகள் உயர்வு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 763.60 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 583.46 புள்ளிகள் உயர்ந்தது. .
காரணம்:
பரந்துபட்ட சந்தைகளான பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் சற்றே மீண்டது. ஐடி நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதால் பங்குச் சந்தைகள் இன்று உயர்வுப்பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சர்வீஸ்
ஹெச்.டி.எஃப்.சி. பேங்க்
பஜாஜ் ஆட்டோ
அதானி எண்டர்பிரைசஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
எம் அண்ட் எம்
பவர் கிரிட்
எய்ச்சர் மோட்டார்ஸ்
என்.டி.பி.சி.
ஓ.என்.ஜி.சி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.07 ஆக உள்ளது.