Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

அப்துல் கலாம் பிறந்தநாள் - அக்டோபர் 15ம் தேதியை ‘உலக மாணவர் தினம்’ ஆக கொண்டாடுவது ஏன்?

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இதற்கான நோக்கமும் பின்புலமும் சிறப்பு வாய்ந்தது.

அப்துல் கலாம் பிறந்தநாள் - அக்டோபர் 15ம் தேதியை ‘உலக மாணவர் தினம்’ ஆக கொண்டாடுவது ஏன்?

Sunday October 15, 2023 , 4 min Read

ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை 'உலக மாணவர்கள் தினம்’ ஆக கொண்டாடுகிறோம். இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாமின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக உலக இளைஞர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது,

இந்தக் கட்டுரையில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் அலசுவோம். அத்துடன், அவரது பிறந்தநாளில் உலக மாணவர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதையும் ஆழ்ந்து பார்ப்போம்:

apj abdul kalam

டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: ஒரு பார்வை

டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931-இல், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ல ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவர் ஒரு சாதாரணமான பின்னணியில் இருந்து வந்தவர்.

எளிமையான ஆனால், அறிவுபூர்வமாகத் தூண்டும் சூழலில் வளர்ந்தார். கலாமின் ஆரம்பகால வாழ்க்கை ஆர்வம், வாசிப்பு ஆர்வம் மற்றும் கணிதம், அறிவியலில் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. அவரது தந்தை ஒரு படகு உரிமையாளர் என்பதோடு உள்ளூர் மசூதியில் இமாம். அவரது தந்தை கலாமிடத்தில் ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்தின் வலுவான உணர்வை ஏற்படுத்தினார்.

கலாமின் கல்விப் பயணம் அசாதாரணமானது என்பதற்கு சற்றும் குறைந்ததல்ல. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், அவரது கல்வி ஆர்வம் நீடிக்க, அண்ணா பல்கலைக்கழகத்தில் வாயு இயக்கவியல் கவனம் குவிக்கும் துறையில் பொறியியல் முனைவர் பட்டம் பெற்றார்.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம்: ஆளுமையும் அவரது பணியும்

டாக்டர் கலாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாழ்க்கை 1969-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) சேர்ந்தபோது தொடங்கியது. இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் அவருக்கு ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது. 1980ல் ரோகிணி செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்திய இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஏவு வாகனமான SLV-IIIஇன் வெற்றிகரமான வளர்ச்சி அவரது தொழில் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் விண்வெளித் திறனில் குறிப்பிடத்தக்க மைல்கல்லின் அடையாளமாகத் திகழ்கிறது.

டாக்டர் கலாமின் பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம்!

டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வாழ்க்கை அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் ஓர் அசாதாரண கதை. எளிமையான பின்னணியில் இருந்து இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளில் ஒருவராக மாறிய அவரது பயணம் மில்லியன் கணக்கான மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பது.

ஒரு தொலைநோக்கு தலைவர்

டாக்டர். கலாம் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ​​​​அவர் இளைஞர்களை ஊக்குவித்தார். வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியா பற்றிய தனது பார்வையால் அவர்களின் மனதைப் பற்றவைத்தார். இந்த பார்வையை அடைவதற்கான திறவுகோல் கல்வி மற்றும் புதுமையைப் புகுத்துவதே என்று அவர் நம்பினார்.

கல்வியில் பங்கு

கல்வியின் ஆற்றல் மீதான நம்பிக்கை என்பது டாக்டர் கலாமின் மிகவும் நீடித்த மரபுகளில் ஒன்று. கல்வி என்பது அறிவைப் பெறுவது மட்டுமல்ல, பண்புகளை வளர்ப்பது மற்றும் அற நெறிமுறை மேம்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். அடிக்கடி மாணவர்களுடன் உரையாடி, பெரிய கனவு காணவும், அவர்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் அவர்களை ஊக்குவித்தார் கலாம்.

இளைஞர்களின் அகத்தூண்டுதல்

மாணவர்களுடனான டாக்டர் கலாமின் உரையாடல்கள் இந்திய எல்லையில் மட்டும் நின்றுவிடவில்லை. அவர் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வாழ்க்கையைத் தொடரத் தூண்டினார். பல்வேறு கல்வி நிறுவனங்களில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரைகள் எண்ணற்ற மாணவர்களின் இதயங்களிலும் மனங்களிலும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது.

kalam

உலக மாணவர் தினம் - கலாம் பிறந்தநாள்

டாக்டர் கலாமின் கல்வி, அறிவியல் மற்றும் மாணவர்கள் மீதான அவரது அன்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த தினமான அக்டோபர் 15-ஆம் தேதி ‘உலக மாணவர் தினம்’ ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மாணவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் நாள் இது. இந்த கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கல்வி மற்றும் இளைஞர் அதிகாரம் பற்றிய விரிவுரைகள் ஆகியவை அடங்கும்.

உலக மாணவர் தினத்தின் நோக்கங்கள்

அகத்தூண்டுதல்: கலாமின் வாழ்க்கைப் பயணம், ஒரு சிறிய நகரத்திலிருந்து தொடங்கி குடியரசுத் தலைவர் அலுவலகம் வரை நீண்டு நெடிந்தது. அவரது இந்தப் பயணம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களை பெரிய கனவு காணவும், தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் தூண்டுகிறது. அவருடைய வாழ்க்கைக் கதை கல்வியும் மன உறுதியும் திறக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சான்றாகும்.

கல்வி: டாக்டர் கலாம் கல்வியின் அவசியத்தை, இன்றியமையாமையை தீவிரமாக வாதிட்டவர். கல்வியின் மூலம் தேசத்தையும் உலகையும் மாற்றும் சக்தி இளைஞர்களிடம் இருப்பதாக அவர் நம்பினார். அவரது பிறந்தநாளில் உலக மாணவர் தினத்தை கொண்டாடுவது இளம் மனங்களை வளர்த்தெடுப்பதிலும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பையும் நினைவூட்டுகிறது.

இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கல்: ஒரு சிறிய நகரத்திலிருந்து ஜனாதிபதி அலுவலகம் வரையிலான கலாமின் சொந்தப் பயணம், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களை பெரிய கனவு காணவும், தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் தூண்டுகிறது. அவருடைய வாழ்க்கைக் கதைக் கல்வியும் மன உறுதியும் திறக்கக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சான்றாகும்.

உலக ஒற்றுமை: உலக மாணவர்கள் தினம் என்பது உலகளாவிய கொண்டாட்டம் ஆகும். இதன்மூலம் உலக அளவில் மாணவர்களின் அறிவு மற்றும் முன்னேற்றத்தில் அவர்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

abdul kalam

சமூகத்தின் மீதான கலாமின் தாக்கம்:

உலக மாணவர்கள் தினத்தை கொண்டாடுவது டாக்டர் கலாமின் தொலைநோக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. அவரது பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் மூலம், அவரது இலட்சியங்களும் கொள்கைகளும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதை உறுதி செய்கிறது.

இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கம் இந்த மாணவர் தினத்தை மட்டுமே கொண்டாடும் நாளுக்கானது மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. ஏனெனில், இது கல்வி மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நீண்டகால அர்ப்பணிப்பை ஊக்குவிக்கும் நாள் என்பதை நினைவில் கொள்க.


Edited by Induja Raghunathan