Stock News: பங்குச் சந்தை சரிவு முகம்; சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிவு- ஸ்மால் கேப் கடும் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று நண்பகல் 13:00 மணி நிலவரப்படி 436.29 புள்ளிகள் குறைந்து 80,714.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 154.30 புள்ளிகள் குறைந்து 24,626.80 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமையான இன்று (22-10-2024) சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 150+ புள்ளிகள் பின்னடைவு கண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று நண்பகல் 13:00 மணி நிலவரப்படி, 436.29 புள்ளிகள் குறைந்து 80,714.98 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 154.30 புள்ளிகள் குறைந்து 24,626.80 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 416 புள்ளிகள் சரிவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு 6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 1,699 புள்ளிகள் சரிந்தது.
காரணம்:
பரந்துபட்ட சந்தைகளான பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் முறையே 1.5% மற்றும் 2.5% இழப்பு அடைந்துள்ளதாலும் FII என்று சொல்லப்படும் அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூலதனத்தை இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து விலக்கி சீன சந்தையில் முதலீடு செய்வதாலும் பங்குச் சந்தைகள் சரிவு முகம் காட்டி வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஐ.சிஐ.சி.ஐ வங்கி
அல்ட்ரா டெக் சிமெண்ட்
நெஸ்ட்லே இந்தியா
ஹெச்.யு.எல்.
இன்போசிஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி எண்டெர்பிரைசஸ்
ஹுண்டாய் மோட்டார்ஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
மேஸகான் டாக்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.07 ஆக உள்ளது.