கொரோனா பரிசோதனை மருந்து, கருவிகள் கண்டுபிடிக்கும் ரிலையன்ஸ்!
ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் உற்பத்தியிலும் தீவிரம்!
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தீர்வு காணும் முயற்சியாக புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதன்படி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் நாடாப்புழு தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் Niclosamide என்ற மருந்தை கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு சாத்தியமான மருந்தாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
2003-04 ஆம் ஆண்டின் SARS நோய் தொற்று பரவிய காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்தாக இது பயன்படுத்தப்பட்டது. நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சையில் நிக்லோஸ்மைடைடின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்து கண்டுபிடிப்பில் நெக்ஸார் பாலிமரை சான்றளிக்க ரிலையன்ஸ் ஆர் அன்ட் டி குழு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் (சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து செயல்படுகிறது.
இது பல்வேறு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் லிப்பிட் லேயரை அழிப்பதில் திறம்பட நிரூபிக்கப்பட்டுள்ளது, என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் நல்ல தீர்வு ஏற்படும் பட்சத்தில் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்கு குழு இப்போது இந்த மருந்துக்கான பொது பயன்பாட்டிற்கான திட்டத்தை மதிப்பீடு செய்யத் தொடங்கும்.
இதுமட்டுமில்லாமல், கூடுதலாக, கொரோனா நோய் கண்டறிதலுக்காக ICMR- அங்கீகரிக்கப்பட்ட கண்டறியும் கருவிகளையும் ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது. ‘ஆர்-கிரீன்’ மற்றும் ‘ஆர்-கிரீன் புரோ’ எனப்படும் இந்த கருவிகள் செலவு குறைந்தவை என்றும், கொடிய நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரிலையன்ஸ் ஆர்அன்ட்டி குழு WHO குறிப்புகளுடன் கூடிய சானிடைசர்களை சந்தை மதிப்பின் செலவில் 20 சதவீதத்தில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறையை வடிவமைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வருடாந்திர அறிக்கையின்படி,
"ரிலையன்ஸ் உலகின் உயர்மட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்டுள்ளது, இது மிகவும் முக்கியமான இந்திய மற்றும் உலகளாவிய சவால்களைத் தீர்க்க அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது," என்று கூறியுள்ளது.
முன்னதாக, தொழில்துறை பயன்பாட்டு ஆக்ஸிஜனை தனது ஜாம்நகர் ஆலைகளில் இருந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்றுவரை 55,000 டன் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜனை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, ரிலையன்ஸ் இப்போது ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களுக்கான வடிவமைப்பில் வேலை செய்யத் தொடங்கியது. இந்த சாதனங்கள் நிமிடத்திற்கு 5-7 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது, 90-95 சதவிகிதம் தூய்மையுடன் இருக்கும். தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை எதிர்கொள்ள இந்தியா சிறப்பாக தயாரிக்க இது உதவும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் நம்புகிறது.
ஆங்கிலத்தில்: சோஹினி | தமிழில்: மலையரசு