Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மளிகைக் கடை டூ விவசாயம்; 105 வயதிலும் வயலில் வேலை: பத்மஸ்ரீ விருது பெறும் கோவை பாப்பம்மாள் பாட்டி!

தமிழகத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

மளிகைக் கடை டூ விவசாயம்; 105 வயதிலும் வயலில் வேலை: பத்மஸ்ரீ விருது பெறும் கோவை பாப்பம்மாள் பாட்டி!

Tuesday January 26, 2021 , 2 min Read

இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக இருந்தது தனிக்கதை. கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள்.


மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவனம் ஈர்க்கும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் பெயர் பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள்.


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமம் தான் இந்தப் பாட்டிக்கு பூர்வீகம். கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்த பாப்பம்மாள், சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து பாட்டியின் நிழலில் வளர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்.

பாப்பம்மாள்

தாய், தந்தையை இழந்து தனியாக இருந்த பாப்பம்மாளை தேவனாபுரம் கிராமத்தில் இருந்து தேக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்று வளர்த்துள்ளார் அவரின் பாட்டி. தாய், தந்தை செய்த மளிகைக் கடை தொழிலை பாப்பம்மாளும் சிறுவயதில் செய்யத் தொடங்கியுள்ளார். அதுவும் தன்னிடம் இருந்த 3 பவுன் நகையை அடமானம் வைத்து. 20 வயதில் திருமணம் முடிந்துள்ளது. பாப்பம்மாளின் கணவா் ராமசாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை. எனினும் ஒன்றாகவே வாழ்ந்துவந்துள்ளனர். கணவா் ராமசாமி கடந்த 1992ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இதனால் அன்றில் இருந்து இன்று வரை ஒண்டிக்கட்டையாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்.


மளிகைக் கடை, ஹோட்டல் என தொழில் நடத்தி வந்த பாப்பம்மாள், அதில் கிடைத்த வருமானத்தின் மூலம், அப்பகுதியில் விவசாய நிலம் வாங்கியிருக்கிறார். இவர் முதல் முறை 4 ஏக்கர் 29 சென்ட் விவசாய நிலத்தை வெறும் 700 ரூபாய்க்கும், 2 ஏக்கர் 7 சென்ட் 3,000 ரூபாய்க்கும் வாங்கியிருக்கிறார். இப்போது பாப்பம்மாள் கைவசம் இருப்பது 10 ஏக்கர் நிலம்.

வயது மூப்பின் காரணமாக முழு 10 ஏக்கர்களையும் நிர்வகிக்க முடியவில்லை, எனவே அதில் ஒரு பகுதியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு விற்றுள்ளார். எனினும் சுமார் 2.5 ஏக்கர் நிலத்தை தொடர்ந்து தன்வசம் வைத்து இந்த தள்ளாத வயதிலும் இந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே, பாப்பம்மாள் விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டிருந்தார், அதைப் பற்றி அறிய நேரத்தை செலவிட்டார். நிலம் வாங்கியபோது, சோளம், பல்வேறு வகையான பருப்பு வகைகள் மற்றும் ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை அவர் குடும்பத்திற்காகப் பயிரிட்டு பயன்படுத்தத் தொடங்கினார்.


எனினும் விவசாயத்தை முறையாக கற்க தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராக இருந்தது தனிக்கதை. கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார் பாப்பம்மாள்.

பாப்பம்மாள்

விவசாயம் மட்டுமல்ல, பாப்பம்மாள் அரசியல்வாதியும்கூட. ஆம், அவர் திமுக உறுப்பினர். விவசாயத்தை போலவே அரசியலிலும் பாப்பம்மாளுக்கு ஆர்வம் வர திமுகவில் தன்னை சிறு வயதிலேயே இணைத்துக் கொண்டு தற்போதும் செயல்பட்டு வருகிறார்.


1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதா் சங்கத் தலைவியாக பதவிகளை வகித்துள்ளாா் இந்த பாப்பம்மாள். கடந்த நூற்றாண்டில், பாப்பம்மாள் இரண்டு உலகப் போர்கள், இந்தியாவின் சுதந்திரம், பல இயற்கை பேரழிவுகள் மற்றும் இப்போது COVID-19 தொற்றுநோய் என பலவற்றைக் கண்டு வாழ்ந்து வருகிறார்.

பாப்பம்மாள்

இன்றைய தலைமுறை 50 வயதிற்குள் ஓய்வு பெறுவதைப் பற்றி சிந்திக்கும்போது, ​​பாப்பம்மாள் பாட்டி ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, ஒரு உத்வேகமும் தான். ஏனென்றால் இன்றும் கூட, ஒவ்வொரு நாளும் இந்த பாட்டி தனது நிலத்திற்குச் சென்று அதில் வேலை செய்கிறார். அவரின் இந்த சாதனைகள் காரணமாகத் தான் 105 வயதில் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.


படங்கள் உதவி - thebetterindia | தொகுப்பு: மலையரசு