Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் 2025 - 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025ம் ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2025-26இல் இந்தியாவின் நிதிநிலையை தீர்மானிக்கப் போகும் பட்ஜெட்டின் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்று ஆவலோடு நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் 2025 - 8வது முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!

Friday January 31, 2025 , 2 min Read

2025ம் ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 31ம்தேதி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் முதல் கூட்டம் என்பதால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த குடியரசுத் தலைவர், ஒரே நாடு ஒரே தேர்தல், வஃபு திருத்த மசோதா உள்ளிட்டவற்றை நோக்கி அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளால் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.  2.25 கோடி சொத்து உரிமைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது, என்பன உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

பிப்ரவரி 13ம்தேதி வரை முதல் கூட்டத் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பொருளதாரத்தையும் மக்களின் வரவு செலவுகளையும் திட்டமிடும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு வழிகாட்டியாகவும் திகழப் போகும் பட்ஜெட்டை நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Nirmala Sitharaman budget

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி,

“ஜனநாயக நாட்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது லட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும். சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியா தன்னை உயர்த்தி கொண்டுள்ளது. 3வது முறையாக நடைபெறும் என்னுடைய ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இது. 2047ல் இந்தியா சுதந்திரமடைந்த 100வது நிறைவு ஆண்டை கொண்டாடும் போது நமது இலக்கான 'விக்சித் பாரத்' என்பதை அடைந்திருப்போம். அதற்கு இந்த பட்ஜெட் புது உற்சாகத்தையும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் கொடுக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் குறிப்பிட்ட விக்சித் பாரத் இலக்கு என்பது 2047ல் பொருளாதார ரீதியில் ‘முன்னேறிய இந்தியா’ என்பதாகும்.

பட்ஜெட் 2025 எப்போது தாக்கலாகிறது?

பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார். நிதியமைச்சராக தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா, தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

2025 மத்திய பட்ஜெட்டில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை மற்றும் இந்திய ரயில்வே மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரி விலக்கு அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக புதிய வருமான வரி திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று காத்திருக்கின்றனர்.

மத்திய அமைச்சரின் பட்ஜெட் உரையானது நாடாளுமன்ற தொலைகாட்சியான சன்சத் டிவியில் ஒளிபரப்பப்படும். பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள், கவனத்தை பெறும் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை யுவர் ஸ்டோரி தமிழ் இணையதள பக்கத்தில் படித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டின் பொருளாதார நிலைமையை விரிவாக ஆய்வு செய்யும் பொருளாதார ஆய்வறிக்கையை முதல் நாள் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்திறன் ஆய்வு செய்து அதன் விவரங்கள் இதில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வறிக்கை அரசாங்கம் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டும் திட்டங்களுக்கு இந்த பொருளாதார ஆய்வறிக்கையை முக்கிய வழிகாட்டியாக உள்ளது.