Gold Rate Chennai: சற்றே குறைந்த தங்கம் விலை - கிராம் ரூ.6,705-க்கு விற்பனை!
தொடர் சரிவுக்குப் பிறகு நேற்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
தொடர் சரிவுக்குப் பிறகு நேற்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.38 உயர்ந்து ரூ.6,715 ஆகவும், சவரன் விலை ரூ.304 உயர்ந்து ரூ.53,720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.41 உயர்ந்து ரூ.7,325 ஆகவும், சவரன் விலை ரூ.328 உயர்ந்து ரூ.58,600 ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது விலை சற்றே சரிந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வியாழக்கிழமை (12.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.6,705 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.53,640 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,315 ஆகவும், சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.58,520 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் வியாழக்கிழமை (12-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.91.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.91,500 ஆகவும் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்றே ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. அதேபோல், பங்குச் சந்தை மீண்டு வருவதால், தங்கம் மீதான முதலீட்டாளர்களின் கவனம் கொஞ்சம் குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,705 (ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.53,640 (ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,315 (ரூ.10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,520 (ரூ.80 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan