Gold Rate Chennai: கொஞ்சம் நிம்மதி! குறைந்தது தங்கம் விலை - நகை வாங்க சரியான நேரமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ள நிலையில், இதுவே நகை வாங்க சரியான தருணம் என்ற பேச்சும் வர்த்தகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ள நிலையில், இதுவே நகை வாங்க சரியான தருணம் என்ற பேச்சும் வர்த்தகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பங்குச் சந்தைகளின் கடும் சரிவு காரணமாக, இனி வரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயரக் கூடும் என கணிக்கப்படுகிறது.
சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.8,050 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.64,400 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து ரூ.8,782 ஆகவும், சவரன் விலை ரூ.88 உயர்ந்து ரூ.70,256 ஆகவும் இருக்கிறது. தற்போது தங்கம் விலை சற்றே சரிந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (11.3.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 சரிந்து ரூ.8,020 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 குறைந்து ரூ.64,160 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 சரிந்து ரூ.8,749 ஆகவும், சவரன் விலை ரூ.264 குறைந்து ரூ.69,992 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (11.3.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மீண்டும் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார முடக்கம் தொடர்பான அச்சம் காரணமாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் மீண்டும் தங்கத்தின் தேவை அதிகரிக்கத் தொடங்கும் என்பதால், இப்போதைய விலை குறைவு என்பது தொடர வாய்ப்பு மிக மிக குறைவு என்றும், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சங்களைத் தொடலாம் என்றும் வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,020 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,160 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,749 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,992 (ரூ.264 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,020 (ரூ.30 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,160 (ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,749 (ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.69,992 (ரூ.264 குறைவு)
Edited by Induja Raghunathan