Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: பொங்கல் மகிழ்ச்சி: சற்றே குறைந்தது தங்கம் விலை!

கடந்த ஐந்து நாட்களாக ஏறுமுகம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, பொங்கல் பண்டிகை தினமான இன்று சற்றே குறைந்திருப்பது, நகை வாங்க விரும்புவோருக்கு மகிழ்வைத் தந்துள்ளது.

Gold Rate Chennai: பொங்கல் மகிழ்ச்சி: சற்றே குறைந்தது தங்கம் விலை!

Tuesday January 14, 2025 , 2 min Read

கடந்த ஐந்து நாட்களாக ஏறுமுகம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, பொங்கல் பண்டிகை தினமான இன்று சற்றே குறைந்திருப்பது, நகை வாங்க விரும்புவோருக்கு மகிழ்வைத் தந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.58,720 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,007 ஆகவும், சவரன் விலை ரூ.64,056 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (14.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.7,330 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.58,640 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.7.996 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.63,968 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (14.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 குறைந்து ரூ.1,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்ததால், பண்டிகை காலத்தையும் தாண்டி ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,330 (ரூ.10 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,640 (ரூ.80 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,996 (ரூ.11 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,968 (ரூ.88 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan