Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மனநலக் காப்பகத்தில் மலர்ந்த காதல், அமைச்சர் முன்னிலையில் திருமணம்!

228 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சென்னை மனநல காப்பகவாசிகளுக்கு இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.

மனநலக் காப்பகத்தில் மலர்ந்த காதல், அமைச்சர் முன்னிலையில் திருமணம்!

Friday October 28, 2022 , 3 min Read

சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன்-தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றுள்ளது.

மகேந்திரன் - தீபா வாழ்க்கை

குடும்ப சொத்துக்கள் தொடர்பாக உறவினர்களுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகேந்திரனின் வாழ்க்கை கவலை மற்றும் பயத்தில் ஆழ்ந்தது. அதேபோல், மறுபுறம் தந்தை மரணமடைந்ததால், சொந்த தாய் மற்றும் தங்கையுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தாலும் அந்நியமான சூழ்நிலையில் இருப்பது போல் தீபா உணர ஆரம்பித்தார். இப்படியான சூழ்நிலையில் தான் சென்னை மனநல காப்பகத்திற்கு இருவரும் வந்து சேர்ந்துள்ளனர்.

மகேந்திரன்-தீபா இருவரும் IMH வளாகத்திற்கு வந்தது எப்போது என்ற நினைவில்லை என்றாலும், தாங்கள் பூரண குணமடைந்த பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முன்வர யாருமே உதவவில்லை என்பதை அறிந்திருந்தனர்.

இதனையடுத்து, மனநல பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களை தங்க வைக்கக்கூடிய "ஹாஃப் வே ஹோம்"-க்கு இருவரும் மாற்றப்பட்டனர்.

IMH

மகேந்திரன் ஆரம்ப காலக்கட்டத்தில் தனது மூத்த சகோதரியால் சென்னையில் வளர்க்கப்பட்டவர். தற்போது வளாகத்தில் தனிமையில் வாடுபவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட டே கேர் மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பலவீனமான பிரிவினரை வேலைக்கு அமர்த்துவதற்காக உணவக உரிமையாளர் எம் மகாதேவனின் சென்னை மிஷனுடன் இணைந்து IMH ஆல் தொடங்கப்பட்ட ’கஃபே R’vive ’என்ற சமூக கஃபேவில் தீபா பணிபுரிகிறார்.

காதல் மலர்ந்தது எப்படி?

தீபா, மகேந்திரன் தன்னிடம் எப்போது காதல் அல்லது திருமணம் பற்றி பேசினார் என்பது குறித்து தெளிவான நினைவில்லை எனத் தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வார்டில் இருந்து ஹாஃப் வே ஹோமிற்கு திரும்புவதா? அல்லது வீட்டிற்குச் செல்வதா? என்ற குழப்பத்துடன் தீபா இருந்துள்ளார்.

அப்போது மகேந்திரன் பேசியதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அங்கு தான் தான் ஏன் மகேந்திரனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அவர் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவர் என்பதை உணர்ந்ததால் தீபா மீண்டும் ஹாஃப் வே ஹோமிற்கு திரும்பியுள்ளார்.
Wedding
மகேந்திரன் கூறுகையில் “அவளைச் சந்தித்துப் பழகுவது எனக்குப் பல விஷயங்களைப் புத்துயிர் அளிப்பது போல் இருந்தது… அவள் என் அம்மா, என் அத்தை, என் சகோதரி, என் சிறந்த தோழி, இப்போது எல்லாம்…” என்கிறார்.

இருவரும் தங்களது அன்பு மற்றும் காதலில் உறுதியாக இருந்ததால் இன்று சென்னை மனநல காப்பகத்தின் உதவியுடன் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்துள்ளனர்.

wedding

IMH இயக்குனர் டாக்டர் பூர்ணா சந்திரிகா கூறுகையில்,

“ஹாஃப் வே ஹோம் என்பதும் வீடு போன்றது தான். இங்கு அவர்களுக்கு வேலை செய்யவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை சேமிக்கவும் கற்றுத்தருகிறோம். ‘ஹாஃப் வே ஹோம்’ காப்பகவாசிகள் தங்களுடைய சொந்த தொலைபேசிகள், வங்கிக் கணக்குகள் அல்லது ஒரு வாழ்க்கையை வைத்திருக்க முடியும். இருவரும் எப்போதும் வெளியில் சுற்றித் திரிவதாக எனக்கு முதலில் புகார் வந்தது. எனவே, இருவருக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தேன். ஆனால், இருவரையும் கட்டுப்பாடு போட்டு தடுக்க முடியாது என்பதை விரைவில் புரிந்து கொண்டேன். அதன் பின்னர் தீபாவிடம் பேசிய போது தான் அவள் மகேந்திரனை திருமணம் செய்து கொள்வதை புரிந்து கொண்டேன். அவள் முடிவில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்ததால் காதல் வென்றது,” எனத் தெரிவித்துள்ளார்.

இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டதால் ஹாஃப் வே ஹோமில் வசிக்க முடியாது. இருவரும் ஹோமில் வேலை செய்வதால், அதன் அருகிலேயே வாடகைக்கு வீடு தேடி எடுத்துள்ளனர். அவர்கள் குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

மனநலக் காப்பக வளாகத்தில் திருமணம்:

மன அழுத்ததிற்காக சிகிச்சை பெற்ற காதல் ஜோடிகள் இருவருமே நன்றாக படித்த பட்டதாரிகள் ஆவார்கள். மணமகன் மகேந்திரன் B.com, MBA, MPhil, PGDCA பட்டதாரி ஆவார், மணப்பெண் தீபா M.A., B.Ed படித்துள்ளார்.

Wedding

மகேந்திரன், தீபா இருவருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் சென்னை மனநலக் காப்பக வளாகத்தில் உள்ள கோயிலில் இன்று காலை திருமணம் நடந்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மணமக்களை வாழ்த்தி பேசுகையில்,

“நிறைய திருமணங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தாலும், சமீபத்தில் நரிக்குறவர் சமூகத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை தான் சொல்வேன். அதுக்கு அடுத்தபடியாக என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திருமணமாக இது அமைந்துள்ளது. மகேந்திரன்- தீபா திருமணத்தில் பங்கேற்றது மிகப்பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.”
wedding

மா.சுப்பிரமணியம் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்ததோடு, மகேந்திரன் - தீபா தம்பதியருக்கு மனநலக் காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணிக்கான நியமான ஆணையையும் திருமணம் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த திருமணத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல் உதவி - இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி