எலான் மஸ்கின் xAI நிறுவனம், X தளத்தை 33 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது!
எக்ஸ்.ஏ.ஐ நிறுவனத்தின் மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை, எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் பரப்புடன் ஒருங்கிணைத்து, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை அமைகிறது.
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனம், எக்ஸ்.ஏ.ஐ (xAI), சமூக ஊடக மேடையான, டிவிட்டர் என இதற்கு முன் அழைக்கப்பட்ட தற்போதைய X (எக்ஸ்) தளத்தை, 12 பில்லியடன் டாலர் கடன் உள்பட, 33 பில்லியன் டாலர் மதிப்பில் அனைத்து பங்கு பரிவர்த்தனையில் கையகப்படுத்தியுள்ளது.
எக்ஸ்.ஏ.ஐ நிறுவனத்தின் மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தை, எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் பரப்புடன் ஒருங்கிணைத்து, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் அறிவின் தேடலை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை அமைகிறது.

2022ம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலான் மஸ்க், அதை எக்ஸ் என பெயர் மாற்றி முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தார். அதன் ஊழியர்கள் எண்ணிகையை குறைத்ததோடு, நோட்டிபிகேஷனிலும் மாற்றம் செய்தார். ஆரம்ப சவால்களை மீறி, இந்த மேடை முதலீட்டாளர்கள் ஆர்வத்தை ஈர்த்துள்ளது. ஏஐ முதலீடு அதிகரிப்பு இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
தற்போதைய அறிவிப்பை அடுத்து, 2023ல் உருவாக்கிய ஏஐ ஸ்டார்ட் அப் எக்ஸ்.ஏஐ கீழ் எக்ஸ் இனி செயல்படும். இது நிறுவனத்திற்கு, பயனாளிகள் நிகழ்நேர தரவுகளை அளித்து, அதன் சாட்பாட் கிராக் பயிற்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"xAI மற்றும் எக்ஸ் எதிர்காலம் ஒன்றாக இணைந்துள்ளது. தரவுகள், மாதிரி, கம்ப்யூட், விநியோகம், மற்றும் திறமைகளை இணைக்க இன்று அதிகாரப்பூர்வமாக தீர்மானித்துள்ளோம். இந்த ஒருங்கிணைப்பு, எக்ஸ்.ஏஐ சேவையின் மேம்பட்ட திறன் மற்றும் எக்ஸ் தளத்தின் வீச்சு ஆகியவை இணைந்த பெரும் வாய்ப்புகளை அளிக்கும். இந்த இணைந்த நிறுவனம் கோடிக்கணக்கான மக்களுக்கு மேலும் அர்த்தமுள்ள அனுபவத்தை அளிக்கும்," என எலான் மஸ்க் எஸ்க் பதிவில் கூறியுள்ளார்.
2016ல் சோலார் சிட்டி நிறுவனத்தை கையகப்படுத்தி ஒருங்கிணைத்தது போலவே இந்த நடவடிக்கை அமைகிறது. ஏஐ துறையில் இந்த ஒருங்கிணைப்பு பெரும் வாய்ப்புகளை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே, பயனர்கள் மற்றும் துறை மீதான நீண்ட கால தாக்கம் என்ன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
Edited by Induja Raghunathan