Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தொடங்கிய 2 ஆண்டுகளில் அமோக வர்த்தகம் - ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்த சென்னை நிறுவனம்!

2022ல் சென்னையில் தொடங்கப்ப்பட்ட 'சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ்` நிறுவனம், 2 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து வெற்றியை கொண்டாடும் விதமாக அதன் 20 ஊழியர்களுக்கு டாட்டா கார், ஹோண்டா ஸ்கூட்டர், ராயல் என்பீல்டு புல்லட் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளது.

தொடங்கிய 2 ஆண்டுகளில் அமோக வர்த்தகம் - ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்த சென்னை நிறுவனம்!

Monday December 23, 2024 , 2 min Read

சென்னையில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 'சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' (SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT. LTD). கப்பல் மற்றும் தளவாடத்துறையில் சரக்கு போக்குவரத்தில் கவனம் செலத்தி வருகிறது இந்நிறுவனம்.

தாமதமான ஏற்றுமதிகள், வெளிப்படைத்தன்மையில்லாமை மற்றும் திறமையற்ற விநியோகத் தொடர் என பாரம்பரிய முறையில் பொதுவான பல சவால்கள் உள்ளன. இவற்றை எதிர்கொண்டு வேகமாக வளர்ந்து வரும் உலக சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, புதுமையான, திறமையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

வணிகத்தையும் நுகர்வோரையும் தொடர்ந்து தக்க வைத்துள்ள, இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.  

“கப்பல் போக்குவரத்து தளவாட வணிகத்தை எளிதாக்குவதே எங்களின் நோக்கம். பாரம்பரிய முறையில் இருக்கும் பிரச்னையை சரி செய்து நாங்கள் ஏற்படுத்திய தீர்வு இந்தத் துறையில் ஒரு புதிய கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது,” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டென்சில் ராயன்.
car gift

வாடிக்கையாளர்களின் மனநிறைவே 2 ஆண்டுகளில் ஒரு நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டிருப்பதற்கான ஆதாரம் என்று நம்பும் அதன் நிறுவனர், இந்த வெற்றிக்கு ஊழியர்களின் பங்களிப்பும் முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அவர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக நிறுவனர் டென்சில் ராயன், 20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டியுள்ளார்.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இது போன்று தங்களது ஊழியர்களை கௌரவிக்கும் மனிதவள கொள்கையை கொண்டிருப்பது அந்நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

surmount

ஊழியர்களுடன் சர்மவுண்ட் நிறுவனர் டென்சில் ராயன்

வாடிக்கையாளர் முன்னுரிமையில் கவனம் செலுத்தும் முடிவுகளை எடுக்கவும், அவ்வப்போது வாடிக்கையாளர் கருத்து அமர்வுகளை நடத்தவும், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் செயல்முறைகளை செம்மைப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தவும் சர்மவுண்ட் தங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அதிகாரம் அளிக்கிறது. இந்தப் பயிற்சிகள் அவர்களுக்கு பெருமிதத்தை கொடுப்பதோடு, ஒட்டுமொத்த வெற்றிக்கும் அவர்களை பங்களிக்க வைக்கிறது, என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடங்கப்பட்ட 2 ஆண்டு வளர்ச்சியைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நிறுவனத்தின் கிளையை பரப்ப இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்து செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக, வியட்நாமில் கிளை அலுவலகத்தை நிறுவி சர்வதேச சந்தையிலும் கால்தடம் பதித்துள்ளது.

bike gift

சர்மவுண்ட். எண்ட்-டு-எண்ட் சப்ளை செயின் (end-to-end supply chain) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் வாடிக்கையாளர் தேவைகளை கையாள, தளவாட வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் பிரத்யேக குழுவை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

மேலும், சரக்கு போக்குவரத்தின் மீது நிலையான வாடிக்கையாளர் சேவையை அடைவதற்கு, உலகமயமாக்கலில் அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்நிறுவனம், 2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் போன்ற பிரதான சர்வதேச சந்தைகளில் தங்கள் இருப்பை நிறுவ ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.