Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சோஷியல் மீடியா-வை அளவாக பயன்படுத்துவது எப்படி?

தொழில்நுட்பத்தால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை தவிர்த்து, அதன் சாதக பலன்களை அதிகரித்துக்கொள்ள, தொழில்நுட்பத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். அதாவது மனதளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சூழலை உணர்ந்து, தற்போதைய தருணத்தில் திளைத்திருப்பதாக இது அமைகிறது.

சோஷியல் மீடியா-வை அளவாக பயன்படுத்துவது எப்படி?

Friday September 16, 2022 , 3 min Read

புவி வெப்பமாதல் தொடர்பான அண்மை ஆய்வு, படிக்கப்படாத இ-மெயில்கள் கார்பன் அடிச்சுவட்டை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

ஆம், நீங்கள் சரியாகவே வாசித்திருக்கிறீர்கள்...

படிக்கப்படாத இமெயில்கள் வாயிலாக கிளவுட்டில் நிறைய தரவுகள் சேமிக்கப்பட்டுள்ள நிலையில், கணிசமான மின்சக்தி செலவாகிறது. எனவே, படிக்கப்படாத மெயில்கள் புவி வெப்பமாதலுக்கு பங்களிக்கிறது.

தொழில்நுட்பம் மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று. அத்தியாவசிய தேவைகள் முதல், தொலைதூர பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி அளிப்பது வரை, தொழில்நுட்பம் அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்கி, செயல்திறனையும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி, அண்மை தலைமுறை ஸ்கீரின் நேரம் மற்றும் அல்கோரிதத்தில் சிக்கி கொள்ளும் அளவுக்கு நிகழ்ந்துள்ளது.

நெட்பிளிக்சில் பிரபலமான தொடர் பிளாக் மிரர், தொழில்நுட்பத்தின் தீமைகளை விளக்குகிறது. எனினும், தொழில்நுட்ப தீமைகள் தொடர்பான விவாதத்தில், உலக வளர்சிக்காக தொழில்நுட்பம் பெருமளவு பங்களித்திருக்கும் போது, அதன் பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கை ஏன் எனும் கேள்வி எழுகிறது.

எல்லாமே திரை நேரத்தை அதிகரித்து, டிஜிட்டல் உலகம் மூலமான வருவாயை அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பது, கோடிக்கணக்கான பயனாளிகளை அடிமையாக்கி இருப்பது மனிதகுலத்திற்கான பின்னடைவாக அமைந்துள்ளது.

மில்லினியல்கள் அல்லது இசட் தலைமுறையினர் தொழில்நுட்பம் அல்லாத காலத்தை அதிகம் பார்த்ததில்லை. மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பயிற்றுவித்தலுக்காக டிஜிட்டல் மேடைக்கு மாற்ற வைத்திருப்பது குழந்தைகளை மேலும் கேட்ஜெட்களை நாட வைத்துள்ளது.

செல்போன்

சமூக ஊடகமும்; மன நலமும்

வளர்ச்சி அம்சம் உண்மை தான் என்றாலும், சமூக ஊடக மிகைப்பயன்பாடு, பயனாளிகள் மத்தியில் வாழ்வியல் ஒப்பீடுகள் ஈடுபடுவது மனநலத்தை பாதிக்கிறது. முடிவில்லாமல் ஸ்கிரால் செய்வது, பல்வேறு பயனாளிகள் மத்தியில் மன நலனை பாதிக்கிறது. இது FoMO எனப்படும் தவற விடும் உணர்வை ஏற்படுத்துகிறது.

சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் உங்கள் கவனத்தை ஈர்த்து நேரத்தை ஆக்கிரமிக்கும் வகையில் இருப்பதால், இணையத்தில் பயனுள்ள மற்றும் பயனில்லா வகையில் கழிக்கும் நேரத்தின் சமனை குலைத்துள்ளது.

தொழில்நுட்பத்தால் உண்டாகும் எதிர்மறை விளைவுகளை தவிர்த்து, அதன் சாதக பலன்களை அதிகரித்துக்கொள்ள, தொழில்நுட்பத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். அதாவது, மனதளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சூழலை உணர்ந்து, தற்போதைய தருணத்தில் திளைத்திருப்பதாக இது அமைகிறது.

தொழில்நுட்பத்தை கவனமாக பயன்படுத்த வழிவகுப்பதால் மனதளவிலான விழிப்புணர்வான அணுகுமுறை உதவுகிறது. தொழில்நுட்பத்தை கவனமாக பயன்படுத்துவது, கூடுதல் நேரம், தெளிவான மனது உள்ளிட்டவற்றை அளிக்கிறது.

smartphone

Image Source: ShutterStock

உங்கள் தினசரி நடவடிக்கைகைகளில் தொழில்நுட்பத்தை கவனமாக பயன்படுத்துவதற்கான வழிகள்:

தொல்லை தர வேண்டாம்

ஸ்மார்ட்போனில் உள்ள ’தொல்லை தர வேண்டாம்’ (‘DND’ -‘Do Not Disturb’) மிகச்சிறந்த அம்சம் என்றாலும் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இரவில் தூக்கத்தில் போது இடையூறு இல்லாமல் இருப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த அம்சத்தை பகல் நேரத்தில் கேட்ஜெட் நேரத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பணியில் கவனம் செலுத்தி, தினசரி செயல்திறனை அதிகரிக்கிறது.

சின்ன சின்ன இலக்குகளுடன் துவக்குவது நல்லது. துவக்கத்தில் DND வசதியை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தி பின்னர் அதிகமாக்கிக் கொள்ளலாம். இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம், ஸ்மார்ட்போன் பயன்பாடு நேரம் தொடர்பான விழிப்புணர்வை பெறலாம்.

நோட்டிபிகேஷன்கள்

எல்லா கேட்ஜெட்களிலும் நோட்டிபிகேஷன் வசதி உள்ளன. தனிப்பட்ட மற்றும் அலுவல் காரணங்களுக்காக ஒரு சில நோட்டிபிகேஷன்கள் தவிர்க்க இயலாதவை. மற்றவற்றை நீங்கள் முடக்கி வைக்கலாம். போனில் இருந்து தேவையில்லாத செயலிகளை நீக்கலாம்.

தொடர்பு துண்டிப்பு

போன்கள் உங்களுக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டவை , உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த அல்ல. நடை பயணத்தின் போது போன் இல்லாமல் இருப்பது, சாப்பிடும் போது போனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் அதிக கவனம் செலுத்தலாம். இது உங்கள் மனநலனுக்கும் உதவும். இவற்றை உங்கள் நட்பு வட்டத்திலும் அமல் செய்து, அவர்களும் போன் பயன்பாட்டை குறைக்க வைக்கலாம்.

டிஜிட்டல் நலம்

தொழில்நுட்பம் வாழ்வியல் சமனை பாதித்துள்ள நிலையில், இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கான கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது. பல்வேறு டிஜிட்டல் நலன் செயலிகள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோரில் உள்ளன.

ஒரு சில போன்கள் டிஜிட்டல் நலன் அம்சம் மற்றும் விட்ஜெட்கள் கொண்டுள்ளன. ஒரு சில ஊக்கமளிக்கும் குறிப்புகளையும் கொண்டுள்ளன.

மறுபரிசீலனை

நீங்கள் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தினால், அதை மறுபரிசீலனை செய்து, தொழில்நுட்ப பயன்பாட்டின் நோக்கத்தை நினைத்துப்பார்க்க வேண்டும்.

நீங்கள் ஏன் நுகர்வோராக இருக்கிறீர்கள்? தொழில்நுட்பம் உங்களுக்கு எப்படி உதவுகிறது? நீங்கள் தொழிநுட்பத்தை நுகர்கிறீர்களா அல்லது அது உங்களை நுகர்கிறதா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து உங்கள் தினசரி நடவடிக்கைகளை சோதனைக்குள்ளாக்குங்கள். உங்களுடன் தொடர்புடைய மற்றும் பயனுள்ள செயல்கள் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பது தான் உண்மையான பலன்.

இன்றைய நவீன யுகத்தில், தொழில்நுட்பம் நம் வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கமாகி, பயன் மற்றும் பாதகங்களை கொண்டுள்ளது.

செயல்களை முடிக்க உதவுவது முதல் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவது வரை, தொழில்நுட்பத்தில் சாதகமான மற்றும் பாதகமான பலன்கள் உள்ளன. அதன் உண்மையான தேவையை மனதில் கொண்டு அதை சரியாக பயன்படுத்துவதே விழிப்புணர்வுடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவும்.

யுவர்ஸ்டோரி குழு


Edited by Induja Raghunathan