குடும்ப ஒற்றுமையால் சோதனையை வென்று 65 ஆண்டுகளாக தழைக்கும் ‘சன்ரைஸ் பேக்கரி’
சன்ரைஸ் பேக்கரின் 1956 முதல், டேராடூனின் பரபரப்பான சந்தை பகுதியில், சுவை மிகுந்த பொருட்களை வழங்கி வருகிறது. 2021ல், உணர்வு நோக்கில் சோதனையான அமைந்த காலத்தில் அதன் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர், ஒரு பாய்ச்சலை மேற்கொள்ள தீர்மானித்து விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் பழைய நகரங்களில் ஒன்றான டேராடூனில் பரபரப்பான சந்தை பகுதியில் 'சன்ரைஸ் பேக்கர்ஸ்' தனித்து நிற்கிறது. அதன் 60 ஆண்டு கால வரலாற்றில், அது விரிவாக்கத்தை மேற்கொண்டு, இரண்டாவது விற்பனை நிலையத்தை துவக்கியுள்ளது.
தந்தை ஹர்னம் சிங் ஜாலி வழியில் குடும்பத்தொழிலை நடத்தி வந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த அமர்ஜித் சிங் ஜாலி மற்றும் ஹர்மீத் சிங் ஜாலி திடிரென இறந்ததை அடுத்து உண்டான சோதனையான காலத்திற்கு பிறகு இந்த விரிவாக்கம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“பல ஆண்டுகளாக தொழிலை நடத்தி வந்த என் தந்தையும், மாமாவும் இறந்த பின், சன்ரைஸ் பேக்கர்ஸ் என்னாகும் என எல்லோரும் பேசிக் கொண்டனர். குடும்பத்தில் இருந்தவர்கள் உடைந்து போயிருந்தாலும், எங்களை சமாளித்துக்கொண்டு பாரம்பரிய தொழிலை தொடர்ந்து நடத்தும் பொறுப்பையும் உணர்ந்தோம்,” என்கிறார் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த அமர்ஜித் சிங் மகளுமான ரிஷிகா ஜாலி.
ஹர்மான் சிங்கிற்கு, திடார் சிங், அமர்ஜித், ஹர்மீத் மற்றும் ஜகஜித் ஆகிய நான்கு மகன்கள் இருந்தனர். திடார் சிங் நொய்டாவில் இருந்த நிலையில், அமர்ஜித் மற்றும் ஹர்மீத் பேக்கரியை நடத்தி வந்தனர். ஜகஜித் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணியாற்றியபடி சகோதரர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார். சகோதரர்கள் திடீரென மறைந்ததை அடுத்து, ஜகஜித் மூன்றாம் தலைமுறை உதவியோடு வர்த்தகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய ஜகஜித் மற்றும் ரிஷிகா, சவால்களை மீறி துவக்கம் முதல் பேக்கரி லாபகரமாக நடந்து வருகிறது என்கிறார். இப்போது 65 ஆண்டுகளுக்கு பிறகு விரிவாக்கத்தின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஒற்றுமையின் பலம்
பிரிவினையின் போது தனது தாத்தா ஹர்னாம் சிங் வேலை தேடி டேராடூன் வந்ததாக ரிஷிகா கூறுகிறார். பின்னர் பேக்கரி பொருட்களுக்கான தேவையை உணர்ந்து, 2956 ல் பேக்கரியை துவக்கினார்.
“என் அப்பா ஒரு கடையை வாங்கி பிஸ்கெட் தயாரிக்கத்துவங்கினார்,” என்கிறார் ஜகஜித். எல்லாம் கைகளால் செய்யப்பட்டவை என்கிறார்.
மற்ற கடைக்காரர்களும் ஹர்னம் தயார் செய்த பிஸ்கெட்டை வாங்கி விற்பனை செய்தனர். அந்த காலத்தில் நேரடி நுகர்வு குறைவாக இருந்தது என்றும், சிறிய கடைகள் மூலமே மக்கள் வாங்கினர் என்றும் ஜகஜித் சொல்கிறார்.
1979 இறக்கும் வரை, ஹர்னம் சிங் 23 ஆண்டுகள் வர்த்தகத்தை நடத்திய நிலையில் அவரது மூத்த மகன் அமர்ஜித் வர்த்தகத்தை நடத்த துவங்கினார்.
“என் மூத்த சகோதரர் தான் பேக்கரியின் முகமாக இருந்தார். அவரது பரிவான அணுகுமுறையை வாடிக்கையாளர்கள் விரும்பினர். என் இளைய சகோதரர் அவருக்கு ஆதரவாக இருந்தார். இருவரும் வர்த்தகத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டனர்,” என்கிறார் ஜகஜித்.
சன்ரைஸ் பேக்கர்ஸ் தயாரித்த ரஸ்க் மிகவும் பிரபலமாக இருந்தது. ரஸ்க் தேவையை பூர்த்தி செய்ய 2000-மாவது ஆண்டில் ரஸ்க் ஆலை அமைக்க உதவினேன் என்கிறார் ஜகஜித்.
புதிதாக வந்த ரஸ்க் தீர்ந்து போகும் போது வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர் என்கிறார்.
“மிகுந்த தொலைவில் இருந்து வருபவர்கள் ரஸ்க் தீர்ந்து போவது குறித்து புகார் செய்ததை அடுத்து, இதற்காக ஆலை அமைக்க தீர்மானித்தோம்,” என்கிறார்.
கைகளால் தயார் செய்வதே வர்த்தகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது, இன்றும் கூட, பெரும்பாலான பேக்கரி பொருட்கள் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் முன் கைகளால் கலக்கப்படுகின்றன என்கிறார் ஜகஜித்.
சன்ரைஸ் பேக்கர்ஸ் சுய நிதியில் இயங்கி வந்தாலும் அதன் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர் வேறு பாதையை தேர்வு செய்தாலும் பேக்கரி தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
“நானும் சகோதரர்களும் வர்த்தகம் பற்றிய புரிதல் இல்லாமல் வளரவில்லை. நான் டேட்டா அனலிஸ்டாகவும், சகோதரர் அர்பித், சகோதரி ஆஷனா சமையல் கலைஞர், வடிவமைப்பாளராக இருந்தாலும், வர்த்தகம் பற்றிய எண்ணம் இருந்தது. ஆனால், சன்ரைஸ் இரண்டு தூண்களை இழந்து பிறகு எங்கள் தந்தை மற்றும் மாமா வழியில் வாடிகையாளர்களுக்கு சேவை அளிப்பது எங்கள் பொறுப்பு என உணர்ந்தோம்,” என்கிறார் ரிஷிகா.
விரிவாக்கத்தின் தேவை
2021 அக்டோபரில் சன்ரைஸ் பேக்கர், டேராடூனின் கிருஷ்ணா நகரில் இரண்டாவது விற்பனை நிலையம் துவக்கியது.
“எங்கள் விற்பனை நிலையம் அமைந்துள்ள ’கோஸி காலி’ மிகவும் நெரிசலான இடம். இப்போது அதிக பேக்கரிகள் இருப்பதால் இளம் தலைமுறையினர் எளிதாக அணுகக் கூடிய பேக்கரியை நாடுவார்கள். எனவே நவீன கால வாடிக்கையாளர்களை கவர வேறு ஒரு இடத்தில் விற்பனை நிலையத்தை துக்கியுள்ளோம்,” என்கிறார் ரிஷிகா.
டேராடூன் பேக்கரி பொருட்களுக்காக அறியப்படுகிறது. ஸ்டாண்டர்டு, எல்லோரா போன்ற பேக்கரிகள் பிரபலமாக உள்ளன.
தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வருவதாகவும், ஆரோக்கியத்தை நாடுபவர்களுக்கென பொருட்களையும் அளிப்பதாகவும் ரிஷிகா கூறுகிறார்.
“விரிவாக்கம் என்பது சோதனை முயற்சி சார்ந்தது. எந்த வாடிக்கையாளர்களையும் எங்களால் இழக்க முடியாது. எனவே புதிய பொருட்களைக் கொண்டு வரும் நிலையில் தரத்திலும் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் ரிஷிகா.
சவால்கள்
வர்த்தகத்திற்கான சவால்கள் பற்றி பேசும் போது, லாஜிஸ்டிக்ஸ் தான் மிகப்பெரிய சவால் என்கின்றனர் இருவரும்.
“பொருட்களை தவறாக கையாளாத டெலிவரி பார்ட்னர் தேவை. சிறிய தொலைவு என்றாலும் கூட பேக்கரி பொருட்களை கவனமாக கையாள வேண்டும். இந்திய அளவிலான டெலிவரிக்கு வலுவான லாஜிஸ்டிகஸ் ஆதரவு தேவை.”
பேக்கிங் முக்கியம் என்றாலும் பேக்கிங்கை மேம்படுத்தினால் பொருட்களின் விலை அதிகமாகும்.
“எங்கள் அடுத்த கட்ட திட்டம் ஆன்லைனில் டி2சி பிராண்டை உருவாக்குவது. இதற்காக உற்பத்தி, பேக்கிங், டெலிவரி என எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். என்னவாக இருந்தாலும் சரி எங்கள் பாரம்பரியத்தை விட்டுவிட முடியாது,” என்கிறார் ரிஷிகா.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்