5 ஆண்டுகளில் ரூ.600 கோடி வருவாய் - கல்வி நிறுவனங்களுடன் கூட்டு மூலம் எதிர்நோக்கும் 'வெராண்டா லேர்னிங்'
கல்வித்துறையில் முழுமையான தீர்வுகளை, வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ், மதிப்பு கூட்டப்பட்ட ஏசிசிஏ சான்றிதழ் கொண்ட பி.காம் பாடத்திட்டத்தை வழங்க கோவையின் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கல்வித்துறையில் முழுமையான தீர்வுகளை தனது துணை நிறுவனம் வெராண்டா எக்ஸ்.எல் லேர்னிங் சொல்யூஷன்ஸ் மூலம் வழங்கும் 'வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்,' மதிப்பு கூட்டப்பட்ட ஏசிசிஏ சான்றிதழ் கொண்ட பி.காம் பாடத்திட்டத்தை வழங்க கோவையின் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது வெராண்டா குழுமம், விஐடி, எஸ்.ஆர்.எம், சத்யபாமா பல்கலை, ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை, அமிர்தா பல்கலை உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு மாநில திறன் வளர்ச்சி அமைப்புகளுடனும் இணைந்து செயல்படுகிறது.
நிறுவனம் வழங்கும் கல்வி சேவைகள், இளம் பட்டதாரிகள் துவங்கி, தொழில்முறை மேம்பாடு நாடும் அனுபவசாலிகள் வரை பலருக்கு ஏற்றதாக அமைகிறது. கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, நிறுவனம் பி.காம்+ சிஏ., பி.காம்+ஏசிசிஏ சான்றிதழ், எம்பிஏ+ஏசிசிசே உள்ளிட்ட பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது.
ஏசிசிஏ சான்றிதழ் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரப்பட்டு, பணி வாய்ப்புகள் நாடும் பட்டதாரிகளுக்கு கைகொடுக்கிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்யும் மாணவர்கள், ஏசிசிஏ பாடத்திட்ட தேர்வுக்கான 13 தேர்வுகளில் 9 தேர்வில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதன் மூலம் விரைவாக தொழில்முறை சான்றிதழ் பெறலாம்.
இதே போன்று, பாடத்திட்டங்களை மற்ற இளங்கலை படிப்புகளுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
“வெராண்டா நிறுவனத்துடனான எங்கள் கூட்டு, மாணவர்களுக்கு வழக்கமான எல்லைகளை கடந்து கல்வி வாய்ப்புகளை வழங்கும் எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது. ஏசிசிஏ மதிப்பு கூட்டப்பட்ட பிகாம் பட்டம், மாணவர்கள் சிக்கலான நிதி சூழலுக்கு தயாராக உதவும்,” என்று ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி கூறியுள்ளார்.
“கல்வி பரப்பில் மாற்றம் கொண்டு வருவது எங்கள் நோக்கமாகும். தொழில் துறைக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி வருகிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தகைய கூட்டு மூலம் 3 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, 600 கோடி வருவாய் ஈட்ட எதிர்நோக்கியுள்ளோம்,” என வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் செயல் இயக்குனர் சுரேஷ் கல்பாத்தி கூறியுள்ளார்.
கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018ல் துவக்கப்பட்ட வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ், மாநிலத்தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், ஐஏஎஸ், சிஏ உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. சிஏ சார்ந்த பாடத்திட்டங்களையும் வழங்கி வருகிறது.
வெராண்டா ரேஸ், வெராண்டா ஐஏஸ், எஜுரேக்கா, சிக்ஸ் பிரேஸ், ஸ்மார்ட் பிர்ட்ஜ் உள்ளிட்ட பிராண்ட்கள் மூலம் பலவகையான கல்வி சேவைகளை வழங்கி வருகிறது.
ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி: வெராண்டா லெர்னிங்கின் Pathfinder திட்டம் அறிமுகம்!
Edited by Induja Raghunathan