புதிய 'பாதுகாப்பு முறை' (Safety Mode) அம்சத்தை சோதனை செய்யும் ட்விட்டர்!
விரைவில் அறிமுகம் என அறிவிப்பு!
ட்விட்டர் ஒரு புதிய 'பாதுகாப்பு முறை' (Safety Mode) அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இதன்நோக்கம் அவமதிப்பு அல்லது வெறுக்கத்தக்க கருத்துகளைப் பகிரும் கணக்குகளை தற்காலிகமாக தடை செய்ய இந்த பாதுகாப்பு அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்பவர்களை ஏழு நாட்களுக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. புதிய பாதுகாப்பு அம்சம் iOS, Android சாதனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"உங்களுக்கு வசதியாகவும் உங்கள் அனுபவத்தை கட்டுப்படுத்தவும் உதவும் அம்சங்களையும் அமைப்புகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம், மேலும், விரும்பத்தகாத தொடர்புகளைக் கையாளும் மக்கள் மீதான சுமையைக் குறைக்க நாங்கள் அதிகம் செய்ய விரும்புகிறோம். விரும்பத்தகாத ட்வீட்கள் தேவையில்லாத உரையாடல்களுக்கு வழிவகுக்கும், எனவே நாங்கள் பாதுகாப்பு பயன்முறையை அறிமுகப்படுத்துகிறோம், இது இடையூறு விளைவிக்கும் தொடர்புகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அம்சமாகும்," என்று ட்விட்டர் இந்த புதிய அம்சம் தொடர்பாக தெரிவித்திருக்கிறது.
அவமதிப்பு அல்லது வெறுக்கத்தக்க கருத்துகள் - அல்லது மீண்டும் மீண்டும் அழைக்கப்படாத பதில்கள் அல்லது குறிப்புகளை அனுப்புதல் ஆகியவற்றை செய்யும் கணக்குகளை பாதுகாப்பு பயன்முறை அம்சம் தற்காலிகமாக ஏழு நாட்களுக்கு தடை செய்யும். அமைப்புகளில் (Settings) இந்த அம்சம் ஆன் செய்யப்படும் போது ட்வீட்டின் உள்ளடக்கம் மற்றும் ட்வீட் ஆசிரியர் மற்றும் ரிப்ளையர் இடையேயான உறவு இரண்டையும் கருத்தில் கொண்டு ட்விட்டரின் அமைப்புகள் எதிர்மறை ஈடுபாட்டின் சாத்தியத்தை மதிப்பிடுமாம்.
"எங்கள் தொழில்நுட்பத்தால் தீங்கு விளைவிக்கும் அல்லது அழைக்கப்படாத ட்வீட்களின் ஆசிரியர்கள் ஆட்டோபிளாக் செய்யப்படுவார்கள், அதாவது அவர்கள் உங்கள் கணக்கை தற்காலிகமாகப் பின்தொடரவோ, உங்கள் ட்வீட்களைப் பார்க்கவோ அல்லது உங்களுக்கு நேரடிச் செய்திகளை அனுப்பவோ முடியாது. பயனர்கள் ஆரோக்கியமான உரையாடல்களை அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எனவே இந்த சோதனை மூலம் உரையாடல்களில் குறுக்கிடக்கூடியவர்களை, மற்றும் விரும்பத்தகாத தொடர்புகளை கட்டுப்படுத்துகிறோம்."
தீங்கு விளைவிக்கும் கருத்துகளின் பரவல் மற்றும் தெரிவுநிலையைக் குறைப்பதன் மூலம் ட்வீட்களைப் பெறும் நபரை சிறப்பாகப் பாதுகாப்பதே இந்த அம்சத்தின் குறிக்கோள். ட்விட்டரில் அனைவருக்கும் கொண்டு வருவதற்கு முன்பு பாதுகாப்பு பயன்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாங்கள் கவனிப்போம் மற்றும் மேம்பாடுகள் மற்றும் சரிசெய்தல்களை இணைத்துக்கொள்வோம். அடுத்த அப்டேட்களுக்காக காத்திருங்கள், என்று ட்விட்டர் மேலும் கூறியுள்ளது.
தகவல்: பிடிஐ | தமிழில்: மலையரசு