மீன்களை ஹோம் டெலிவரி பெற ஆப் அறிமுகம் செய்த தமிழக அரசு!
ஆர்டர் செய்த 1 மணி நேரத்துக்குள் மீன் வீடு தேடி வரும்...
ஊரடங்கு சமயத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லவே யோசிக்கும் பலருக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் வேண்டுமென்றால் குறிப்பிட்ட சமயத்துக்குள் கடைக்குச் செல்லவேண்டும். அதிலும் சமூக விலகல் மேற்கொண்டு கிடைப்பவற்றை அள்ளிப்போட்டுக் கொண்டு வரவேண்டும். இதற்கே இப்படி என்றால் கறி, மீன் வாங்கி வருவது சாதரண விஷயமல்ல.
மீன் வாங்க குறிப்பிட்ட மார்கெட்டுக்குச் சென்றால் தான் வாங்கமுடியும் அதனால் பலர் அத்தனை தூரம் சென்று வாங்க கஷ்டப்படுகின்றனர். இதை மனதில் வைத்து தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் ஆன்லைனில் மீன் ஆர்டர் செய்து வீட்டில் ஹோம் டெலிவரி பெற ஆப் வசதியை செய்துள்ளது.
இனி ப்ரெஷான மீன்கள் சென்னையில் வீட்டுக்கே வந்துவிடும். ‘மீன்கள்’ 'Meengal' என்ற ஆப் மூலம் கடல் மற்றும் ஏரிமீன் வகைகளை ஆர்டர் செய்யமுடியும்.
“அண்ணாநகர், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சாந்தோம் ஆகிய ஏரியாக்களில் உள்ள தமிழக அரசின் மீன் விற்பனைக் கடைகளுடன் இந்த ஆப் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதிகளில் இருந்து 5கிமிக்குள் இருப்பவர்கள் ஆர்டர் செய்யலாம். டெலிவரி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைப்பெறும். ஆர்டர் செய்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும்,” என்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த புலிகாட் ஏரியில் இருந்து ப்ரான், சுத்தமான மீன்கள் மற்றும் ராமனாதபுரம் ஏரியா கடல் மீன்கள் இங்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது.
TNFDC அவுட்லெட் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் தற்போது 1500 கிலோ மீன்கள் விற்கப்படுகிறது. ஆப் தவிர மக்கள் www.meengal.com இணையதளம் மூலமும் ஆர்டர் செய்யலாம்.
மீன்கள் ஆப் டவுன்லோட் செய்ய: Meengal