‘ஆசை முதல் ஆழ்மனம் வரை’ - நெப்போலியன் ஹில் அடுக்கும் 13 வெற்றி மந்திரங்கள்!
ஆசையின் அவசியம் முதல் ஆறாம் அறிவின் அற்புதம் வரையில், உங்கள் இலக்குகள் அடைவதற்கு துணைபுரியும் அம்சங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் அலசுகிறார் நெப்போலியன் ஹில்.
நெப்போலியன் ஹில்லின் 13 அடிப்படைக் கோட்பாடுகள் அடங்கிய ‘திங்க் அண்ட் க்ரோ ரிச்’ (Think and Grow Rich) எனும் நூல், உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி வெற்றிக்கான ப்ளூ பிரின்ட்டாவும் திகழும்.
ஆசையின் சக்தி முதல் மாஸ்டர் மைண்ட் ரகசியம் வரை, ஒவ்வொரு அடியும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான மூலக்கல்லாகும் இந்த 13 கோட்பாடுகள்.
நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தாலும் சரி, அல்லது சுயமுன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும், இந்தக் கொள்கைகள் அனைத்தும் ஆற்றலுடன் செயல்படக்கூடிய நுண்ணறிவுகளை நிச்சயம் வழங்கும்.
நெப்போலியன் ஹில்லின் 13 அடிப்படைக் கோட்பாடுகள்
1. ஆசை: ஆசைதான் சாதனைக்கான தொடக்கப் புள்ளி. வெறும் விருப்பம் மட்டும் போதாது; உங்களை செயலில் ஈடுபடவைக்கவோ அல்லது செயலுக்குத் தூண்ட எரியும் லட்சியமோ வேண்டும்.
2. நம்பிக்கை: நம்பிக்கை வெற்றிக்கு முக்கியமானது என்று நெப்போலியன் வலியுறுத்துகிறார். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய முடியும் என்ற நம்பிக்கை, உங்கள் செயல்களில் தாக்கம் செலுத்துகிறது. மேலும், உங்களை அது முன்னோக்கி செலுத்துகிறது.
3. சுய ஆலோசனை: இந்தக் கொள்கை சுய உறுதிப்பாட்டின் சக்தியை வலியுறுத்துகிறது. நேர்மறையான கூற்றுக்களை மீண்டும் சிந்தித்து ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் செயல்களை உங்கள் இலக்குகளுடன் இணைகோட்டில் செலுத்துகிறது.
4. சிறப்பு அறிவு: ஹில்லின் கூற்றுப்படி, வெற்றிக்கு நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஒரு பொதுப்புத்தி அறிவுவாதியாக இருப்பதற்குப் பதிலாக சிறப்பு அறிவு என்பது உங்கள் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னேற உதவுகிறது.
5. கற்பனை வளம்: உங்கள் கற்பனை வளம் யதார்த்தத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். சிக்கல்களைத் தீர்க்க அல்லது புதுமைகளை உருவாக்க இது ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்படலாம்; வெற்றிக்கான ஊக்கியாக செயல்படுகிறது.
6. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட திட்டம்: திட்டமிடல் என்பது உங்கள் இலக்குகளுக்கான அடித்தளம். ஹில் ஓர் உறுதியான திட்டத்தின் மதிப்பை வலியுறுத்துகிறார்; கூட்டு அறிதலுக்கான ஆலோசகர்களின் ‘மாஸ்டர் மைண்ட்’ குழு தேவை என வாதிடுகிறார்.
7. முடிவெடுத்தல்: வெற்றிகரமான நபர்களிடையே தீர்க்கமான தன்மை ஒரு பொதுவான பண்பு. உங்கள் இலக்குகளை அடைவதற்கு விரைவான முடிவுகளை எடுப்பதும், எடுத்த முடிவை உறுதியுடன் பற்றிக்கொண்டு மாறாமல் இருப்பதும் அவசியம் என்று ஹில் கூறுகிறார்.
8. விடாமுயற்சி: வெற்றி என்பது பெரும்பாலும் தடைகள் நிறைந்த நீண்ட பாதை. இந்த தடைகளைத் தாண்டி உங்கள் இலக்கை அடைய விடாமுயற்சி மிக அவசியம் என்று ஹில் வலியுறுத்துகிறார்.
9. மாஸ்டர் மைண்ட்: ஒரு குழுவின் கூட்டு நுண்ணறிவு ஒரு தனிநபரின் நுண்ணறிவை விட அதிகமாக இருக்கும். அதிக வாய்ப்புகளைத் திறக்க, ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார்.
10. பாலுணர்வை மடைமாற்றம் செய்தல்: பாலியல் ஆற்றலை உற்பத்தி ஆற்றலாக மாற்றி, படைப்பாற்றல் மற்றும் லட்சியத்தைத் தூண்டலாம் என்று ஹில் கூறுகிறார்.
11. ஆழ்மனம்: ஆழ்மனது உங்கள் ஆசைகள் மற்றும் நோக்கங்களுக்கான களஞ்சியமாகும். இலக்கை நோக்கிய எண்ணங்களால் அதை ஊட்டி வளர்த்து, அவற்றைச் செயல்படக்கூடிய முடிவுகளாக மாற்றும்.
12. மூளை: ஹில் மூளையை எண்ணங்களுக்கான "ஒலிபரப்பு மற்றும் ஒலி பெறுதல்" நிலையமாக விவரிக்கிறார். மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது சிறந்த முடிவெடுப்பதற்கும் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.
13. ஆறாம் அறிவு: மற்ற எல்லாக் கொள்கைகளும் சீரமைக்கப்பட்டவுடன் செயல்படும் உள்ளுணர்வு திறன் இதுவாகும். இந்த ஆறாவது அறிவு தன்னிச்சையான நுண்ணறிவு மற்றும் அகக்காட்சிகளை வழங்கும் வழிகாட்டியாக செயல்படும் என்று ஹில் கூறுகிறார்.
“சிந்தித்து, வளமாக வளருங்கள்” என்பது தனிப்பட்ட மற்றும் நிதிச் செழுமையை அடைவதற்கான ஒருங்கிணைந்த கொள்கைகளை முன்வைக்கிறது. செல்வத்தை உருவாக்குவதற்கு ஏற்றதாக இருந்தாலும், இந்தக் கொள்கைகள் உலகளாவியவை மட்டுமின்றி, தங்கள் லட்சியங்களை சாதனைகளாக மாற்ற விரும்பும் எவருக்கும் சேவை செய்யும் கோட்பாடுகளைக் கொண்டது.
மூலம்: Nucleus_AI
சவால்களை ‘தண்ணீர்’ போல அணுகுவது எப்படி? - புரூஸ் லீ தத்துவமும்; தாக்கமும்!
Edited by Induja Raghunathan