டெலிவரி பார்ட்னர்களுக்காக ஸ்விக்கி அறிமுகம் செய்யும் புதிய திட்டம் 'பிராஜெக்ட் நெக்ஸ்ட்'
டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் பார்ட்னர்கள் திறன் மேம்பாட்டிற்கான ஸ்விக்கி ஸ்கில்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக பிராஜெக்ட் நெக்ஸ்ட் அமைகிறது.
பொது பங்குகளை வெளியிட தயாராகும் ஸ்விக்கி, தனது டெலிவரி பார்ட்னர்களுக்கான தொழில்முறை வளர்ச்சி வாய்ப்பு அளிக்கும் 'பிராஜெக்ட் நெக்ஸ்ட' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஸ்விக்கி மேடையில் ரெஸ்டாரண்ட்களை இணைக்கும் செயல்முறைக்கு பார்ட்னர்கள் வலைப்பின்னலை பயன்படுத்தும் வகையில் இது அமைந்திருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், டெலிவரி பார்ட்னர்கள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதிகள் போன்ற பொறுப்புகளை பெறலாம். திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பணி உள்ளிட்டவற்றை அளிக்கும் ஸ்விக்கி ஸ்கில்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைகிறது.
ஸ்விக்கி ஸ்கில்ஸ், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பிராஜெட்க்ட் நெக்ஸ்ட் திட்டத்தின் கீழ், இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் ரெஸ்டாரண்ட்கள் வலைப்பின்னலை விரிவாக்குவதில் டெலிவரி பார்ட்னர்கள் பொறுப்பேற்க வழி செய்யும்.
“இந்தியா முழுவதும் 4 லட்சம் டெலிவரி பார்ட்னர்களுடன் ஸ்விக்கி செயல்பட இருக்கிறது. பலரும் இந்த மேடை அளிக்கும் வளைந்து கொடுக்கும் வாய்ப்புகளை விரும்பினாலும், ஒரு சிலர் மேலும் வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றனர். இவர்களுக்கான பிராஜெக்ட் நெக்ஸ்ட் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் டெலிவரி பார்ட்னர்கள் வெள்ளை காலர் பணிக்கு மாற உதவும்,” என்று ஸ்விக்கி ஃபுட்மார்கெட் சி.இ.ஓ ரோகித் கபூர் கூறினார்.
கடந்த ஐந்து வாரங்களில், 100 டெலிவரி பார்ட்னர்கள் விற்பனை பிரதிநிதிகளாகி, 360 ரெஸ்டாரண்ட்களை இணைத்துள்ளனர் என நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த திட்டத்தை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வதோத்ரா, நாசிக், ஆக்ரா உள்ளிட்ட வளர்ச்சி வாய்ப்பு கொண்ட நகரங்களில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஆங்கிலத்தில்: அக்ஷிதா டோஷ்னிவல்
Edited by Induja Raghunathan