Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்: ரேஷ்மா கேவல்ரமணி கதை தெரியுமா?

தற்போது உலக அரங்கில் மருந்து உற்பத்தி துறையில் ஜாம்பவான்களுக்கு டஃப் கொடுத்து வரும் மும்பையை பூர்விகமாகக் கொண்ட ரேஷ்மாவின் பயணம் வியக்கத்தக்கது.

ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்: ரேஷ்மா கேவல்ரமணி கதை தெரியுமா?

Thursday July 27, 2023 , 2 min Read

மும்பையில் பிறந்த ரேஷ்மா கேவால்ரமணி வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் (Vertex Pharmaceuticals) என்ற பெரும் கார்ப்பரேட் மருந்து தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மேலும், அவர் அமெரிக்க பயோடெக் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமைக்கும் உரியவர்.

நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரான கேவால்ரமணி, 1988ல் அமெரிக்கா சென்று, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் தாராளவாத கலைகள் / மருத்துவ அறிவியல் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர். மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் தனது பெலோஷிப்பை முடித்ததோடு 2015-இல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.

ரேஷ்மா கேவல்ரமணி தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர் ஆம்ஜென் நிறுவனத்தில் சேர்ந்து மருந்துத் துறைக்கு மாறினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆம்ஜெனில் பணியாற்றிய ரேஷ்மா, 2017-இல் வெர்டெக்ஸில் சேர முடிவெடுத்தார். இந்நிறுவனத்தில் பல பதவிப் பொறுப்புகளை வகித்த ரேஷ்மா, பிற்பாடு 2020ல் தலைமைச் செயலதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

reshma

வெர்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக ரேஷ்மா கேவால்ரமணி பல திட்டங்களில் வெற்றிகரமாக தனது டீமை வழிநடத்தியுள்ளார் மேலும், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (cystic fibrosis) சிகிச்சைக்கான மருந்தான ‘ட்ரைகாஃப்டா’வை (Trikafta) உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

ரேஷ்மாவின் தலைமையின் கீழ், உடல் முழுவதற்கும் புரோட்டீனைக் கொண்டு செல்லும் ஹிமோகுளோபினைப் பாதிக்கும் வம்சாவளியாக வரும் ரத்த சிகப்பணுக்களில் ஏற்படும் நோய்க்கான சிகிச்சையில் உதவியாக இருக்கும் மரபணு - எடிட்டிங் சிகிச்சைகளை உருவாக்க, சிஆர்ஐஎஸ்பிஆர் தெரபியூட்டிக்ஸுடன் வெர்டெக்ஸ் ஒரு மிகப் பெரிய கூட்டணியை அமைத்தது.

இத்தகைய வியத்தக்கு பின்புலம் கொண்ட வெர்டெக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்றைய தேதியில் ரூ.7,65,000 கோடியாகும்.

“இந்த வெற்றிப் பாதையைக் கண்டு பலரும் வியக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் ஓர் இரவில் நடந்தேறிவிடவில்லை.”

ரேஷ்மா இப்படிச் சொல்வது முற்றிலும் உண்மை. ஏறத்தாழ 30 ஆண்டு கால கடுமையான பயணத்தில்தான் நிறுவனம் இப்போது இந்த நிலையை எட்டியிருக்கிறது.

பயோடெக் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக ரேஷ்மா கேவால்ரமணி பல விருதுகளைப் பெற்றுள்ளார். பயோமெடிக்கல் சயின்ஸ் கேரியர்ஸ் திட்டமான மாசசூசெட்ஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது அவர் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

reshma

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் அசோசியேட்ஸ் கவுன்சில் விருது, அமெரிக்க மருத்துவ மகளிர் சங்கம் ஜேனட் எம். கிளாஸ்கோ நினைவு சாதனைக் கேடயம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் கற்பித்தலில் சிறந்து விளங்கும் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

தற்போது மருந்து உற்பத்தி துறையில் திலீப் சங்வி, அதார் பூணவாலா போன்ற கோடீஸ்வர்களுக்கு டஃப் கொடுத்து வரும் இவரது பயணம் மலைக்கத்தக்கது.

மும்பையில் பிறந்து அமெரிக்க பெரு கார்ப்பரேட் மருத்துவ நிறுவனத்திலேயே தன் நிர்வாகத் திறமையினால் பெருமையில் கொடிகட்டிப் பறந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் சிங்கப் பெண் ரேஷ்மா என்றால் அது மிகையாகாது.


Edited by Induja Raghunathan