Stock News: ட்ரம்ப்பின் புதிய ‘மிரட்டல்’ தாக்கம் - தடுமாறும் இந்திய பங்குச் சந்தை!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வரிவிதிப்பு தொடர்பான அச்சுறுத்தலை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வரிவிதிப்பு தொடர்பான அச்சுறுத்தலை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (பிப்.20) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 393.01 புள்ளிகள் சரிந்து 75,546.17 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 118.95 புள்ளிகள் சரிந்து 22,813.95 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் இறக்கம் நிலவுவதும், பங்குச் சந்தை தடுமாற்றம் நீடிப்பதும் முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 201.64 புள்ளிகள் (0.27%) சரிந்து 75,737.54 ஆகவும், நிஃப்டி 21.60 புள்ளிகள் (0.09%) சரிந்து 22.911.30ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவு பெற்றது. ஆனால், ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், ஷாங்காய், டோக்கியோ மற்றும் ஹாங்காங் என அனைத்திலுமே பெரும் வீழ்ச்சி நிலவுகிறது. இதன் தாக்கமும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பான புதிய அச்சறுத்தல்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளை விற்பதிலேயே ஆர்வம் கொண்டிருப்பதாலும் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
இன்ஃபோசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
என்டிபிசி
ஏசியன் பெயின்ட்ஸ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
டாடா ஸ்டீல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபின்சர்வ்
டைட்டன் கம்பெனி
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
டிசிஎஸ்
சன் பார்மா
பஜாஜ் ஃபைனான்ஸ்
விப்ரோ
மாருதி சுசுகி
ஐடிசி
பாரதி ஏர்டெல்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து ரூ.86.79 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan