Stock News: பங்குச் சந்தை நிலவரம் - சென்செக்ஸ் 400+ புள்ளிகள் சரிவு- பிஎஸ்இ. ஸ்மால் கேப் 1000+ புள்ளிகள் பின்னடைவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:35 மணி நிலவரப்படி, 423 புள்ளிகள் குறைந்து 79,642 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 183 புள்ளிகள் குறைந்து 24,220 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (25-10-2024) சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் தொடக்கத்தில் சுமார் 400 புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 180 புள்ளிகள் சரிவு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:35 மணி நிலவரப்படி, 423 புள்ளிகள் குறைந்து 79,642 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 183 புள்ளிகள் குறைந்து 24,220 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று நல்ல முன்னேற்றம் கண்டு 944 புள்ளிகள் சரிவு கண்டது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு மட்டும் 57 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் 1291 புள்ளிகள் சரிவு கண்டது.
காரணம்:
அயல்நாட்டு நிறுவன முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதாலும் பிஎஸ்இ ஸ்மால் கேப் அதாவது சிறுமூலதன நிறுவனங்களின் பின்னடைவினாலும் இண்டஸ் இந்த் வங்கி, பவர் நிறுவனமான என்.டி.பி.சி போன்றவைகளின் காலாண்டு நிலவரங்கள் திருப்திகரமாக இல்லாததாலும் சந்தையை பாதித்து வருகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஐடிசி
ஆக்சிஸ் வங்கி
சன் பார்மா
ஏஷியன் பெயிண்ட்ஸ்
நெஸ்லே
இறக்கம் கண்ட பங்குகள்:
இண்டஸ் இந்த் வங்கி
ஸ்ரீராம் பைனான்ஸ்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
எம் அண்ட் எம்
ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் ரூ.84.07 ஆக உள்ளது.